ரஜினியிடம் சசிகலா சொன்னது என்ன தெரியுமா? திடீரென மீட்டிங் போட்ட கராத்தே தியாகராஜன்.. வெளியான பின்னணி
சென்னை: நடிகர் ரஜினிகாந்தை சசிகலா சந்தித்த போது என்ன பேசினார் என்பது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு அரசியலில் மீண்டும் எப்படியாவது லைம் லைட்டிற்கு வர வேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக இருக்கிறார். அதிமுகவிற்குள் எப்படியாவது நுழைந்து விட முடியாதா என்பதற்காக பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார் சசிகலா.
இதற்காக பாஜகவின் அண்ணாமலை, பாமக அன்புமணி ஆகியோரிடம் சசிகலா அப்பாயின்ட்மெண்ட் கேட்டு இருப்பதாக நேற்றே நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த நிலையில்தான் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை சசிகலா சந்தித்தார்.

ரஜினிகாந்த் சசிகலா
17 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. பாஜக மேலிடத்திற்கு இதற்கு பின் தூதுகள் சென்றதாக கூறப்படுகிறது. இதில் டெல்லி மேலிடத்திற்கு தன்னை குறித்து நன்றாக நல்ல விஷயங்களை சொல்லும்படி ரஜினி தரப்பிடம் சசிகலா கேட்டுக்கொண்டதாக செய்திகள் வந்தன. இந்த சந்திப்பு முடிந்து சில நாட்களே ஆகி உள்ள நிலையில் நடிகர் ரஜினியை கராத்தே தியாகராஜன் திடீரென சந்தித்திருக்கிறார்.

எத்தனை மணி நேரம்?
ரஜினி - கராத்தே தியாகராஜன் இடையிலான இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்துள்ளது. தமிழக அரசியல் குறித்து பல்வேறு விசயங்கள் இந்த சந்திப்பில் அலசப்பட்டுள்ளன. ரஜினி - சசிகலா சந்திப்பு பற்றி தியாகராஜன் ரஜினியிடமே நேரடியாக விசாரித்திருக்கிறார் என்று தகவல்கள் வருகின்றன.

தியாகராஜன் கேள்வி
இரண்டு பேரும் சந்தித்துக்கொண்டீர்களே.. என்ன பேசப்பட்டது. சசிகலா உங்களிடம் என்ன பேசினார் என்று ரஜினியிடம் தியாகராஜன் கேட்டதாக தகவல்கள் வருகின்றன. அப்போது, எடப்பாடி தனக்கு துரோகம் செய்துவிட்டதாக சசிகலா நினைக்கிறார். தன்னை எல்லோரும் ஏமாற்றி விட்டதாக சசிகலா என்னிடம் வருத்தப்பட்டார்.

சசிகலா துரோகம்
அவரது நினைப்பு சரிதான் என்று கராத்தே தியாகராஜனிடம் சசிகலா பற்றி ரஜினிகாந்த் சொல்லி இருக்கிறாராம். சசிகலா குறித்து ரஜினி வருத்தமாக பதிவு செய்ததாக தெரிகின்றது. மொத்தத்தில் சசி - ரஜினி மீட்டிங்கில் இபிஎஸ் பற்றி பேசியது மட்டும் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதையடுத்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் குறித்து கராத்தே தியாகராஜனிடம் ரஜினி கேட்டிருக்கிறார்.

ரஜினி மக்கள் நீதி மய்யம்
அதற்கு, வெற்றியோ தோல்வியோ அரசியலுக்கு வந்துவிட்டார் கமல். ஆனா, சொன்னதை ரஜினி செய்யாமல் விட்டுவிட்டாரே, அவர் வாய்ப்பை தவற விட்டுவிட்டார் என மக்களிடம் ஒருவித கருத்து பரவலாக இருக்கிறது என தியாகராஜன் சொல்லியதாக கூறப்படுகிறது. மேலும், பாஜக, திமுக அரசியல் குறித்தும், ஆட்சி நிலவரம் குறித்தும் ரஜினி கேட்டு தெரிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications