செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டதே திமுகதானே! இப்போ தியாகம் என்பதா? சீமான் சரமாரி அட்டாக்
சென்னை: செந்தில் பாலாஜி தியாகம் செய்துவிட்டா சிறைக்கு சென்றார் என்று கேள்வி எழுப்பியுள்ள சீமான், அவர் மீது வழக்கு போட்டதே திமுகதான் என்றும் செந்தில் பாலாஜி செய்தது தியாகம் என்றால் நாட்டிற்காக சிறை சென்றவர்களை எந்த பட்டியலில் சேர்ப்பது எனவும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ள நிலையில், செந்தில் பாலாஜியின் தியாகம் பெரிது என்று முதல்வர் முக ஸ்டாலின் கூறியிருந்தார். இது குறித்து கடுமையாக விமர்சித்துள்ள சீமான், செந்தில் பாலாஜி செய்தது எல்லாம் தியாகமா? எனக் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

செந்தில் பாலாஜி தியாகம் செய்துவிட்டா சிறைக்கு சென்றார். செந்தில் பாலாஜியை ஸ்டாலின் பாராட்டியது பற்றி கேட்கிறீர்கள்.. திருடுவது, லஞ்சம் வாங்குவது, டாஸ்மாக் சரக்கில் கமிஷன் வாங்குவது.. 10 ரூபாய் கூட்டுவது.. நேரம் கடந்து விற்பனை செய்வது.. கள்ளச்சரக்கு ஓட்டுவது.. இது எல்லாம் தான் தியாகத்தில் வருகிறது. செக்கிழுத்து எனது பாட்டன்கள் சிறையில் இருந்தார்கள்.. செந்தில் பலாஜி செய்வது எல்லாம் தியாகம் என்றால் அதற்கு என்ன சொல்வது?
இந்த நாட்டில் மண்ணை அள்ளி விற்பது.. மலையை குடைந்து விற்பது.. சாராயம் காய்ச்சுவது இது எல்லாம்தான் தியாகத்தில் வருகிறது. வீர திர செயல்களிலும் பெருமை மிக்க செயல்களிலும் வருகிறது. இந்த வழக்கை போட்டது யார்? திமுகதான்.. உள்ளே வைத்தது யார்? அதிமுக ஆட்சியில் நீங்கள் (திமுக) போட்ட வழக்கில்தான் அவர் உள்ளே போய்விட்டு வந்துள்ளார். உள்ளே அனுப்புனதும் நீங்கதான்..
இப்போ வருக வருக! உங்கள் தீரச்செயல்கள்.. வீரச்செயல்கள் என்று சொல்கிறீர்கள். உங்க கட்சியில் இருந்தால் வீர தீரச்செயல்.. அடுத்த கட்சியில் இருந்தால் அது ஊழல் குற்றச்சாட்டு ஆகிவிடும்.. செந்தில் பாலாஜியை மிகக் கடுமையாக விமர்சித்தவர் மு.க ஸ்டாலின்.. அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு எந்த தடையும் இல்லை என்கிறார்கள். ஏனெனில் அவரை உடனேயே அமைச்சராக்கிவிடுவார்கள். யார் அதிகம் வசூலித்து கப்பம் கட்டுகிறார்களோ.. அவர் நல்ல அமைச்சர்தானே" என மிக காட்டமாக பேசினார்.
முன்னதாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின், ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது.
அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது! என்று கூறியிருந்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications