3 முக்கிய ரிப்போர்ட்.. சிக்கும் பெருந்தலைகள்?- வரிசை கட்டி நிற்கும் தலைவலி.. என்ன செய்வார் ஸ்டாலின்?
சென்னை : அதிமுக தொடர்பான 3 விவகாரங்களில் அடுத்தடுத்து விசாரணை அறிக்கைகள் தயாராகியுள்ளன. இவற்றின் மீது தமிழக முதல்வர் ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
Recommended Video
அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் கமிஷன் சில வாரங்களுக்கு முன்னர் தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது.
கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட டேவிதார் கமிஷன் நேற்று தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் நிலவும் மர்மத்தைக் களைவதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் ஓரிரு நாட்களில் தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.

3 ரிப்போர்ட்கள்
எதிர்க்கட்சியான அதிமுகவில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. கட்சி யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதில் இருவருக்கும் இடையே பெரும் அதிகாரப் போட்டியே நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது நடந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையங்களின் அறிக்கைகள் அடுத்தடுத்து சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதலில் இதுவும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

முதல் ரிப்போர்ட் - அருணா ஜெகதீசன்
கடந்த அதிமுக ஆட்சியில் 2018ஆம் ஆண்டில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. போராட்டம் நூறாவது நாளை எட்டியபோது, பேரணியாகச் சென்றவர்கள், ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தபோது அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். எதிர்க்கட்சிகளின் கடுமையான வலியுறுத்தல் காரணமாக இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.

திட்டமிட்ட சதி
4 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற ஒரு நபர் ஆணைய விசாரணை, சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்ததைத் தொடர்ந்து அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் வழங்கினார். இந்த அறிக்கையை தமிழக அரசு வெளியிடவில்லை என்றாலும், அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் கசிந்துள்ளன. போராட்டக்கார்களை கலைக்க வேண்டும் என்ற நோக்கமின்றி, மறைவிடங்களிலிருந்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடந்தியதாகவும், 17 போலீஸ் அதிகாரிகளுக்கு இந்தச் சதியில் தொடர்பு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாவது ரிப்போர்ட்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பல கோடி ஊழல் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான பணிகள் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டதா? ஒப்பந்தங்கள் வழங்கும்போது உரிய நடைமுறை பின்பற்றப்பட்டதா? என ஆய்வு செய்தது.

ஸ்மார்ட் சிட்டி ஊழல்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி டேவிதார், சுமார் 200 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையையும், தொடர்புடைய ஆவணங்களையும் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் அளித்துள்ளார். எங்கெல்லாம் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன என்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலினிடம் எடுத்துரைத்துள்ளார் டேவிதார்.

மூன்றாவது ரிப்போர்ட்
மூன்றாவது ரிப்போர்ட் இன்னும் ஓரிரு நாட்களில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கை. கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் அமைக்கப்பட்ட இந்த விசாரணை ஆணையம், ஐந்து ஆண்டுகள் நெருங்கும் நிலையில், தனது விரிவான விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க இருக்கிறது.

சிக்குவார்களா?
இந்த 3 விசாரணை கமிஷன் ரிப்போர்ட்களுமே அதிமுகவோடு சம்பந்தப்பட்டவை. முதல் ரிப்போர்ட், தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றியது. அந்த சம்பவத்தில் பெரும் அதிகார மட்டத்தில் இருப்பவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் எனக் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. முக்கியமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் அப்போது, காவல்துறையை தன் கைவசம் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு இந்த அறிக்கையால் சிக்கல் எழலாம் எனக் கூறப்படுகிறது.

ஊழல் புள்ளிகள்
ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான ரிப்போர்ட் முதல்வர் ஸ்டாலினின் கைக்குச் சென்றுள்ளதால், இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிள்ள விவரங்களின் அடிப்படையில் விரைவில் அதிரடி நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது. இதனால், முக்கிய துறைக்கு அமைச்சராக இருந்த கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த புள்ளி, ஸ்மார்ட் சிட்டி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் என அனைவரும் கலக்கத்தில் இருக்கின்றனர்.

அப்பல்லோ மர்மம்
அதேபோல, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வந்த ஆறுமுகசாமி ஆணையம் தமது அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதால், ஜெயலலிதா மரணம் தொடர்பாக உலவிய பல்வேறு மர்மங்கள் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் அதிமுகவின் பெரிய தலைவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளின் தலைகள் உருளும் என்று கூறப்படுகிறது.

அதிமுகவுக்கு சிக்கல்
அடுத்தடுத்து வரிசைகட்டி நிற்கும் இந்த ரிப்போர்ட்கள், திமுகவுக்கு கிடைத்திருக்கும் துருப்புச் சீட்டுகளாகவே பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தொடங்கி, முக்கிய அமைச்சர்கள், அரசின் உயர் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் என பலரும் இந்த விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பதால், திமுக அரசின் நடவடிக்கைகள் மிகுந்த எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளன.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications