Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் புதிதாக உருவான நான்கு மாநகராட்சிகள்.. இதனால் மக்களுக்கு என்ன லாபம்.. என்ன நஷ்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்றி தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய மாநகராட்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் தமிழகத்தில் 21 ஆக இருந்த மாநகராட்சிகள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. நகராட்சிகள், மாநகராட்சியாவதால் மக்களுக்கு என்ன லாபம், என்ன நஷ்டம் என்பதை பார்ப்போம்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை மிகமிக பழமையான மாநகராட்சி என்றால் அது சென்னை மாநகராட்சி தான். இது 1,688-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி பிரிட்டீஷ் அரசால் உருவாக்கப்பட்டது. சென்னை தான் இந்தியாவிலேயே மிகப் பழமையான மாநகராட்சி ஆகும். அதன்பிறகு தமிழ்நாட்டில் இரண்டாவது மாநகராட்சி என்றால் அதுமதுரை தான். தூங்கா நகரமான மதுரை, கடந்த 1971-ம் ஆண்டில் மாநகராட்சியானது. அதன்பிறகு தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று போற்றப்படும் கோவை 1981-ம் ஆண்டு மாநகராட்சியாக மாறியது.

TN Govt Notification corporation municipality

இதன்பின்னர் 13 ஆண்டுகள் எந்த ஒரு ஊரும் மாநகராட்சியாக அறிவிக்கப்படாமல் இருந்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்த 1994-ம் ஆண்டு சேலம், திருச்சி, நெல்லை ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக மாறியது. அதன்பின்னர் கிட்டத்தட்ட 14 வருடங்கள் எந்த ஊரும் மாநகராட்சியாக அறிவிக்கப்படவில்லை.. எனினும் கருணாநிதி முதல்வராக இருந்த 2008-ம் ஆண்டு, திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி ஆகிய பெருநகரங்கள் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டன. ஜெயலலிதா முதல்வராக இருந்த கடந்த 2014-ம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சி அறிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த 2019-ம் ஆண்டு ஓசூர், நாகர்கோவில், ஆவடி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், கடந்த 3 ஆண்டுகளில் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டன. மேலும் 28 நகராட்சிகளும் உருவாக்கப்பட்டன. இதனால் தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21 ஆகவும், நகராட்சிகளின் எண்ணிக்கை 138 ஆகவும் அதிகரித்தது. இப்போது புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

மாநகராட்சியாக எப்படி ஒரு நகரம் தரம் உயர்த்தப்படுகிறது: 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி சட்டத்தின்படி ஒரு உள்ளாட்சி அமைப்பை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்றால் அதன் மக்கள் தொகை 3 லட்சம் இருக்க வேண்டும், ஆண்டு வருமானம் ரூ.30 கோடி இருக்க வேண்டும் என்ற விதியாகும்.இதன்படியே வருவாய் மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் மாநகராட்சிகள் தரம் உயர்த்தப்படுகிறது.

புதிய சட்டம்: இதனிடைய அண்மையில் அரசு கொண்டு வந்த புதிய சட்டப்படி 2 லட்சம் மக்கள் தொகையும், ரூ.20 கோடி ஆண்டு வருமானமும் இருந்தால் மாநகராட்சியாக அறிவிக்கலாம் என்று கூறப்பட்டது. தமிழக அரசு கொண்டு வந்த இந்த சட்டத்திருத்தத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவியும் உடனடியாக ஒப்புதல் தந்தார். அதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகியவற்றை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

மாநகராட்சியாவதால் என்ன நடக்கும்: நகராட்சிகள் எல்லாம் மாநகராட்சிகள் என்று அறிவிக்கப்பட்டால் தரம் உயருமா என்றால் நிச்சயம் மாறிவிடாது. எல்லா நகரங்களும் சென்னை, கோவைக்கு நிகராக மாறிவிடாது. ஏனெனில் நகராட்சி மாநகராட்சியாக மாறினாலும், அங்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் எல்லாம் மாற்றம் அடைய நீண்ட காலம் ஆகும். மாநகராட்சியாக மாறினால் வரிகள் உயரும். அதுமட்டுமின்றி, மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராம பகுதிகளும் மாநகராட்சிக்குள் வரும். அப்படி வரும் போது வரி வருவாய் உயரும். அதனை வைத்து தான் மாநகராட்சிக்கு உரிய நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

தற்போதைய நிலையில் நகராட்சிகள் எல்லாம் மாநகராட்சிகளாக மாறினாலும், உண்மையாக மிகப்பெரிய பெரு மாநகராட்சிகள் என்று சொல்ல வேண்டும் என்றால், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர், ஓசூர் ஆகிய ஊர்களைத்தான். இதில் சென்னைக்கு அடுத்தபடியாக அசுர வளர்ச்சி அடையும் நகரங்கள் என்றால், கோவை, திருப்பூர், ஓசூர் ஆகிய ஊர்களை சொல்லாம். இந்த நகரங்களில் உள்கட்டமைப்புகள் இந்த நகரும் வளரும் வேகத்திற்கு மாற வேண்டும் என்றால் கண்டிப்பாக மாநகராட்சியாக இருக்க வேண்டியது மட்டுமின்றி, மாநகராட்சியை ஒட்டியுள்ள பகுதிகளும் மாநகராட்சியில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை சேர்க்க வேண்டியது அவசியம் ஆகும். அந்த வகையில் தான் மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன.

இந்தியாவிலேயே, தமிழகம் தான் அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்வதால், நகர்ப்புறங்களை மட்டும் நகரங்களை ஒட்டியுள்ள புறநகர் பகுதி மக்களுக்கும் அதேவசதி கிடைக்க வேண்டும். அதற்கு மாநகராட்சியாக மாறினால் தான் சாத்தியம் என்பதால், அரசு அடுத்தடுத்து மாநகராசியாக அறிவித்து வருகிறதது.

மாநகராட்சியாக அறிவிப்பின் பின்னணி என்று பார்த்தால்,பெருநகரங்களுக்கு அருகில் அமைந்துள்ள பகுதிகளுக்கும் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆகியவற்றை முறையாக வழங்க வேண்டும் என்பதற்காக அருகில் உள்ள நகரங்களோடு இணைத்து மாநகராட்சிகளாக உருவாக்கப்படுகிறது. மாநகராட்சியானால் மக்களுக்கு நஷ்டம் என்று பார்த்தால்,நிச்சயம் இருக்கிறது. வரிகள் எல்லாமே உயரும். நிலத்தின்மதிப்பும் அடியோடு மாறும். 100 நாள் வேலை திட்டம் கிடைக்காது.. சொத்து வாங்குவது விற்பது தொடங்கி எல்லாமே அதிகமாக இருக்கும். லாபம் என்று பார்த்தால், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உயரும். கிராமங்களில் உள்ள வசதிகளைவிட நகரங்களில் அதிக வசதிகள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வசதிகள் எல்லாமே கிடைக்கும். மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு தரும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+