அண்ணாமலை படகு ஓட்டிய இடங்கள் இப்போ எப்படி இருக்கு தெரியுமா..? அமைச்சர் சேகர்பாபு சொன்ன விஷயம்!
சென்னை : கடந்த ஆண்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை படகு ஓட்டிய இடங்களில் தற்போது ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்கி நிற்கவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பின்னர் பேசிய அமைச்சர் சேகர்பாபு, மழை நீர் வடிகால் பணிகள் 95% முடிவடைந்ததால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை படகு
கடந்த ஆண்டு நவம்பரில் சென்னை பெருமழையின்போது பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கொளத்தூர் தொகுதி ஜவஹர் நகரில் படகில் சென்று மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதியைப் பார்வையிட்டார். முழங்கால் அளவு கூட தண்ணீர் இல்லாத நிலையில் அவர், விளம்பரத்திற்காக படகில் சென்றதாக திமுகவினர் விமர்சித்தனர்.

சென்னையில் கனமழை
இந்நிலையில், இந்த ஆண்டும் நேற்று முன் தினம் இரவு முதல் சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. திமுக அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை எனினும் சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளன. இந்நிலையில், பாஜக தலைவர்கள் திமுக அரசை விமர்சித்து வருகின்றனர். இந்த வருடமும் சென்னை மக்கள் படகு வாங்கி வைத்து கொள்ளவேண்டும் என நினைக்கிறன் என அண்ணாமலை சமீபத்தில் விமர்சனம் செய்திருந்தார்.

அண்ணாமலை படகு விட்ட இடத்தில்
இந்நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அலுவலகத்தை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், "கடந்த ஆண்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மழைநீர் முட்டிக்குக் கீழே இருந்தபடி ரப்பர் போட் விட்டதைப் பார்த்தோம். இந்த ஆண்டு தற்போது அந்த இடங்களில் 70 அடி ரோடு பகுதியில் ஜவகர் நகரில் உள்ள 6 தெருக்களிலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்கி நிற்கவில்லை. இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறோம்.

95% நிறைவு
சுதந்திரம் பெற்ற பிறகு இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு 950 கி.மீ தொலைவுக்கு மேற்கொண்ட இந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் சென்னையில் ரூ.4,500 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கிட்டத்தட்ட 95% மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்துள்ளன.

இன்னும் 10 நாட்கள்
இன்னும் 10 நாட்கள் மட்டும் மழை தாமதித்திருந்தால் மீதமுள்ள மழைநீர் வடிகால் பணிகளும் முடிவடைந்திருக்கும். முடிவுற்ற பணிகளை செக்சன் செய்யும் வேலைகள் தான் மீதமிருக்கின்றன. மாநகராட்சியிலேயே கடந்த ஆண்டு இடுப்பளவு தண்ணீர் நின்றது. இப்போது அங்கெல்லாம் சிறிதளவு கூட மழைநீர் தேங்கவில்லை.

அங்கும் இனி தேங்காது
இதெல்லாம் முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக ஏற்பட்ட மாற்றங்கள் தான். உட்புறப் பகுதிகளில் சில இடங்களில் மழைநீர் தேங்கி இருக்கிறது. எங்கெல்லாம் மழைநீர் தேங்கியுள்ளது என ஆய்வு நடத்தி வருகிறோம். அந்த பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு, உரிய பாதைகள் அமைக்கப்பட்டு, அடுத்த மழையில் அங்கும் மழைநீர் தேங்காத நிலையை முதலமைச்சர் ஸ்டாலின் உருவாக்கிக் காட்டுவார்" எனத் தெரிவித்தார்.
-
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!











Click it and Unblock the Notifications