வக்பு வாரிய சட்டம்.. வந்து விழுந்த கேள்வி.. சட்டென திரும்பிய சீமான்.. நாலே வரியில் கொடுத்த பதில்!
சென்னை: மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று அமலுக்கு வந்துள்ளது. இந்த வக்பு வாரிய திருத்தத்திற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே வக்பு வாரியம் குறித்த கேள்விக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்துள்ள பதில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடந்த வாரம் மத்திய அரசின் வக்பு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்று அது அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும், இந்த வக்பு சட்ட திருத்தத்திற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சீமான்
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் வக்பு வாரியம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அது குறித்து சீமான் கூறுகையில், "தமிழகத்தில் இருந்து லோக்சபாவில் மொத்தம் 39 எம்பிக்கள் உள்ளனர். ஆனால், வக்பு வாரிய சட்டத்திற்கு எதிராக 24 எம்பிக்கள் மட்டுமே எதிர்த்து வாக்களித்துள்ளனர். மற்றவர்கள் வாக்களித்தனரா இல்லை புறக்கணித்தனரா என்பது தெரியவில்லை. அதை யார் கேட்கப் போகிறார்கள்.
புதுச்சேரியைத் தவிர்த்துப் பார்த்தால் 39 எம்பிக்கள் தமிழகத்திற்கு உள்ளனர். அவர்கள் அனைவருமே ஏன் வக்பு வாரியத்திற்கு எதிராக வாக்களிக்கவில்லை. ராஜ்யசபாவிலும் ஜிகே வாசன் வக்பு வாரியத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் வாக்களிக்காமல் வெளியேறி இருக்கிறார். மற்றவர்கள் வாக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை.
வக்பு வாரிய இடம்
வக்பு வாரிய இடம் என்பது அந்த மார்க்கத்தின் மீது பற்று வைத்துள்ளவர்கள், அல்லாவின் பெயரால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அந்த சமயத்தைப் பின்பற்றும் கொடையாளர்கள் கொடுத்த இடம். அதுதான் வக்பு வாரியத்திற்குச் சொந்தமான சொத்துக்கள். அன்னதானம் செய்ய நான் ஒரு லட்சம் பணம், 10 மூட்டை அரிசி கொடுக்கிறேன் என்றால் அதுபோல தான்! அந்த இடத்தில் தலையிடுவது சரியானதா என தெரியவில்லை. ஆட்சியரே முடிவெடுக்கலாம் என்கிறார்கள். ஆட்சியர் யாருடைய கட்டுப்பாட்டில் இருப்பார்கள் என அனைவருக்கும் தெரியும். அதுதான் சிக்கல்
தேவையில்லாத ஒன்று
வக்பு வாரியத்தை இத்தனை காலம் அவர்களே நிர்வகித்து வந்தனர். அதில் என்ன குழப்பம் என்பது புரியவில்லை. எல்லாமே சரியாக இருக்கு இது மட்டும் தான் பிரச்சினை என்றால் ஓகே.. நாட்டில் ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கிறது. அப்படியிருக்கும்போது இது தேவை தானா!
மேலும், இந்த வாரியத்தில் 12 பேரில் 8 பேர் வரை பிற சமூகத்தினர் இருக்கலாம் என்பது சிக்கல். நிலத்தைத் தானமாகக் கொடுத்தது நான் அதை நிர்வகிக்கும் பொறுப்பில் வேறு சமூகத்தினர் உறுப்பினராக இருக்கலாம் என்பதை எப்படி ஏற்க முடியும்.
வறுமை ஒழிந்துவிடுமா?
நாட்டில் இப்போது இருக்கும் பிரச்சினைகளில் இது தேவையற்றது. இப்போது என்ன வக்பு வாரிய சட்டத்தை நிறைவேற்றியவுடன் வறுமை ஒழிந்துவிடுமா.. வேலையின்மை தீர்ந்துவிடுமா.. எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடுமா.. அதைவிட அத்தியாவசிய பல பிரச்சினைகள் இருக்கிறது.. ஆட்சியாளர்கள் அதில் தான் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.
-
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications