Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிஎஸ்கே vs மும்பை போட்டி நடக்குமா! இன்று கொட்ட போகும் கன மழை! தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று சென்னையில் மழை பெய்யலாம் என்று கூறப்படும் நிலையில், சிஎஸ்கே vs மும்பை போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. இதனிடையே இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலம் என்றாலே ஐபிஎல் திருவிழா தொடங்கிவிடும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல் திருவிழாவுக்கு உலகெங்கும் ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.

 What tamilnadu weatherman said about Chennai vs Mumbai match amid rain alert

அதன்படி இந்தாண்டு கடந்த மார்ச்சில் தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்போது லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஐபிஎல் போட்டி தொடர்: இந்தாண்டு வழக்கத்தை விடப் போட்டிகள் மிக நெருக்கமாகச் சென்றே முடிவடைகிறது. புள்ளி பட்டியலிலும் பல அணிகள் நெருக்கமாகவே உள்ளது. அதில் குஜராத் அணி 10இல் ஏழு போட்டிகளில் வென்று முதலிடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து லக்னோ, சென்னை, ராஜஸ்தான், பெங்களூர், மும்பை, பஞ்சாப் என 6 அணிகள் 5 வெற்றிகளுடன் உள்ளன. இருப்பினும், லக்னோ, சென்னை போட்டி கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்ட நிலையில், அவை 2,3 இடங்களில் உள்ளன.

அடுத்த 4 அணிகள் ஒரே புள்ளிகளுடன் உள்ளன. இதனால் இந்தாண்டு ப்ளே ஆப் சுற்றுக்கு யார் செல்வார்கள் என்பதே பெரிய போட்டியாக இருக்கப் போகிறது. பெரும்பாலான அணிகளுக்கு லீக் சுற்றில் இன்னும் 4 அல்லது 5 போட்டிகளே உள்ளன. அதில் எத்தனை போட்டிகளில் வெல்கிறார்களோ அந்தளவுக்கு அவர்கள் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு அதிகரிக்கும். இதன் காரணமாக அனைத்து அணிகளும் தாங்கள் விளையாடும் போட்டிகளில் வெல்லத் தீவிரமாக உள்ளன.

சென்னை vs மும்பை: சென்னை அணியைப் பொறுத்தவரை அவர்களுக்கு இன்னும் 4 போட்டிகள் உள்ளன. இதில் இன்றைய போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதுகிறது. ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமாக இருக்கும் இரு அணிகளாக சென்னையும் மும்பையும் உள்ளன. இரு அணிகளும் இதுவரை 37 முறை மோதியுள்ளன. அதில் மும்பை 21 முறையும், சென்னை அணி 16 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

 What tamilnadu weatherman said about Chennai vs Mumbai match amid rain alert

அதேநேரம் சென்னை மைதானத்தில் இதுவரை இனி அணிகளும் 8 முறை மோதியுள்ள நிலையில், அதில் மும்பை அணியின் கையே ஓங்கியுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணி 6 முறை வென்றுள்ள நிலையில், சென்னை அணி இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையை மாற்றி மீண்டும் மும்பையைச் சொந்த மைதானத்தில் வீழ்த்த வேண்டும் என்பதே சென்னை ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.

 What tamilnadu weatherman said about Chennai vs Mumbai match amid rain alert

போட்டி நடக்குமா: சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் இந்த போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் எப்படியாவது வென்று அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்த வேண்டும் என்பதே இரு அணிகளின் எண்ணமாகும். சென்னை மும்பை போட்டிக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், இந்தப் போட்டிக்கான டிக்கெட்கள் நொடிகளில் விற்றுத் தீர்ந்துவிட்டன.

இதனிடையே இன்று சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இதனால் சென்னை மும்பை போட்டி நடைபெறாமல் போகவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இப்போது ரசிகர்கள் மைதானத்திற்கு வர தொடங்கிவிட்ட நிலையில், இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட் ஒன்று செய்துள்ளார்.

 What tamilnadu weatherman said about Chennai vs Mumbai match amid rain alert

தமிழ்நாடு வெதர்மேன்: இது குறித்து பிரதீப் ஜான் தனது ட்விட்டரில், "சென்னைக்கு மழை வாய்ப்பு உள்ளது ஆனால் CSK vs MI போட்டி நடக்கும். இதில் முடிவும் கிடைக்கும்... நேற்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இன்றும் இந்த பகுதிகளில் அதே வானிலை தொடரும். வட தமிழ்நாட்டில் கனமழை நிச்சயம் பெய்யும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+