ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சொன்னது என்ன? தலைமை நீதிபதி உத்தரவிட்டது என்ன?
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. உச்சநீதிமன்றத்தில் கடந்த முறை நடைபெற்ற விசாரணையின் போது ஆளுநர் ரவி அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துகிறார் என்கிற வாதத்தை தமிழ்நாடு அரசு முன்வைத்தது.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்திருந்தார். 2020-ம் ஆண்டு முதல் பல மசோதாக்கள், கோப்புகள் ஆகியவற்றுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒப்புதல் தரவில்லை. இதனையடுத்து ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் வைத்துள்ளார். தண்டனைக் காலத்துக்கு முன்பு விடுவிப்பதற்கான 54 கைதிகளின் கோப்புகளும், தமிழ்நாடு அரசுப் பணியாளருக்கான 14 பதவிகளில் 10 நியமனங்களுக்கான கோப்புகளும் ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ளன. " கூடிய விரைவில்" என்கிற வார்த்தையை ஆளுநர் தவறாகப் பயன்படுத்த முடியாது. ஆளுநர் என்ற அதிகாரத்தையும் அந்த பொறுப்பையும் ஆர்.என்.ரவி முறைகேடாகப் பயன்படுத்துகிறார் என வாதிடப்பட்டது.
இந்த வாதங்களைத் தொடர்ந்து, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது. அரசமைப்பு சட்டப்பிரிவு 200ன் படி மசோதாக்களுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது. அத்துடன் ஆளுநரின் செயலாளர் மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளது.
இதனிடையே இன்றைய வழக்கு விசாரணைக்கு முன்னதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தம் வசம் இருந்த 10 நிலுவை மசோதாக்களை தமிழ்நாடு சட்டசபைக்கு அனுப்பி வைத்தார். தமிழ்நாடு அரசும் சட்டசபை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. தற்போது 10 மசோதாக்களுக்கு ஆளுநர் மீண்டும் ஒப்புதல் தருவாரா? அல்லது திருப்பி அனுப்புவாரா? இதில் உச்சநீதிமன்றம் தலையிடுமா? என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
-
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
வங்கி கடன் செட்டில்மென்ட்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications