இதுதான் விஷயமே! சென்னை கையில் எடுக்கும் பிரம்மாஸ்திரம்! ரெடியாகும் மெகா பிளான்! மொத்தமாக மாற போகுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதைச் சமாளிக்கவும் நகரின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கும் ஏற்ப சென்னையில் மெகா திட்டம் ஒன்று தயாராகி வருகிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதே பெரும் சிரமமாக இருக்கிறது. பொது போக்குவரத்தை ஊக்குவிப்பது மட்டுமே இதற்கான தீர்வாக இருக்கிறது.

 What will be the major infra update in Chennai to manage increasing traffic in the city

அதிலும் குறிப்பாக மெட்ரோவில் பயணிக்க இப்போது பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். இப்போது விம்கோ நகர் முதல் ஏர்போர்ட், சென்னை சென்டிரல்- பரங்கிமலை என்று இரண்டு ரூட்களில் மெட்ரோ இயங்கி வருகிறது. இது தவிர இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது.

சென்னை மெட்ரோ: இதற்கிடையே சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம் ஏ சித்திக் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதாவது சென்னையில் மக்கள் தொகை அதிகரிக்கும் நிலையில், அதற்கேற்ப நகரில் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடுதலாக 280 கிமீ மெட்ரோ ரயில் பாதைகள் தேவை என்றும் இதை அமைக்க மொத்தம் ரூ 1 லட்சம் கோடி செலவாகும் என்று சித்திக் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு உள்கட்டமைப்பு உச்சி மாநாடு 2023 என்ற மாநாட்டில் பேசும் போது அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். நகரின் அடுத்தகட்ட வளர்ச்சி எப்படி இருக்கும் அதற்கேற்ப போக்குவரத்தை எப்படி விரிவாக்க வேண்டும் என்பது குறித்துக் கடந்த 2019இல் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும் அதன்படி, சென்னைக்கு மொத்தம் 451 கிமீ நீளத்திற்கு மெட்ரோ ரயில் பாதைகள் தேவைப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கூடுதல் மெட்ரோ தேவை: அந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசுகையில், "சென்னையில் தற்போது 54 கிமீ தொலைவிற்கு முதற்கட்ட மெட்ரோ இயங்கி வருகிறது. அதேபோல தற்போது கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ முடிவடைந்தால் அது கூடுதலாக 116 கிமீ தொலைவுக்கு இருக்கும். இது விரிவான அமைப்பாகத் தோன்றினாலும் கூட இது சென்னைக்கு போதுமானதாக இருக்காது.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் ஷாங்காய் மற்றும் சியோல் போன்ற நகரங்களில் ஒவ்வொரு 10 லட்சம் மக்களுக்கு 30-50 கிமீ நீளமுள்ள மெட்ரோ பாதைகள் உள்ளன. அதேநேரம் சென்னையைப் பொறுத்தவரை ஒவ்வொரு 10 லட்சம் மக்களுக்கு 14 கிமீ நீளத்திற்கு மட்டுமே மெட்ரோ பாதை அமைந்துள்ளது. எனவே, நமக்கு இன்னுமே கூடுதலாக மெட்ரோ பாதைகள் தேவை என்பதையே இது காட்டுகிறது.

நகரில் மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஏற்கனவே தற்போது சென்னையில் மெட்ரோ ரயிலை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 3 லட்சத்தில் இருந்து 3.5 லட்சமாக அதிகரித்துள்ளது. இது அடுத்தாண்டு மேலும் அதிகரித்து 4 லட்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தமாக மாறும் சென்னை: இப்போது அதிகரிக்கும் மக்கள்தொகை உள்ளிட்ட பல காரணங்களைக் கருத்தில் கொண்டு புதிய விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவை சென்னையில் நாம் பயணிக்கும் முறையே நிச்சயம் அப்படியே மாற்றிவிட வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக மேம்படுத்தப்பட்ட டிராம்களை போல இருக்கும் எல்ஆர்டி எனப்படும் லைட் ரெயில் டிரான்சிட் என்ற போக்குவரத்து முறையை மீண்டும் கொண்டு வரவும் வாய்ப்பு இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+