சசிகலா ஸ்கெட்ச்.. அவர் ஒருபக்கம், "இவர்" மறுபக்கம்.. 2 சைடிலும் திடீர் நெருக்கடி.. இபிஎஸ் மூவ் என்ன?
சென்னை: அதிமுகவை சரி செய்துவிடலாம்.. மீண்டும் நிச்சயம் வருவேன் என்று சசிகலா பேசியதாக வெளியாகி இருக்கும் ஆடியோ அதிமுகவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ரியாக்சன் என்னவாக இருக்கும் என்பதே தற்போது கேள்வியாக உள்ளது.
Recommended Video
அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்த சசிகலா தற்போது மீண்டும் கம்பேக் கொடுப்பதற்கு தயாராகிவிட்டதாக தகவல்கள் வருகின்றன. சசிகலா பேசியதாக நேற்று இணையத்தில் போன் கால் ஆடியோ ஒன்று வைரலானது.
அதிமுக நிர்வாகி ஒருவரிடம்.. நான் மீண்டும் நிச்சயம் அரசியலுக்கு வருவேன், கொரோனா முடிந்ததும் வருவேன், கட்சியை சரி செய்து விடலாம் என்று ஆடியோவில் சசிகலா கூறுவதாக பதிவாகி இருந்தது. சசிகலா பேசியதாக கூறப்படும் இந்த போன் கால் ஆடியோ அதிமுக தரப்பில் சிலருக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.

எப்படி
சசிகலாவின் இந்த ஆடியோ, அவர் அதிமுகவிற்குள் மீண்டும் வருவதற்கு தயாராகிவிட்டார் என்பதையே காட்டுகிறது. கட்சிக்குள் மீண்டும் வர திட்டங்களை வகுத்து வருகிறார். அதோடு கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளிடம் சசிகலா இது தொடர்பாக பேசியும் வருகிறார். பல எம்எல்ஏக்களிடம் சசிகலா ஆலோசனையில் ஈடுப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அப்செட்
கட்சியில் அப்செட்டில் இருக்கும் நிர்வாகிகள் பலரை வளைக்கும் முடிவில் சசிகலா இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் தோல்வி அடைந்த நிர்வாகிகள், தோல்வியை சந்தித்த அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவராக இபிஎஸ் தேர்வானதை விரும்பாத தலைவர்கள் என்று பலருக்கு சசிகலா குறி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. பல எம்எல்ஏக்களுடன் சசிகலா பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

நிலைமை
அதிமுக தோல்வி காரணமாக ஏமாற்றத்தில் இருக்கும் நபர்களிடம் சசிகலா பேசி வருகிறார். அவர்களை ஸ்கெட்ச் போட்டு, தன் பக்கம் இழுக்கும் முடிவில் சசிகலா இருக்கிறார் என்கிறார்கள். இபிஎஸ் தரப்புக்கு இது நெருக்கடியை கொடுத்துள்ளது. சசிகலா கட்சிக்குள் வந்தால் தனது பவர் குறைந்துவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கவலையில் இருக்கிறாராம். இதனால் சசிகலா உள்ளே வருவதை தடுக்கும் நடவடிக்கையில் அவர் இறங்கிவிட்டார் என்கிறார்கள்.

ஆனால் என்ன
இபிஎஸ்ஸுக்கு சசிகலா ஒரு பக்கம் நெருக்கடி கொடுக்க தொடங்கிவிட்டால், இன்னொரு பக்கம் ஓ. பன்னீர்செல்வம் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். தனக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்களை இபிஎஸ்ஸுக்கு எதிராக திருப்பி வருகிறார். அதோடு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி காரணமாக, நிர்வாகிகள் எல்லோரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார்.

இரண்டு பக்கம்
தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டு பக்கம் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் ஓபிஎஸ் தனியாக அறிக்கை விட்டு, தன்னை அதிமுகவின் தலைவர் போல காட்டிக்கொண்டு இருக்கிறார். இன்னொரு பக்கம் சசிகலா வேகமாக காய்களை நகர்த்தி வருகிறார். பல முன்னாள் அமைச்சர்களே தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கம் காட்டாமல், லேசாக விலக தொடங்கி உள்ளனர்.

எதிர்பார்ப்பு
கட்சிக்குள் நிறைய அதிகார போட்டிகள், மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனால் ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு இபிஎஸ் தள்ளப்பட்டுள்ளார். தற்போது ஆட்சியில் வேறு இல்லாததால் எடப்பாடி பழனிசாமியின் லகான் கொஞ்சம் நழுவும் நிலையில் உள்ளது.

கேள்வி
சசிகலாவின் ஆடியோ, ஓபிஎஸ்ஸின் அறிக்கை யுத்தம் இரண்டுக்கும் இபிஎஸ் எப்படி பதிலடி கொடுக்க போகிறார் என்பதே தற்போது பெரிய கேள்வியாக உள்ளது.. இபிஎஸ் அடுத்த என்ன செய்வார் என்பதை தெரிந்து கொள்ள அதிக நாட்கள் காத்திருக்க வேண்டியது இல்லை, விரைவில் அவர் முக்கிய முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications