உதயநிதி கேட்டதில் என்ன தப்பு? - எடப்பாடியை விமர்சித்த சசிகலா.. பழிக்குப் பழியா இது?
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை உதயநிதி காட்டியதில் என்ன தவறு உள்ளது என்று வி.கே.சசிகலா, தன் பரப்புரையின் போது கேள்வி எழுப்பியுள்ளார். உதயநிதிக்கும் எடப்பாடி பழனிசாமிக்குமான மோதல் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. உதயநிதி போகின்ற ஊர்களுக்கு எல்லாம் கையில் எடப்பாடி பழனிசாமியின் ஒரு புகைப்படத்தை பிரிண்ட் போட்டு கொண்டு செல்கிறார்.
அதில், எடப்பாடி பழனிசாமி, முதல்வர் பதவி பெறும் போது சசிகலாவின் காலில் விழுந்து வணங்கும் படம் அச்சாகியுள்ளது. 'காலில் விழுந்தவரையே காலை வாரிவிட்டவர் பழனிசாமி' என்று உதயநிதி பரப்புரையில் சுட்டிக்காட்டிப் பேசி வருகிறார்.

இந்த விமர்சித்தால் கடுப்பான எடப்பாடி பழனிசாமி, பிரச்சாரத்தில் இதுவரை இல்லாத அளவு கடுமையான உதயநிதியையும் மு.க.ஸ்டாலினையும் தாக்கத் தொடங்கியிருக்கிறார். 'பால்டாயில் குடித்துவிட்டு அன்றே போய்ச் சேர்ந்திருக்கவேண்டியது. இங்கே இருந்துகொண்டு நம்ம உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறது' எனத் தனிப்பட்ட தாக்குதல் நடத்தினார்.
அடுத்து, 'திமுக ஆட்சியில் கொரோனா வந்ததா? அப்படி வந்திருந்தால் ஸ்டாலினும் போய்ச் சேர்ந்திருப்பார்' என்று விமர்சித்தார். அதற்கு மு.க.ஸ்டாலின், "எனக்கும் மரணம் வரும். அதற்காக நான் பயப்படவில்லை. என்னைப் புதைத்தாலும் எனது திட்டங்களைக் குழி தோண்டி புதைக்க முடியாது' என்று பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்த மோதல் போக்கு குறித்து இரு கட்சியினரும் வாதிட்டு வருகின்றனர். 5 ஆண்டுகாலம் ஆட்சி செய்தவர்கள் தங்களின் சாதனையைச் சொல்லி வாக்குக் கேட்காமல், எடப்பாடி பழனிசாமியின் படத்தைக் காட்டி வாக்கு சேகரிக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு ஏன் வந்தது? என்கிறார்கள் அதிமுகவினர்.
இதற்கு மாறாக, பொதுவெளியில் உள்ள ஒரு படத்தைத்தான் உதயநிதி காட்டுகிறார். அதில் என்ன தவறு உள்ளது. ஆனால், சென்னை மேயர் பிரியாவை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒருமையில் விமர்சிக்கிறார் அது நியாயமா? என்றும் உடன்பிறப்புகள் கேட்கிறார்கள்.
மேலும் ராயபுரம் தொகுதியில் 2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் ஜெயக்குமாரை, அன்றைக்கு ஸ்டாலின் தனிமனித தாக்குதல் நடத்தினார். 2021தேர்தலில் இதே படத்தைக் காட்டினார்கள். அடுத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலும் இதே போல் தாக்கினார்கள். எத்தனை முறைதான் ஒரே படத்தைக் காட்டி வாக்கு கேட்பார்கள்? என்கிறது அதிமுக வட்டாரம்.
திமுகவையும் அந்த ஆட்சியையும் கடுமையாக விமர்சித்து வரும் சசிகலாதான் இந்தப் புகைப்பட சர்ச்சையின் மையமாக உள்ளார். அவர் இதுவரை எந்த வித கருத்தையும் கூறாமல் மெளனமாக இருந்துவந்தார். இப்போது முதன்முறையாக அவரது பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பெயரைக் குறிப்பிடாமல், உதயநிதி பேசுவதில் என்ன தவறு இருக்கிறது என்று சேம் சைட் கோல் போட்டுள்ளார்.
அரசியல் எதிரியைவிட, அதிமுக ஒற்றுமையை வலியுறுத்தி வந்த சசிகலா, இப்போது உதயநிதிக்கு ஆதரவாகப் பேசி இருப்பது இந்த விகாரத்தில், வேறு ஒரு பரிணாமம் கிடைத்துள்ளது. ராஜபாளையத்தில் பரப்புரை செய்த வி.கே.சசிகலா, "பொறுப்புள்ள ஒரு தலைவர் பால்டாயில் பற்றிப் பேசலாமா?" என்று எடப்பாடி பழனிசாமியைச் சாடியுள்ளார்.
அவர், "துணை முதல் அமைச்சர் (உதயநிதி) பிரச்சாரத்தின் போது ஒரு படத்தைத் தூக்கிக் காட்டி, இது கார்பெட் இல்லை. பதவி வாங்குவதற்காகப் படுத்துக் கிடப்பவர் எடப்பாடி பழனிசாமிதான் என்று சொல்லி இருந்தார். அவர் சின்ன பையன். அவர் அரசியலுக்குப் புதுசு. அதற்கு முதல் அமைச்சராக இருந்தவர் (எடப்பாடி பழனிசாமி) என்ன சொல்கிறார் தெரியுமா? 'நீ பால்டாயில் குடித்து படுத்துக்கிடந்த. இது எல்லாம் மக்களுக்குத் தேவையான விஷயமா? பொறுப்புள்ள ஒருவர் இப்படிப் பேசலாமா?
இதுவரைக்கும் முதல் அமைச்சராக இருந்தவர்கள் இவ்வளவு கேவலமாக எல்லாம் பேச மாட்டார்கள். துணை முதல் அமைச்சர் காட்டிய படம் உண்மைதானே? டிவியில் வந்த விஷயத்தைத்தானே அவர் காட்டுகிறார். அதற்கு 'நீ உயிரோடு இருக்கக் கூடாது' என்று சொல்லக் கூடாது. நீங்கள் உங்களைத் திருத்திக் கொண்டிருக்க வேண்டும்.
அதாவது பதவி கொடுத்தவர்களுக்கு நன்றியாக இருந்திருக்க வேண்டும். வீட்டில் ஒரு நாய்கூட நன்றியோடு இருக்கும். ஒரு சின்ன பிஸ்கட் கொடுத்திருந்தால் கூட அது நன்றியாக இருந்திருக்கும். அதுகூட உங்களிடம் இல்லை. நீங்கள் செய்ததை அந்தப் பையன் காட்டுகிறார். காட்டுவதில் என்ன தப்பு? நீங்கள் (எடப்பாடி) செய்ததைக் காட்டுகிறார் அவர். தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயமா இது? தனிப்பட்ட முறையில் நீங்கள் உட்கார்ந்து பேசிக் கொள்ளுங்கள். மக்களுக்கு இதனால் என்ன பலன்?" என்று உதயநிதிக்கு ஆதரவாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் தன் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
எழுதியவர்: கடற்கரய்
-
Mylapore: அக்கா தமிழிசையை ஆளுநராக்குவோம்! இது சட்டசபை தேர்தல்தானே! உதயநிதி ஏன் இப்படி சொல்கிறார்? -
கொளத்தூரில் நேற்று பேசியதை இன்று சேப்பாக்கத்தில் முற்றிலும் மறுத்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி -
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்? இதுதான் காரணம் - எடப்பாடி சொன்ன சீக்ரெட்! -
“எடப்பாடி பழனிசாமி ஒரு மனநல மருத்துவரை பார்த்து பரிசோதிப்பது நல்லது”.. திமுக பெண் தலைவர்கள் தாக்கு -
"எடப்பாடி பழனிசாமி விருப்பப்படி நான் மண்ணுக்கு போகலாம், ஆனால்.." ஸ்டாலின் தந்த பதிலடி -
ஸ்டாலினா? எடப்பாடியா? உண்மையிலேயே யார் 'கெத்து'? ரெக்கார்டு என்ன சொல்லுது? -
எடப்பாடி பழனிசாமிக்கு கொலைவெறி அடங்கவில்லை.. 1979ல் நடந்த சம்பவம்.. ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்! -
“எனக்கும் சிற்றரசுவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு”.. அண்ணா நகரில் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை












Click it and Unblock the Notifications