இசட் பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன? யார் யாருக்கு என்னென்ன பிரிவில் பாதுகாப்பு ?
சென்னை: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அளிக்கப்பட்டு வந்த மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு இன்று முதல் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தான் பொதுமக்கள் மத்தியிலும் பேசு பொருளாக உள்ளது.
இதுவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பும் தரப்பட்டு வந்தது.
ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பின்னர் இசட் பிளஸ்(கருப்பு பூனைப்படை) பாதுகாப்பு இதுவரை எந்த தலைவருக்கும் தமிழகத்தில் வழங்கப்படவில்லை.

உள்துறை அமைச்சகம்
இசட், இசட் ப்ளஸ், எக்ஸ், ஒய், ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் அரசியல் கட்சி தலைவர்களுக்கும், வி.ஐ.பி.களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அளித்து வருகிறது. இசட்பிளஸ் என்பது மிக மிக உயரிய பாதுகாப்பு பிரிவாகும். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், உச்சநீதிமன்ற நீதிபதி, மற்றும் மிகுந்த அச்சுறுத்தல் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மட்டுமே இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்.

இசட், இசட் பிளஸ்
பாதுகாப்பை பொறுத்தவரை இசட் பிரிவுக்கும், இசட் பிளசுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆனால் நம்மில் பலருக்கு இது தெரிவதில்லை. சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், பிளாக் கேட்ஸ் எனப்படும் கருப்பு பூனைப்படைகள் சகிதம் ஒரு தலைவர் வலம் வந்தால் அவர் இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ளார் என தெரிந்துகொள்ளலாம். உதாரணத்துக்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு மாவோயிஸ்ட்களால் அச்சுறுத்தல் உள்ளதால் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்பட்டிருந்தது. இப்போது அதன் படிநிலை குறைக்கப்பட்டது தனிக்கதை.

22 வீரர்கள்
இசட் பிளஸ் பாதுகாப்பில் நாள் ஒன்றுக்கு 36 வீரர்கள் 3 வேளை சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள். இதே போல் இசட் பிரிவில் 22 வீரர்கள் 3 வேளை சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இந்த இரண்டு பிரிவுகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு அதி நவீன துப்பாக்கி மற்றும் நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும்.

வல்லமை
மேலும், ஒய், எக்ஸ், ஆகிய இரண்டு பாதுகாப்பு பிரிவுகளை காட்டிலும் இசட் மற்றும் இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் வீரர்கள் சர்வ வல்லமை படைத்தவர்களாக திகழ்வார்கள். ஆயுதங்களே இல்லாமல் கூட எதிரிகளை சமாளிக்கும் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள். காரணம் அந்தளவு அவர்களுக்கு புடம் போட்ட தங்கமாக கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படும்.

11 வீரர்கள்
இதனிடையே ஒய் பிரிவு பாதுகாப்பு என்பது நாள் ஒன்றுக்கு 11 பேர் கொண்ட வீரர்கள் 3 வேளை சுழற்சி முறையில் பணியில் இருப்பது ஆகும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு கூட ஒய் பிரிவு தான். இந்த பாதுகாப்பை தான் நேற்றிரவு முதல் மத்திய உள்துறை அமைச்சகம் விலக்கிகொண்டது.

2 வீரர்கள்
எக்ஸ் பிரிவு பாதுகாப்பு பிரிவில் 2 வீரர்கள் மட்டுமே இடம்பெறுவார்கள். அமைச்சர்கள் அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு இந்த பாதுகாப்பு தரப்படும். பாதுகாப்பு படைகளிலேயே மிகவும் கடைநிலையில் உள்ள பிரிவு இதுவாகும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications