கரூர் வழக்கில் வளைக்கப்படும் விஜய்.. அவர் சொன்னதை வச்சே செக் வைக்க CBI திட்டம்.. நாளை என்ன நடக்கும்?
சென்னை: கரூர் வழக்கில் நாளை மீண்டும் சிபிஐ விஜயை விசாரணை செய்கிறது. இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த முறை விஜய் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விஜய் மீண்டும் விசாரணை செய்யப்பட உள்ளார்.
கடந்த முறை அவர் அளித்த பதில்கள்.. கட்சியின் மற்ற நிர்வாகிகள் அளித்த பதில்களை ஒப்பிட்டு அதன் அடிப்படையில் விஜய் விசாரணை செய்யப்பட உள்ளார். இந்த விசாரணையை எப்படி நடத்துவார்கள்.. என்னென்ன கேள்விகள் எழுப்புவார்கள் என்று விசாரிப்பார்கள் என்று இங்கே பார்க்கலாம். விஜய் ஏற்கனவே அளித்த பதில்களின் அடிப்படையில் எழுந்துள்ள சந்தேகங்களை மனதில் வைத்து கேள்விகள் கேட்கப்படும்.

விஜய் கடந்த முறை விசாரணை
விசாரணையின் ஒரு கட்டமாக கடந்த வாரம் விஜய் விசாரணை செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 7 மணி நேரம் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணை செய்யப்பட்டார். இந்த விசாரணையில் விஜயிடம் பல முக்கியமான விஷயங்கள் கேட்கப்பட்டன. 100 கேள்விகள் அவரிடம் கொடுக்கப்பட்டது. அதில் டிக் அடிக்கும் வகையில் முதலில் கேள்விகள் கேட்கப்பட்டது. அதன்பின் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. ஆங்கிலத்தில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. அதற்கு விஜய் பதில் அளித்தார்.
அதன்பின் உணவு இடைவேளை கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து மீண்டும் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. விஜய் தொடர்ந்து அனைத்து கேள்விகளுக்கும் ஆங்கிலத்திலேயே பதில்களை அளித்தார்.
இதில் விஜயிடம்.. நீங்கள் ஏன் சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்தீர்கள்? கூட்டம் அதிகமாக இருந்தும் கூட நீங்கள் ஏன் பேச்சை தொடர்ந்தீர்கள்? நீங்கள் சம்பவ இடத்தில் போலீஸ் சொன்னதை கேட்டீர்களா? போலீஸ் உங்களிடம் கேட்ட சில விஷயங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உண்மையா? உங்களுக்கு பேச அனுமதி அளிக்கப்பட்ட நேரம் என்ன? நீங்கள் பேசிய நேரம் என்ன? என்று பல முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டது.
இதற்கு எல்லாம் விஜய் பெரும்பாலும் தமிழக அரசு பாதுகாப்பு கொடுக்கவில்லை, தமிழக அரசு கூட்டத்தை கட்டுப்படுத்தவில்லை, தமிழக அரசு மக்களுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு தரவில்லை என்று மட்டுமே பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் சிபிஐ விசாரணை
மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) முக்கியத்துவம் வாய்ந்த அல்லது சிக்கலான குற்ற வழக்குகளை எவ்வாறு ரகசியமாக விசாரிக்கிறது என்பது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது. ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கும், விசாரணையின் ரகசியத்தன்மையைக் காப்பதற்கும் சிபிஐ பயன்படுத்தும் இம்முறைகள் சட்டபூர்வமான நடைமுறைகளாகும்.
விசாரணைக்கென, நம்பகமான, மூத்த அதிகாரிகள் அடங்கிய ஒரு சிறிய குழுவே நியமிக்கப்படும். கோப்புகள் மற்றும் விவாதங்களுக்கான அணுகல் கசிவுகளைத் தவிர்க்கக் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. physical ஆக உள்ள கோப்புகள் சீலிடப்பட்டு பாதுகாப்பாக சேமிக்கப்படுகின்றன. டிஜிட்டல் பதிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட கணினி அமைப்புகளில் சேமிக்கப்படும்.
ஆவணங்கள், தொலைபேசி அழைப்புப் பதிவுகள், நிதித் தரவுகள், சிசிடிவி காட்சிகள் போன்ற அனைத்து ஆதாரங்களும் ஒரே பாதுகாப்பான இடத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டு, அவற்றிற்கிடையே உள்ள தொடர்புகள் மற்றும் வேறுபாடுகள் கண்டறியப்பட்டன.
பொதுவாக பெரிய கிரைம் வழக்கில் சாட்சிகள் ஒரு திட்டமிட்ட வரிசையில் விசாரிக்கப்படுவர். இதனால், முந்தைய வாக்குமூலங்கள் அதற்கு பிந்தைய வாதங்களால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகின்றன. வாக்குமூலங்கள் ரகசியமாக சரிபார்க்கப்படுகின்றன.
தடயவியல் ஆய்வு சோதனைகள்
சைபர், நிதி, மருத்துவம், கையெழுத்து மற்றும் குரல் பகுப்பாய்வு போன்ற தடயவியல் ஆய்வகங்களின் முடிவுகள், இறுதி முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் சிபிஐயின் நிபுணர்களால் உன்னிப்பாக ஆய்வு செய்யப்படுகின்றன.
தொலைபேசிகள், மின்னஞ்சல்கள், கிளவுட் தரவுகள், நீக்கப்பட்ட கோப்புகள், ஐபி பதிவுகள் மற்றும் மெசேஜிங் ஆப்ஸ்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, வழக்கு தொடர்பான காலவரிசை மற்றும் தகவல் தொடர்பு சங்கிலிகள் மீட்டுருவாக்கம் செய்யப்படும்.
வங்கி கணக்குகள், ஷெல் நிறுவனங்கள், சொத்துப் பதிவுகள், பினாமி பரிவர்த்தனைகள் மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு, வழக்கின் நோக்கம் மற்றும் பலனடைந்தவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்.
சந்தேக நபர்கள் தனித்தனியாக, சில சமயங்களில் பலமுறை, விசாரிக்கப்படுவர். இதில் முரண்பாடுகள், காலவரிசை மற்றும் ஆதார அழுத்தங்கள் பயன்படுத்தப்படும்; ஆனால், உண்மைகள் முழுமையாக வெளிப்படுத்தப்படாது.
ஒவ்வொரு நடவடிக்கை கட்டத்திலும், ஆதாரங்கள் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடியவையாகவும், நடைமுறைகள் சட்டத்திற்கு இணங்குபவையாகவும் இருப்பதை உறுதி செய்ய மூத்த சட்ட அதிகாரிகள் சரிபார்க்கிறார்கள்.
கண்டறியப்பட்ட தகவல்கள் அங்கீகரிக்கப்பட்ட நீதிமன்றங்கள் அல்லது அதிகாரிகளுடன் மட்டுமே பகிரப்படும். ஊடகங்களுக்கான தகவல்தொடர்புகள் மிகக் குறைவாகவும், கவனமாக வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டும் இருக்கும்.
வழக்குகளில் விசாரிக்கப்படும் பெரிய நபர்கள் பொதுவாக தனி அறையில், போதிய வசதிகள் வழங்கப்பட்டு அதற்கு இடையே விசாரணை செய்யப்படும். பொதுவாக விசாரணை ரகசியமாக மேற்கொள்ளப்படும்.
விஜய் விசாரிக்கப்படும் method?
சிபிஐ கரூர் வழக்கில் விஜயை தனியாக வைத்து ரகசிய அறையில் விசாரிக்கிறது. இது ரகசிய விசாரணை method ஆகும். சிபிஐ இந்த ரகசிய விசாரணை முறைகளைப் பயன்படுத்துவதன் முக்கிய நோக்கங்கள்
ஆதாரங்கள் அழிக்கப்படுவதைத் தடுத்தல்.
சாட்சிகளைப் பாதுகாத்தல்.
அரசியல் அல்லது ஊடக அழுத்தங்களைத் தவிர்த்தல்.
நீதிமன்றத்தில் உறுதியான, பலமான வழக்குகளை உருவாக்குதல் போன்ற காரணங்களை மனதில் வைத்து தனி அறையில் விசாரிக்கப்படும்.
வழக்கு சீரியஸ்
கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது. தவெக தரப்பு எதிர்பார்த்ததை விட.. இதில் சிபிஐ கடுமை காட்டி வருகிறது. சிபிஐ அதிகாரிகள் வழக்கில் கடுமையான போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள்.
இதற்கு சில பெரிய அரசியல் வழக்குகள், நாட்டை உலுக்கிய வழக்குகளில் காட்டிய அதே கடுமையான போக்கை இந்த வழக்கிலும் சிபிஐ கடைபிடிப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிபிஐ வசம் போனால்.. வழக்கு அப்படியே அமுங்கிவிடும்.. பொறுமையாகவே நகரும் என்று சிலர் வாதங்களை வைத்தனர். ஆனால் எதிர்பார்க்காத வண்ணம்.. இந்த முறை சிபிஐ மிக "சீரியஸ்" முறையை இந்த வழக்கில் கடைப்பிடித்து வருகிறது.
இதனால் நெருக்கமான சில உறவினர்கள், நண்பர்களிடம் சொல்லி.. தமிழக அரசே கரூர் விசாரணையை தொடர்ந்து நடத்தி இருக்கலாம்.. பிரச்சனை ஏற்பட்டு இருக்காது.. டெல்லி விசாரணை வேறு மாதிரி செல்கிறது.. என்னை தேவையின்றி கோர்த்துவிட்டு விட்டார்கள் என்று விஜய் புலம்பி இருக்கிறாராம்.
-
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த பிக் பாஸ் தினேஷ்.. அதற்கு அவர் சொன்ன காரணம் தான் ட்விஸ்ட் -
ரோடு ஷோவை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டு கோவை திரும்பிய விஜய்.. தவெக தொண்டர்கள் கடும் ஏமாற்றம் -
விஜய்யின் பவுன்சர் கையில் இருக்கும் ‘சூட்கேஸ்’.. என்ன அது? இதுதான் விஷயம்! -
மீண்டும் மீண்டுமா.. பிரசார வேனில் தொங்கிய தவெக தொண்டர்.. பவுன்சர் செய்த காரியம் -
₹8000 கூப்பனால் மகிழும் மக்கள்.. நல்ல தலைவருக்கு இது அடையாளம்! விஜயை வேற மாதிரி வறுத்தெடுத்த ரோகிணி -
அதைத் தாண்டி யாரும் வரக்கூடாது.. திருப்பூர் கூட்டத்தில் திடீரென டென்ஷனான விஜய் -
விஜய்யை பார்க்க வீட்டில் சொல்லாம கொள்ளாம வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்.. 5 பவுன் செயின் திருட்டு! -
ரொக்கமாக சம்பளம் வாங்கி.. வரி கட்டாமல் மறைத்த விஜய்.. வருமான வரித்துறை கேஸ்.. விஜய் மேல்முறையீடு -
திருப்பரங்குன்றம்: அவ்வளவு பஞ்சாயத்து நடந்துட்டு இருக்கு.. விஜய் மட்டும் வாய் திறக்கலையே! -
“அண்ணாமலையை நீக்கினால்தான் பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி சொன்னார்”.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
வில்லிவாக்கத்தில் இழுபறி.. ஆதவ் அர்ஜுனாவுக்கு ஜாக்பாட்? முக்கிய பிரச்சனையே இதுதான்!












Click it and Unblock the Notifications