Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராத்திரி ரூமில் என்ன நடந்தது.. சித்ரா கழுத்தில் காயமே இல்லை.. ஒரே மர்மம்.. வெளிவரும் பரபர தகவல்கள்

sy: நடிகை சித்ராவின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சற்று நேரத்தில் வர உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சித்ராவின் உடலை இன்னும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வெளிவராத நிலையில், சம்பவத்தன்று இரவு என்ன நடந்தது என்பது குறித்த பல தகவல்கள் யூகங்களின் அடிப்படையில் வெளியாகி கொண்டிருக்கிறது!

சித்ராவின் மர்ம மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி விட்டு வரும் நிலையில், இதுகுறித்த பகீர் தகவல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சித்ராவின் கடைசி இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸை பார்த்து ரசிகர்கள் கதறி அழுதபடியே உள்ளனர்.. தற்கொலைக்கு முன்புதான் இந்த ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.. நடிகை சரண்யாவுடன் ஒரு நிகழ்ச்சியின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் வீடியோவைதான் அவர் பதிவிட்டுள்ளார். அதில் சித்ரா போனில் ஹேமந்த்துடன் பேசிக்கொண்டிருக்கிறார்.

மறுப்பு

மறுப்பு

இது பற்றி சரண்யா சொல்லும்போது, செட்டில் தன்னுடைய கல்யாணம், அதற்காகும் செலவுகள், புதிய வீடு பற்றியெல்லாம் பேசினாராம்.. அதை பேசி முடித்துவிட்டு அவரது காரில் வரும்படி சரண்யா கூப்பிட்டாராம்.. ஆனால், பக்கத்திலேயே ஒரு ஹோட்டலில் தங்கி இருப்பதால், வர முடியாது என்று சொல்லி சித்ரா மறுத்துவிட்டாராம். ஆனால் தன்னுடன் ஹேமந்த் தங்கி இருப்பதை அவரிடம் சொல்லவில்லையாம்.

 பேப்பர்ஸ்

பேப்பர்ஸ்

அதுமட்டுமல்ல, ஷூட்டிங்கில் இருந்தபோது போனில் பதற்றமாகத்தான் பேசி கொண்டிருந்தாராம்.. வழக்கமாக சித்ரா அப்படி இருக்க மாட்டாராம்.. படபடப்புடன் இருந்துள்ளார்.. மேலும், அவரது உதவியாளரிடம் ஏதோ பேப்பர்ஸ் எடுத்துவர சொல்லி கையெழுத்து போட வேண்டும் என்றும் சொல்லி கொண்டிருந்தாராம்.

சந்தேகம்

சந்தேகம்

அதேபோல நடிகை வனிதாவும் தன்னுடைய சந்தேகத்தை வலுவாக எடுத்து வைத்துள்ளார்.. "சித்து மரணத்தில் என்னவோ தப்பாக இருக்கிறது.. அவர் ஸ்டார் மியூஸிக் ஷூட்டிங்கில் இருந்தார்.. பக்கத்து செட்டில் கலக்கப் போவது யார் நிகழ்ச்சியில் நானும் இருந்தேன். 2 பேரும் நைட் 2.30 மணிக்கு ஒரே நேரத்தில்தான் கிளம்பினோம்.. என்னால எதையுமே நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார்.

 அரசல்புரசல்

அரசல்புரசல்

இதனிடையே மற்றொரு சந்தேகமும் எழுந்து வருகிறது.. பிப்ரவரி 10-ம் தேதி ஊரையே அழைத்து கல்யாணம் செய்ய முடிவெடுத்திருந்த நிலையில், எதற்காக இவர்கள் 2 மாதத்துக்கு முன்பு பதிவு திருமணம் செய்து கொண்டார்கள்? என்ற கேள்வியும் எழுகிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக, சம்பவத்தன்று இரவு என்ன நடந்தது என்பது குறித்த அரசல்புரசல் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 பதிவு திருமணம்

பதிவு திருமணம்

சித்ராவின் இந்த பதிவு திருமணம் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி நடந்ததாம்.. முறைப்படி கல்யாணம் நடக்காமல், ஒரே ரூமில் தங்க கூடாது என்று சித்ராவின் அம்மா கண்டித்துள்ளதாக தெரிகிறது.. மேலும் ஹேமந்த் மீதும் சில குற்றச்சாட்டுகளையும் அவர் சித்ராவிடம் தெரிவித்துள்ளார். இதனாலும் சித்ரா கடந்த ஒரு மாதமாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார்.

கணவர்

கணவர்

இதை பற்றிதான் தன் அம்மாவிடம் செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாராம்.. அம்மாவுக்குதான் கடைசியாக ஒரு வாட்ஸ்அப் மெசேஜையும் அனுப்பி உள்ளார்.. அதில் "என் கணவரை விட மாட்டேன்" என்று குறிப்பிட்டிருந்தாராம். விடிகாலை 3 மணிக்கு ஹேமந்திடம், காரில் முக்கியமான பொருள் ஒன்றை மறந்து வைத்துவிட்டேன், எடுத்து வாங்க என்று சொல்லி அனுப்பினாராம்.. அதை எடுக்க ஹேமந்த் வெளியே சென்றுவிட்டு திரும்பும்போதுதான் சித்ரா ரூம் உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாம்.

சடலம்

சடலம்

இதற்கு பிறகுதான் ஓட்டல் ஊழியர் கணேசன் மூலம் இன்னொரு சாவியை வைத்து உள்ளே நுழைந்து பார்த்துள்ளார்.. அப்போதே சடலமாக இருந்துள்ளார் சித்ரா... அதாவது 15 நிமிடங்களுக்குள் எல்லாமே நடந்து முடிந்துவிட்டிருக்கிறது. ஹேமந்த், கணேசன் 2 பேரும் சேர்ந்துதான் சித்ரா சடலத்தை இறக்கி படுக்கையில் வைத்துள்ளனர். அப்போது அவருக்கு உயிர் இருக்கிறது என்றுதான் நினைத்திருக்கிறார்கள்.. அதனால்தான் முதலில் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளனர்.. அவர்கள் வந்து சித்ராவை செக் செய்து பார்த்தவிட்டு, உயிர் போய்விட்டது என்று சொன்னபிறகுதான், ஹேமந்த் போலீசுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி உள்ளனர்.

கார்

கார்

சித்ரா குளிக்க போவதால், தன்னை வெளியே இருக்கும்படி சொன்னதாக ஹேமந்த் போலீசாரிடம் சொன்னதாக கூறப்பட்டது.. ஆனால், ஒருபொருளை காரில் மறந்து வைத்துவிட்டேன், எடுத்து வாங்க என்று சித்ரா ஹேமந்தை வெளியே அனுப்பி வைத்ததாக இப்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளதால், எது உண்மையான தகவலா என்று தெரியவில்லை.

கதவு

கதவு

அதுமட்டுமல்ல, சித்ரா தங்கியிருக்கும் ரூமுக்கு சாவி கிடையாதாம்.. வெறும் கார்டுதான்.. அந்த ரூம் கதவும் ஆட்டோமெடிக்காக லாக் என்று சொல்லும்போது, தானாகவே மூடிக் கொள்ளக்கூடியது.. ஆனால், சித்ராதான் உள்பக்கமாக கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டதாக ஹேமந்த் சொல்கிறாராம்.. இதுவும் குழப்பமாக இருக்கிறது.

 ரத்த காயங்கள்

ரத்த காயங்கள்

சித்ராவின் கன்னத்தில் 2 இடங்களில் ரத்த காயங்கள் இருந்தது பற்றி போலீசார் சொல்லும்போது, தூக்கில் தொங்கும்போது வலி தாங்காமல் கைகளை வைத்து புடவையை அகற்ற உதறியபோது, அவரது கையில் இருந்த நகங்கள் அவரது கன்னத்திலேயே பட்டிருக்கலாம் என்றும், நகத்தில் அதற்கான சதை பகுதிகள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால், தூக்கு போட்டால் கழுத்தில் காயங்களை காணோமே, அதற்கான தடயங்களைகூட காணோமே என்ற கேள்விகள் பரவலாக எழுந்து வருகிறது.

நாக்கு

நாக்கு

அதுமட்டுமல்ல, தூக்கில் தொங்கினால் தோலின் நிறம் மாறும், நாக்கு வெளியே தள்ளப்பட்டிருக்கும், இப்படி அதற்கான எந்த அறிகுறியுமே காணப்படவில்லையே என்ற சந்தேகங்களும் கிளம்பி கொண்டிருக்கின்றன.
இன்னும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வெளிவராத நிலையில், இதுபோன்ற பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+