தங்கத்திற்கு அடிமையாகும் Gen Z தலைமுறை! ஆட்டிப் படைக்கும் சீன கலாச்சாரம்!
சென்னை: தங்கத்தின் விலை ஏறுவதற்கு Gen Z தலைமுறைதான் காரணம் என்கிறார் பங்குச்சந்தை ஆலோசகர் சோம. வள்ளியப்பன்.
எங்குப் பார்த்தாலும் அக்ஷய திருதியை விளம்பரங்கள் களைக்கட்டத் தொடங்கி இருக்கிறது. தங்கம் வாங்குங்கள், வைரங்கள் வாங்குங்கள் என்று திரை நட்சத்திரங்கள் ஆளுக்கு ஒரு கடைக்கு முன்னதாக நின்று கொண்டு மக்களை உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தங்கம் எனது இந்தியாவைப் பொறுத்தவரை ஏழைகளின் எட்டாக்கனியாக மாறி இருக்கிறது. முன்பு எல்லாம் மாதத்திற்கு ஒருமுறை விலை ஏறும். இப்போது எல்லாம் நொடிக்கு ஒரு விலை என்ற நிலையை நோக்கி விர்ர்ர்ர்ர் என்று விண்ணை எட்டி வருகின்றது.
இன்றைய கணக்குப்படி ஒரு சவரன் கிட்டத்தட்ட 6,650 என்ற அளவை எட்டி உள்ளது. அதற்குப் பிறகு செய்கூலி, செய்யாத கூலி என்று ஒரு பில் வேறு போடுவார்கள்.
அந்த விலையைப் பார்த்தால் தலையே சுற்றிவிடும். அப்புறம் அதைக் குறைக்க மேனேஜரை பார்க்க வேண்டும். அவர் ஒரு பர்சண்டேஜ் குறைப்பார். அதற்கு அப்புறம் அவருக்கு மேல் உள்ள அதிகாரி அரை பர்சண்டேஜ் குறைப்பார்.
இப்படி, தங்கம் வாங்குவது என்பதே ஏதோ ரேசில் கார் ஓட்டுவதைப் போலச் சாகசமான விசயமாக மாறிப்போய்விட்டது.
இந்தளவுக்குத் தங்கத்தின் விலை விண்ணை முட்ட என்ன காரணம்? அந்த ரகசியத்திற்குப் பதில் சொல்கிறார் முதலீட்டு ஆலோசகர் சோம. வள்ளியப்பன்.
அவர் சொல்லும் தகவலை எல்லாம் கேட்டால், இனிமே தங்கம் வாங்குவதே முடியாது போல என்ற முடிவுக்கு மிடில் கிளாஸ் மக்கள் வந்துவிடுவார்கள்.

அந்தளவுக்குத் தங்கத்திற்குள் ஒளிந்துள்ள உலக அரசியலை புட்டு புட்டு வைக்கிறார் இவர்.
தங்கத்தின் விலை ஏற்றம் பற்றி சோம. வள்ளியப்பன் என்னதான் சொல்கிறார். தவறாமல் அப்படியே படியுங்கள்.
"மற்ற முதலீடுகள் எதுவும் பலனளிக்காத போதுதான் தங்கத்தின் விலை வழக்கமாக உயரும். பங்குச்சந்தை முதலீடு நிலைத்தன்மையற்று இருக்கிறது என்றால் தங்கம் விலை உயரம். உலகப் பொருளாதார நிலை சரியாக இல்லை என்றால் கூட உயரம்.
ஆனால், அந்த நிலைமை எதுவும் இப்போது இல்லை. அப்படி இருந்தும் விலை உயர்ந்து கொண்டே உள்ளது தங்கம். அது ஏன் என்று ஆராய்ந்தால், ஒரு விசயம் தென்படுகின்றது. அதுதான் China gold beans Fever.
இதற்கு 2 காரணங்கள் உள்ளன. சீனாவின் செண்ட்ரல் பேங்க்தான் (பீப்பிள்ஸ் பேங்க்) முதல் காரணம். உலகத்திலேயே அன்னிய செலாவணி கையிருப்பு வைத்துள்ள நாடுகளில் சீனா முக்கியமான நாடு. அதாவது 2021 வரை சீனா 10110 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்க டாலரை வைத்திருந்தது. அது 2023இல் 720 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. அந்த நாடு டாலரை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வந்துள்ளது.
அதற்குப் பதிலாகத் தங்கத்தின் முதலீட்டை உயர்த்த ஆரம்பித்திருக்கிறது. இந்த மாற்றம் சீனாவில் மட்டும் நடக்கவில்லை. டர்க்கி போன்ற நாடுகள் கூட தங்கத்தில் முதலீடு செய்வதை அதிகரித்துள்ளனர்.
சீனாவில் அரசு தங்கத்தின் முதலீட்டை அதிகரிக்கத் தொடங்கிய பிறகு, சீனர்களும் தங்கத்தை வாங்குவதை அதிகப்படுத்தி உள்ளனர்.
குறிப்பாக Gen Z என்று சொல்லப்படும் தலைமுறை. அதாவது 27 வயதுக்குக் குறைவாக உள்ளவர்களை Gen Z என்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர்.
இந்தியாவில் systematic investment plan என்று சொல்வோம். அதாவது தங்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி சேர்ப்பது. அதைப் போன்றுதான் சீனர்கள் தங்கத்தை சிறுகச் சிறுக வாங்கி சேர்த்து வருகின்றன. அதனால் தங்கத்தின் விலையானது உயர்ந்து வருகிறது.
சீனர்கள் தங்க முதலீட்டுக்கு வந்தது கடந்த 2 ஆண்டுகளாகத்தான். அங்கே பங்குச்சந்தை முதலீடு கடந்த 2 வருடங்களாகச் சரியாக இல்லை. கிட்டத்தட்டப் பங்குச்சந்தை முதலீடு 40% வரை குறைந்துள்ளது. ஆகவே, பலரும் தங்கத்தை நாடுகிறார்கள்.

ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யலாம். ஆனால் ரியல் எஸ்டேட்டில் சில ஆண்டுகளாக ஊழல் அதிகரித்துவிட்டது. எனவே மக்கள் அதை நம்புவதில்லை.
உலகளவில் அதிக அளவில் தங்கத்தை வாங்கும் நாடாகச் சீனா உள்ளது. அது 2வது இடத்தில் உள்ளது. 20% தங்கத்தைச் சீனாவே வாங்கிக் கொள்கிறது.
இந்த அலை அடங்க சில ஆண்டுகள் ஆகலாம். அதுவரை இந்த நிலைமையே நீடிக்கும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications