60க்கு எஸ்.. 44க்கு நோ.. என்ன டபுள் கேமா ஆடுறீங்க? உறுதியாக சொன்ன எடப்பாடி.. உண்மையா கெத்துதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவில் 44 எம்எல்ஏக்களுக்கு தேர்தலில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.. முதல்வர் பழனிசாமியின் இந்த முடிவிற்கு பின் என்ன காரணம் என்று விவரங்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

    ஓரம்கட்டப்பட்ட 44 MLA-க்கள்.. உறுதியாக சொல்லிவிட்ட எடப்பாடி.. இதான் காரணமா?

    தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி மிகவும் ஸ்மார்ட்டாக செயல்பட்டு வருகிறார். கட்சிக்கு வெளியேயும், உள்ளேயும் எதிர்ப்புகளை சமாளித்து முறையான பிளானுடன் காய்களை நகர்த்தி வருகிறார்.

    இந்த சட்டசபை தேர்தலுக்காக இதுவரை 177 வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக வெளியிட்டு இருக்கிறது. இதில் பெரும்பாலும் அமைச்சர்கள் எல்லோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அமைச்சர்க்களாக இருக்கும் 35 பேருக்கு மீண்டும் தேர்தலில் அதிமுக வாய்ப்பு கொடுத்து உள்ளது.

    வெற்றி வாய்ப்பு

    வெற்றி வாய்ப்பு

    இந்த தேர்தலில் 44 எம்எல்எக்ளுக்கு தேர்தலில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இவர்களுக்கு வெற்றிவாய்ப்பு இல்லாததுதான் காரணம் என்று கூறப்பட்டாலும் அதற்கு பின் வேறு சில காரணங்களும் இருக்கிறதாம். இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகளிடம் பேசிய போது பல முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.. அதிமுக வேட்பாளர் தேர்வு நீங்கள் நினைப்பது போல ஒரே இரவில் எல்லாம் செய்யப்படவில்லை.

    திட்டங்கள்

    திட்டங்கள்

    பல நாட்களாக இதற்காக திட்டங்களை வகுத்தனர். 4 முக்கிய அமைச்சர்களும், துணை முதல்வரும், முதல்வரும் இதற்காக தனி தனியாக லிஸ்டுகளை உருவாக்கினார்கள். அதன்பின் அனைத்தையும் கிராஸ் செய்து பார்த்து முதலில் எல்லோருக்கும் விரும்பும் வேட்பளார்களை டிக் அடித்தனர். அதன்பின் இழுபறியில் இருக்கும் வேட்பாளர்கள் பற்றி பேசி ஆலோசனைகள் செய்து கடைசியில் முடிவிற்கு வந்தனர்.

    முடிவு

    முடிவு

    இதில் சில வேட்பளார்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க கூடாது என்பதில் இபிஎஸ் ஓபிஎஸ் இரண்டு பேருமே உறுதியாக இருந்தனர். ஆட்சிக்கு வந்தால் நிலையாக இருக்க வேண்டும்.. யாரும் சசிகலா பக்கம் தாவ கூடாது. அதனால் சந்தேகமாக இருக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டாம் என்பதிலும் உறுதியாக இருந்துள்ளனர்., என்கிறார் அதிமுக நிர்வாகி ஒருவர்.

    ரகசியம்

    ரகசியம்

    இன்னொரு அதிமுக நிர்வாகியோ, சசிகலா தமிழ்நாடு வந்த போது அவரிடம் சிலர் ரகசியமாக பேசி உள்ளனர். இது எல்லாம் முதல்வருக்கு தெரியும் . அவர்களை எல்லாம் லிஸ்ட் எடுத்து, அவர்களுக்கு இந்த முறை வாய்ப்பை மறுத்துள்ளார். இரண்டு பக்கமும் ஆதரவாக செயல்படுவது போல காட்டிக்கொள்ளும் யாருக்கும் முதல்வர் வாய்ப்பு கொடுக்கவில்லை என்கிறார்கள்.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    அதோடு ஓபிஎஸ் இபிஎஸ் இரண்டு பேருமே இதில் ஒருமித்த கருத்தோடுதான் இருந்துள்ளனராம்.. இன்னொரு முறை தகுதி நீக்கம், வழக்கு என்றெல்லாம் சுற்ற முடியாது... நம்பகமான ஆட்களை மட்டுமே தேர்வு செய்வோம். சசிகலா பக்கம் செல்ல வாய்ப்பு இருக்கும் யாரையும் தேர்வு செய்ய வேண்டாம்.

    ஒரே முடிவு

    ஒரே முடிவு

    அதேபோல் சசிகலா கேம்பில் கடந்த வருடம் வரை நெருக்கமாக இருந்தவர்களையும் மீண்டும் தேர்வு செய்ய வேண்டாம் என்று இரண்டு பேருமே உறுதியாக இருந்துள்ளனர். வேட்பாளர் தேர்வில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே சில கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட இந்த ஒரு விஷயத்தில் இரண்டு பேருக்குமே ஒரே முடிவுதான் இருந்துள்ளது.

    ஒதுக்கினார்கள்

    ஒதுக்கினார்கள்

    யாருக்கு வேண்டுமானாலும் வாய்ப்பு கொடுக்கலாம்.. ஆனால் அவங்களுக்கு மட்டும் வாய்ப்பு தர வேண்டாம். சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள், நிர்வாகிகளை மொத்தமாக ஓரம்கட்டியுள்ளனர். இதற்கு பின்பதான் 44 பேரை ஒதுக்கிவிட்டு, 60 புதிய நபர்களுக்கு முதல்வர் டிக் அடித்தார் முதல்வர் என்கிறார்கள். இவர்களை முறையாக அடையாளம் கண்டு முதல்வர் ஓரம்கட்டியதாக கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+