அதென்ன யு.ஏ.சி.. சென்னையை புரட்டி போட்ட இரவு மழைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? இதை படிங்க
சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்டு இருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்கக்கடல் பகுதியில் திடீரென ஏற்பட்டு உள்ளதால் இந்த மழை பெய்து வருகிறது.
அது என்ன வளிமண்டல மேலடுக்கு சுழற்சி? : சென்னையில் இப்படி திடீரென மழை பெய்வதற்கு காரணமாக அமைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி என்றால் என்ன என்று பலருக்கும் சந்தேகம் எழும் வாய்ப்புகள் உள்ளன.

அதை பற்றி இங்கே சுருக்கமாக விளக்கி உள்ளோம். பொதுவாக வங்கக்கடலின் மேல் பகுதியில் இருக்கும் சூடான காற்று மேலே செல்லும். இந்த காற்று மேலே செல்ல செல்ல காற்று அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படும்.
மேலே செல்ல செல்ல இந்த காற்றின் வெப்பம் குறைந்து வெப்பநிலை குறையும். அதன்பின் இந்த காற்று பொதுவாக ட்ரோபோஸ்பியர் பகுதியில் இருந்து மேலே செல்லும். அதன்பின் இதே காற்று மேற்கு திசையில் நகரும்.
14 கிமீ உயரத்தை அடைந்ததும் இந்த காற்று இப்படி நகர்வதைத்தான் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி என்பார்கள். இந்த காற்று மூலம் வரக்கூடிய மழை மேகங்கள்தான் வங்கக்கடலில் மழையை கொடுக்கும். இதுதான் தற்போது சென்னைக்கு மேலே வந்த நிலையில் மழையை கொடுத்துள்ளது.
எங்கெல்லாம் மழை பெய்கிறது: நேற்று இரவில் இருந்து இன்று அதிகாலை வரை தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து உள்ளது.
ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்துள்ளது.
இது போக செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்களில் இப்போதும் விடாமல் மழை பெய்து கொண்டு இருக்கிறது. கடந்த 2 மணி நேரமாக இங்கு மழை பெய்து கொண்டு இருக்கிறது.
சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகாலையில் இருந்து பெரும்பாலான இடங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது

அதிகாலையில் வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது விடாமல் பெய்யும் மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
3 மணி நேரம்: மேலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில் உள்ள இந்த 9 மாவட்டங்களுக்கு மட்டுமே ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஜூன் மாதத்தில்.. தென்மேற்கு பருவமழை காலத்தில் இப்படி மேகங்கள் நகர்வது அரிதானது. இந்த கரு மேகங்கள் நிலப்பரப்பிற்கு மேலே வரும் முன் வலிமை இழக்க வேண்டும். ஆனால் இவை வலிமை இழக்காமல் தொடர்ந்து இவை நகர்ந்து வருகின்றன.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications