எங்கு போய் நட்பை தேடுவேன்.. செல்வராகவன் ட்வீட்.. அந்த மோகன்ஜி நட்பு மட்டும்.. நெட்டிசன் குதர்க்கம்

நட்பு குறித்து இயக்குனர் செல்வராகவன் போட்ட ட்வீட் சமூக வலைதளங்களில் அதிக அளவு விவாதிக்கப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நட்பு குறித்து இயக்குனர் செல்வராகவன் போட்ட ட்வீட் சமூக வலைதளங்களில் அதிகஅளவு விவாதிக்கப்படுகிறது. நண்பர்களே தனக்கு இல்லை என்று செல்வராகவன் போட்ட பதிவுக்கு பலரும் நாங்கள் இருக்கிறோம், இன்று முதல் நாம் பிரண்ட்ஸ் ஆகிடலாம் என்று கரம் நீட்டி உள்ளனர்.

இன்றைய நவீன உலகில், பேஸ்புக்கில் 5 ஆயிரம் பிரண்ட்ஸ், ட்விட்டரில் லட்சம் பாலேயர்கள், பேஸ்புக்கில் 10 லட்சம் பேர் பின்பற்றுபர்கள் இருந்தாலும், பிரச்சனை என்றால் உடன் வந்துநிற்பதற்கு பலருக்கும் நல்ல நண்பர்கள் இருப்பது இல்லை. இதற்கு காரணம் நட்புக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்காமல் வேலை வேலை என்று வேலையின் பின்னால் ஓடுவது தான்.

வேலையில் வென்றுவிடும் அவர்கள், ஒருகட்டத்தில் நடுத்தர வயதை எட்டிய பிறகு தான் தோன்றும், நம்மை சுற்றியுள்ள வட்டம் மிகச்சிறியது என்று. நமக்கான நண்பர்கள் மிகச்சிறிய அளவில் கூட இருக்க மாட்டார்கள். நம்முடன் கல்லூரியில், வேலையில், நிறுவனங்களில் நட்பு பாராட்டிய ஒவ்வொருவரையும் கடந்து வந்திருப்போம். ஆனால் யாருடனும் நட்பு நெருங்கிய நட்பாக நீண்டிருக்காது. நடுத்தர வயதை கடந்த பின் புதிதாக யாருடனும் நட்பு பாராட்ட முடியாமல், மிகக்குறுகிய வட்டத்தில் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்போம். அப்போது தான் நட்பு என்ற விஷயத்தை எந்த அளவிற்கு தூரமாகிவிட்டது என்பது நமக்கு புரியும்.

நண்பர்கள் வேண்டும்

நண்பர்கள் வேண்டும்

இந்நிலையில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இன்று ஒரு காலை ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். அதில், உணர்வுப்பூர்வமாக நட்பு குறித்து விவரித்துள்ளார். ஒரு நண்பர்கள் குழுவின் புகைப்படத்தை பகிர்ந்து அவர் கூறியிருப்பதாவது: "அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன்" என்று கூறியுள்ளார்.

நண்பர்கள் வேண்டாம்

நண்பர்கள் வேண்டாம்

செல்வராகவனின் இந்த ட்வீட் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ட்விட்டரில் செல்வராகவன் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிலர் மாற்றுக்கருத்தையும் தெரிவித்துள்ளனர். அவருக்கு பதில் அளித்துள்ள ஒரு நெட்டிசன், "தலைவா நீங்க 23 வருடமாக சினிமாவில் உச்சத்தில் இருப்பதற்கும் அதான் காரணம்... 😂😂😂.. நம்ம நண்பர்கள் கூட இருந்தால் வேலை நடக்காது.." என்று கூறியுள்ளார்.

வருத்தம் வேண்டாம்

வருத்தம் வேண்டாம்

இன்னொரு நெட்டிசன், நல்ல நட்பு என்பது தேட வேண்டியது இல்லை... அது கடலில் இருக்கும் அலை போல.. "கடலில் இருந்து அலைகள் கரைக்கு வந்தாலும் அது மீண்டும் கடலுக்கு திரும்ப செல்லும் அதுபோல நல்ல நட்பு என்பது உங்களை தேடி திரும்ப வரும்.., வருத்தம் வேண்டாம் என் குருவே " என்று கூறியுள்ளார்.

ஜாதி வெறி ஏன்

ஜாதி வெறி ஏன்

மூன்றாவதாக ஒரு நெட்டிசனோ, நாம நண்பர்கள் ஆகிடலாம் பிரச்சனை இல்லை.. ஆனால் ஒரு கண்டிசன் அந்த மோகன் ஜி நட்பை மட்டும் கட் பண்ணணும் ஒகேவா என்று சர்ச்சையாக கருத்து பதிவிட்டுள்ளார். அதற்கு நெட்டிசன் ஒருவர், ஏன் இப்படி ஜாதிவெறி பிடிச்சு அலையிறீங்க என்று பதிலடியும் அந்த நெட்டிசனுக்கு கொடுத்துள்ளனர். மோகன்ஜியை வம்பிழுத்த நெட்டிசனுக்கு பலரும் பதிலடி கொடுத்துள்ளனர்.

நண்பர்களை இழக்க வேண்டாம்

நண்பர்களை இழக்க வேண்டாம்

பெரும்பாலானோர் செல்வராகன் நண்பர்கள் இல்லையே என்று கேட்டதற்கு, நண்பர்களாக நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று உரிமையோடு அழைத்துள்ளனர். நெட்சன் ஒருவர், அண்ணா உன்னை நண்பனாக்க யாருக்கும் அங்கீகாரம் கொடுக்கவில்லை போல அந்த இறைவன்,, ஒருவேளை அந்த இறைவனே உன்னை நண்பனாக ஏற்றுக்கொள்ள காத்திருப்பான் போல ! நல்லமனிதர்கள் எப்போதும் தனித்துதான் இருப்பார்கள் என்று கூறியுள்ளார். செல்வராகவன் சொல்வது போல் எதிர்காலம் மற்றும் பணத்தின் பின்னால் ஓடிவிட்டு எத்தனை பேர் நண்பர்களை இழந்தீர்கள் என்பதை கூறுங்கள் பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+