Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சூப்பர் பவர் துறை".. அமைச்சர் ஆனதும் முதல் அறிவிப்பு "இதுதான்".. உதயநிதி வெளியிட போகும் திட்டம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சரான பின் அறிவிக்க போகும் முதல் திட்டம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக கோட்டை வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அமைச்சரவை நாளை மாற்றம் செய்யப்பட உள்ளது. உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நாளை தமிழ்நாடு அமைச்சராக தேர்வாக உள்ளார்.

இவருக்கு விளையாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் நாளை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலை 9.30 மணிக்கு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் துறை

உதயநிதி ஸ்டாலின் துறை

இது போக முதல்வர் ஸ்டாலினிடம் உள்ள முக்கியமான துறை ஒன்றை உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவை மாற்றத்தின் போது வழங்க உள்ளதாக ஆளும் திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. தற்போது முதல்வர் ஸ்டாலினிடம் சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை உள்ளது. இந்த துறை ஒரு வகையான சிறப்பு துறையாகும். பல்வேறு துறைகளில் தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த இந்த துறை உருவாக்கப்பட்டு உள்ளது. பொதுவாக ஒரு துறை ரீதியான அறிவிப்பை அந்த துறை அமைச்சர்கள்தான் வெளியிடுவார்கள். ஆனால் இந்த சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை எந்த துறையில் வேண்டுமானாலும் நலத்திட்டங்களை அறிவிக்க முடியும்.

 சிறப்பு திட்டங்கள்

சிறப்பு திட்டங்கள்

இந்த துறையின் கீழ்தான் முதல்வர்தான் இந்த சிறப்பு திட்டங்களை அறிவித்து வந்தார். உதாரணமாக மாணவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் இந்த சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை மூலம் கொண்டு வரப்பட்டது. இந்த துறையைத்தான் தற்போது உதயநிதி ஸ்டாலின் பெற உள்ளார். அனைத்து துறைகளையும் கண்காணிக்க வேண்டும் என்பதால் இந்த துறை இத்தனை காலம் முதல்வர் ஸ்டாலினிடம் இருந்தது. மற்ற துறைகளை கண்காணிக்க வசதியாக இந்த துறை முதல்வரிடம் இருந்தது. இதுதான் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

என்ன திட்டம்?

என்ன திட்டம்?

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சரான பின் அறிவிக்க போகும் முதல் திட்டம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக கோட்டை வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.அதன்படி சிறப்புத் திட்டங்கள் அமலாக்கம் துறை உதயநிதிக்கு கொடுக்கும் பட்சத்தில், மகளிர்க்கான மாத உறுதித் தொகை 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவிக்கச் செய்யலாமா? என்று ஆலோசிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக தேர்தலின் போது அறிவித்து இருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பெண்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்த பின் திமுக அரசால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை.

கொரோனா

கொரோனா

கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. மக்கள் இடையே எப்போது இந்த திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில்தான் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான பொருளாதார, நிதி ஆதார வழிகளை தமிழ்நாடு அரசு சில மாதங்களாக செய்து வந்தது. எங்கிருந்து நிதி திரட்டி மாதம் 1000 ரூபாய் கொடுப்பது, இதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பது உள்ளிட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை வழியாக இந்த அறிவிப்பை வெளியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை

சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை

ஆனால், நிதி நிலைமையை சுட்டிக்காட்டி நடப்பு நிதியாண்டில் அது சாத்தியமில்லை என்று நிதித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் வேறு ஒரு முக்கியமான அறிவிப்பு உதயநிதி ஸ்டாலின் மூலம் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. விளையாட்டு துறை சார்பாக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்படலாம் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு காரணமாக நாளைக்கு கோட்டையும் , அறிவாலயமும் செம பரபரப்புக்குள்ளாகும் என்றே அரசு தரப்பு தகவல்கள் நம்மிடம் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+