இன்று தீபாவளி.. தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் இதுதான்? மீறினால் பாயும் நடவடிக்கை.. உஷார்
சென்னை: இன்று தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இந்த நேரத்தில் தான் அரசு கூறிய அறிவுரையுடன் பட்டாசுகள் வெடிக்க வேண்டும். மாறாக இதனை மீறுவோர் மீது நடவடிக்கை பாய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளியூர், வெளிமாநிலங்களில் உள்ள மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
இன்று காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கிறோம்.

இந்நிலையில் தான் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் இந்த நேரக்கட்டுப்பாடு என்பது அந்தந்த மாநில அரசுகளால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவின் அடிப்படையில் நேரக்கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
இந்த நேரக்கட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என்பது காற்று மாசடைவதாகும். நாள் முழுவதும் பட்டாசு வெடிப்பதால் வெளியேறும் புகை காற்றை மாசுப்படுத்துகிறது. இதனை தடுக்கவே நேரக்கட்டுப்பாட்டு என்பது விதிக்கப்படுகிறது. அதன்படி இந்த தீபாவளிக்கு தமிழ்நாட்டில் 2 மணிநேரம் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மட்டுமே மக்கள் பட்டாசுகளை உரிய பாதுகாப்புடன் வெடிக்க வேண்டும்.
இதனை மீறி பிற நேரங்களில் பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது நடவடிக்கை பாய வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் உஷாராக பாதுகாப்புடன் பட்டாசு வெடித்து தீபாவளியை ஆபத்தில்லாத வகையில் கொண்டாட வேண்டும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications