மெசேஜ் வந்துச்சு.. ஆனால் ரூ.1000 பணம் வரல.. ஏகப்பட்ட பெண்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை? என்ன செய்வது?
சென்னை: மகளிர் உரிமைத் திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு, உரிமைத்தொகை பெறுவதற்கான குறுஞ்செய்தி மொபைலுக்கு வந்தும், வங்கிக் கணக்கில் பணம் ஏறவில்லை என்ற புகார்கள் ஆங்காங்கே எழுந்துள்ளன. எஸ்.எம்.எஸ் வந்தும், வங்கி கணக்கில் பணம் வராதவர்கள் என்ன செய்வது என அரசு அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு ரூ.1000 பணம் அவர்களின் வங்கிக் கணக்கில் அனுப்பப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதியான நேற்று இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், அதற்கு முந்தைய நாளில் இருந்தே, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கும் பணிகள் தொடங்கி இருந்தன.

ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்ப உறுப்பினர்கள்,
ஐந்து ஏக்கருக்கும் அதிகமாக நன்செய் அல்லது 10 ஏக்கருக்கும் அதிகமான புன்செய் நிலம் வைத்திருப்போர், ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட் மின்சாரத்தைவிட அதிகமாகப் பயன்படுத்தும் குடும்பங்கள், மத்திய - மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் ஊழியர்கள், சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற வாகனங்களை வைத்திருப்பவர்கள், ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் பெறுவோர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி உடையவர்கள் அல்லர். அவர்களுக்கு ரூ.1000 கிடைக்காது.
அரசு அறிவித்த தகுதி வரம்புகளுக்கு உட்பட்டிருந்தால் ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்கும். மொத்தம் ஒரு கோடியே 63 லட்சம் பேர் இந்த திட்டத்தில் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயனாளிகளாகத் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.1000 செலுத்தப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்திட்ட பயனாளிகளுக்கு இந்த திட்டம் குறித்த விளக்கக் கையேடும் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த மகளிர் உரிமைத் திட்டத்தில் பொதுமக்களிடையே பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. பலருக்கு எந்த வித மெசேஜும் வரவில்லை. இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் 18ஆம் தேதிக்கு மேல், தேர்வு செய்யப்படாததற்கான காரணங்களோடு மெசேஜ் வரும். ஒருவேளை நீங்கள் விண்ணப்பிக்கையில் கொடுத்த மொபைல் எண் ஸ்விட்ச் ஆஃபில் இருந்தாலோ, நெட்வொர்க் சிக்னல் இல்லாத இடத்தில் இருந்தாலோ, அல்லது ரீசார்ஜ் செய்யாத காரணத்தால் இன்கம்மிங் கால், எஸ்.எம்.எஸ் வசதி தடைப்பட்டிருந்தாலோ உங்களுக்கு குறுஞ்செய்தி வராமல் போக வாய்ப்புள்ளது.
இந்த திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு, உரிமைத்தொகை பெறுவதற்கான குறுஞ்செய்தி மொபைலுக்கு வந்தும், வங்கிக் கணக்கில் பணம் ஏறவில்லை என்ற புகார்களும் ஆங்காங்கே எழுந்துள்ளன. வங்கிக்கணக்கு எண் தவறாக குறிப்பிடப்பட்டு இருந்தால் பணம் பெற்றிருக்க முடியாது. எனவே மேல்முறையீடு மூலம் வங்கி கணக்குகளை மாற்ற வேண்டும் என்றால் மேல்முறையீட்டின் போது முகாம்களிலோ, இ-சேவை மையம் மூலமாகவோ மாற்ற முடியும்.
ஒருவேளை குறுஞ்செய்தி வந்தும், வங்கி கணக்கில் பணம் வரவில்லை என்பவர்கள், தாங்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும்போது கொடுத்த வங்கி கணக்கு செயல்பாட்டில் உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும். வங்கி கணக்கை தொடர்ந்து பயன்படுத்தாத பெண்கள் பெருவாரியாக உள்ளனர். அவர்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய வங்கிக் கணக்கு விவரங்களை அளித்திருக்கலாம்.
வங்கிக் கணக்குடன் ஆதார் எண், கைரேகை போன்ற விவரங்களை இணைக்காமல் விட்டிருக்கலாம். அவர்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து வங்கிக் கணக்கை அப்டேட் செய்தால் அவர்களுக்கு உடனடியாக ரூ.1000 கிடைக்கும் என மகளிர் உரிமைத் திட்ட செயலாக்கத்தில் பணியாற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைக்க எந்தெந்த ஆவணங்கள் தேவைப்படும் என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள். ஆதார் எண், வங்கி கணக்கு தகவல் புத்தகம், ஆதார் அட்டையின் புகைப்பட நகல், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றுடன் வங்கி கிளைக்குச் சென்று உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை அப்டேட் செய்யவேண்டும். வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் சரி பார்க்கலாம்.
-
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications