கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் வரப்போகும்.. அந்த திட்டம் என்ன? பட்ஜெட்டில் வரும் அறிவிப்பு? பெரிய முடிவு?
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் விரைவில் இடிக்கப்பட உள்ளது. அடுத்த சில வாரங்களில் இங்கே இடிக்கும் பணிகள் தொடங்கலாம். இங்கே வரப்போகும் திட்டம் தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.
திட்டமிட்டபடி கடந்த வருடத்தோடு அங்கே முழுமையாக ஆபரேஷன் முடிந்துவிட்டது. இதனால் அடுத்த சில வாரங்களில் அங்கே பஸ் ஸ்டாண்டை இடிக்கும் பணிகள் நடக்கலாம். வரும் 14ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடுகிறது. பட்ஜெட்டில் துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும், புதிய அறிவிப்புகள் தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கோயம்பேடு தொடர்பான அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.

இதற்காக அந்த பகுதிகளை இடிபாடுகளை மேற்கொள்ள அரசு ஆலோசனை செய்து வருகிறதாம். விரைவில் இதற்கான டெண்டர் விடுபடலாம் என்று கூறப்படுகிறது.முன்னதாக அங்கே பார்க் வரும் என்று கூறப்பட்டது.
ஆனால், கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் உருவாக்கம் (Creation of Public Horticultural Garden, Public Green Spaces and Public Utilities) செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
150 ஏக்கர் கிண்டி ரேஸ்கோர்ஸை சென்ட்ரல் பூங்காவாக மாற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ள நிலையில்.. பெரிய சென்ட்ரல் பார்க் கொண்ட உலகளாவிய நகரங்களின் லிஸ்டில் சென்னையும் இணைந்துள்ளது.
1. நியூயார்க் - சென்ட்ரல் பார்க்
2. லண்டன் - ஹைட் பார்க்
3. பெர்லின் - Tiergarten பார்க்
4. டோக்கியோ - யோயோகி பூங்கா
5. மெக்சிகோ - Chapultepec பார்க் ஆகிய பார்க்குகள் உள்ளன. அந்த வரிசையில் தற்போது சென்னையில் மிகப்பெரிய பார்க் அமைய உள்ளது.
ரேஸ் கிளப் பார்க்: இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் , சென்னை, கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்திற்கு வெங்கடாபுரம், அடையாறு மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களில் 160.86 ஏக்கர் நிலம் 1.4.1945 ஆம் தேதி முதல் 99 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.
அரசிடமிருந்து கிண்டி ரேஸ் கிளப் நிருவாகத்திற்கு வழங்கப்பட்ட இந்த நிலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவைப்படுவதால் தமிழ்நாடு அரசு குத்தகையை ரத்து செய்து, இந்த நிலத்தினை மீளப்பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களின் இதர பயன்பாட்டிற்காக உருவாக்கம் செய்யப்படவுள்ளது.
பார்க் வராது: இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் என்ன கட்டுமானம் கொண்டு வரப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இங்கே அமைக்கப்பட உள்ள திட்டங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. கோயம்பேடுவில் உள்ள பரபரப்பான பேருந்து நிலையம் விரைவில் கலாச்சார, வணிக மற்றும் நிதி மையமாக மாற்றப்படும், ஐடி பார்க் அமைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதே சமயம் ஒரு சில பேருந்துகள், மாநகர பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயங்குகின்றன.
ஈசிஆர் நோக்கி செல்லும் பேருந்துகள், பெங்களூர் செல்லும் பேருந்துகள் தொடர்ந்து கோயம்பேட்டில் இருந்து இயங்கும். இந்த வருட கடைசியில் கொஞ்சம் கொஞ்சமாக கோயம்பேடு பேருந்து நிலைய பயன்பாடு நிறுத்தப்படும்.
இங்கே பல்வேறு திட்டங்கள் வர உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட்டில் குடியிருப்புகள், சில ஐடி நிறுவனங்கள், விளையாட்டு தொடர்பான திட்டங்கள் வர உள்ளன. அங்கே விளையாட்டு அரங்கம், ஹை ரைஸ் கட்டிடம் ஒன்றும் வர உள்ளது.
ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட் காலியாகிவிட்டது. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையமும் மூடப்பட உள்ளது. ஐடி நிறுவனம்; இந்த நிலையில்தான் இங்கே அமைக்கப்பட உள்ள திட்டங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோயம்பேடுவில் உள்ள பரபரப்பான பேருந்து நிலையம் விரைவில் கலாச்சார, வணிக மற்றும் நிதி மையமாக மாற்றப்படும். மெட்ரோ இணைப்புடன், நிரந்தர திறந்தவெளி சந்தையை உருவாக்க உள்ளனர். மிகப்பெரிய ஃபுட் பிளாசா மற்றும் கிராஃப்ட் பஜார் மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கான கட்டிடங்களை உருவாக்க CMDA திட்டமிட்டுள்ளது.
16 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனியார் பேருந்து நிலையம் பூங்காவாக மேம்படுத்தப்படும். பிரம்மாண்ட ஐடி நிறுவனம் அமைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சில வாரங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் . அங்கே நில ஆய்வு தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications