Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"24 போர் விதிகள்".. ஸ்டாலினை சந்தித்து.. முதல் நாளே மாஸ் வேகத்தில் சைலேந்திர பாபு.. செம அசைன்மென்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு காவல்துறையின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு பதவி ஏற்ற நிலையில் நேற்று முதல்வர் ஸ்டாலினை அவர் நேரில் சந்தித்தார்.

Recommended Video

    புதிய DGP ஆக பதவியேற்ற Sylendra Babu-வின் முதல் என்கவுண்ட்டர்

    தமிழக காவல்துறையின் 30-வது டிஜிபியாக சைலேந்திர பாபு ஐபிஎஸ் நேற்று பதவி ஏற்றார். தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உயர் பொறுப்பில் அமர்த்தி வருகிறது. நேர்மையான அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் மிகவும் நேர்மையான அதிகாரி, மக்களுக்கு நெருக்கமானவர், கண்டிப்பானவர் என்று பெயர் எடுத்த சைலேந்திர பாபு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டு இருப்பது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    சந்திப்பு

    சந்திப்பு

    இந்த நிலையில் டிஜிபியாக சைலேந்திர பாபு ஐபிஎஸ் பதவி ஏற்ற நிலையில் நேற்று முதல்வர் ஸ்டாலினை அவர் நேரில் சந்தித்தார். பொதுவாக புதிய டிஜிபிக்கள் பதவி ஏற்றபின், முதல்வரை அவர்கள் சென்று சந்திப்பது வழக்கம். மரியாதை நிமித்தமாக பூங்கொத்து கொடுப்பது வழக்கம். ஆனால் முதல்வர் பூங்கொத்துகளை ஏற்பது இல்லை என்பதால், சைலேந்திர பாபு ஐபிஎஸ் புத்தகத்தோடு சென்று முதல்வரை சந்தித்தார்.

    புத்தகம்

    புத்தகம்

    உங்களுக்கான 24 போர் விதிகள் என்ற தலைப்பில் சைலேந்திர பாபு தான் எழுதிய புத்தகத்தை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்பதை தாண்டி, இவர்கள் 15 நிமிடம் முக்கியமான சில விஷயங்களை பேசி இருக்கிறார்கள். தமிழ்நாடு காவல்துறையில் முக்கிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று இவர்கள் பேசி உள்ளனர்.

    என்ன பேச்சு

    என்ன பேச்சு

    முக்கியமாக மக்களிடம் போலீசார் நடந்து கொள்ளும் விதத்தை மாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் சைலேந்திர பாபுவிடம் சொன்னதாக தெரிகிறது. மக்களை போலீசார் தேவையின்றி அடிக்க கூடாது. தவறு செய்தவர்களை தண்டிப்பது வேறு, பொது மக்களை தாக்குவது வேறு. போலீஸ் பொது மக்களை தாக்க கூடாது என்று சைலேந்திர பாபுவிடம் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டதாக தெரிகிறது.

    அசைன்மென்ட்

    அசைன்மென்ட்

    ஆட்சிக்கு வந்த தொடக்கத்திலேயே போலீசார் மக்களிடம் கனிவாக நடக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதையும் மீறி சேலத்தில் போலீசார் தாக்கியதில் முருகேசன் என்ற வியாபாரி பலியானார். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் சைலேந்திர பாபுவிற்கு உத்தரவிட்டதாக தெரிகிறது. இது போக சட்டம் ஒழுங்கு குறித்தும் பேசியதாக தெரிகிறது.

    சட்டம் ஒழுங்கு

    சட்டம் ஒழுங்கு

    தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக தலைகள், மற்ற கட்சி தலைகள் சிலர் கட்டபஞ்சாயத்து செய்கிறார்கள், 10 வருடத்தில் நிறைய பேர் ஊருக்குள் கட்டப்பஞ்சாயத்தில் குதித்து விட்டனர். இவர்களை தடுக்கும் விதமாக செயல்பட வேண்டும், ஆன்லைன் குற்றங்கள், அவதூறுகள், முறைகேடுகள் அதிகரித்துவிட்டன. இரண்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் சைலேந்திர பாபுவிடம் தெரிவித்து உள்ளார். கட்டப்பஞ்சாயத்துதான் முதல் குறி என்கிறார்கள்.

    ஆன்லைன்

    ஆன்லைன்

    முக்கியமாக சமூக வலைதளங்களில் குற்றங்களில் ஈடுபட்டு, சத்தமின்றி எஸ்கேப் நபர்களுக்கு குறி வைக்கும் திட்டம் உள்ளதாம். அதோடு கடந்த 10 வருடங்களில் அரசு நடவடிக்கை எடுக்காத முக்கியமான சில புகார்களை தோண்டி எடுத்து விசாரிக்கும் அசைன்மெண்டும் சைலேந்திர பாபுவிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் வரும் நாட்களில் சைலேந்திர பாபு பல அதிரடி நடவடிக்கை எடுப்பார் என்று டிஜிபி அலுவலகத்தில் பேச்சு அடிபடுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+