"நீங்க 4 பேரும் சேர்ந்தா.. எல்லாம் மாறும்".. கடுகடுப்பாக பேசிய ஸ்டாலின்! மீட்டிங்கில் வியர்த்த தலைகள்
சென்னை: துறை ரீதியாக செயலாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துறை ரீதியாக செயலாளர்கள் உடன் கூட்டம் நடத்தப்பட்டது. கடந்த மாதம் 30ம் தேதிதான் அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்தார்.
இந்த ஆலோசனையை தொடர்ந்து நேற்று துறை ரீதியாக முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளை சந்தித்து பேசினார். சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஒவ்வொரு துறை ரீதியாக முதல்வர் ஸ்டாலின் பல கேள்விகளை இதில் எழுப்பினார்.

என்ன உத்தரவு
இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதில், 2021- 2022 ஆண்டுகளில் அரசு வெளியிட்ட 1680 அறிவிப்புகளில் 94 சதவிகித அறிவிப்புகள் அரசாணையாக வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தம் 1580 அறிவிப்புகள் அரசாணையாக வெளியிடப்பட்டு உள்ளது. இவை எல்லாம் அமலுக்கு வந்து உள்ளன. மீதம் உள்ள அறிவிப்புகள் உடனே அமலுக்கு வர வேண்டும். தாமதம் ஆகும் அறிவிப்புகள் செயலகத்திற்கு வர வேண்டும்.

நிதி நிலை
2022-2023ல் மொத்தம் 1634 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் 937 அறிவிப்புகள் செயலுக்கு வந்து உள்ளன. இதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டுவிட்டன. நம்மிடம் பொருளாதார ரீதியாக சில சிக்கல்கள் உள்ளன. பொருளாதார ரீதியாக தமிழ்நாடு அரசு கஜானா சிறப்பாக இல்லை. இருந்தாலும் அவசியமான திட்டங்களை உடனே அமலுக்கு கொண்டு வர வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

திட்டங்கள்
அதே சமயம் சில திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட அதிகாரிகளும் காரணமாக இருக்கிறார்கள். 2 - 3 துறைகள் சம்பத்தப்பட்ட திட்டங்களை நிறைவேற்றும் போது அவர்கள் இடையே சரியான புரிதல் இல்லை. அவர்கள் இடையே சரியான புரிந்துணர்த்து, ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இல்லை. இதனால்தான் சில திட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல் உள்ளது.

இளம் அதிகாரிகள்
இதை எல்லாம் நான் தகவல் பலகையில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். தகவல் பலகையில் நிறைவேற்றப்படாத திட்டங்களை நான் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அதை உடனே நிறைவேற்ற வேண்டும். அதிகாரிகள் களப்பணிகளை செய்ய வேண்டும். அரசு நிர்வாகத்தை செம்மைப்படுத்த 30 இளம் அதிகாரிகளை நியமனம் செய்து இருக்கிறேன். இவர்கள் துறைகளில் புதுமைகளை கொண்டு வருவார்கள்.

4 பேர்
இவர்களை ஒவ்வொரு துறையும் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து கடுகடுப்பாக பேசிய முதல்வர், அமைச்சர்கள், துறை செயலாளர்கள், துணை தலைவர்கள், மாவட்ட நிர்வாகம் ஆகிய நான்கு பேருமே ஒரு திட்டத்தை செயல்படுத்த முக்கியம். இவர்கள் 4 பேரும் ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும். இவர்கள் 4 பேரும் ஒரு நேர்கோட்டில் இயங்கினால் திட்டங்களை எளிதாக நிறைவேற்ற முடியும். தமிழ்நாடும் இதனால் நம்பர் 1 இடத்தை பிடிக்க முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதை அதிகாரிகள் பதற்றத்தோடு குறிப்பெடுத்துக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications