கேம் ஓவர்.. இனி சண்டையா? சமாதானமா?.. எடப்பாடி பழனிசாமி தரப்பின் அடுத்த கட்ட நகர்வு என்ன?
சென்னை: அதிமுக பொதுக் குழு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் நடத்தப்பட்டு இதில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து கட்சிக்கு விரோதமாக நடந்து கொள்வதாக கூறி ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்டோரை எடப்பாடி நீக்கிவிட்டார்.
இதையடுத்து ஓபிஎஸ் வகித்து வந்த பொருளாளர் பதவியை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைத்தார் இபிஎஸ். இந்த நிலையில் ஓபிஎஸ் அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரிய வழக்கில் உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது, எனவே சென்னை ஹைகோர்ட்டை நாடலாம் என்றும் ஓபிஎஸ் வழக்கை ஹைகோர்ட் விசாரிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

அதிமுக பொதுக் குழு
இந்த நிலையில் அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் சென்னை உயர்நீதிமன்றம் கேட்ட நிலையில் இன்றைய தினம் அந்த வழக்கில் தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கின் தீர்ப்பு மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

இன்று தீர்ப்பு
இந்த நிலையில் ஜூலை 11 ஆம் தேதி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது.

எடப்பாடி தரப்பு
அதிமுக பொதுக் குழு தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு பாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ள நிலையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை மேல் முறையீடு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்ஸுடன் எடப்பாடி பழனிசாமி சமாதானமாக செல்லுமா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதிலாக உள்ளது. எதுவாக இருந்தால் சட்டபடி தீர்வு காணவே விரும்புவதாக எடப்பாடி தரப்பு தெரிவித்துள்ளது. இதனால் உடனடியாக மேல்முறையீடு செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்யும் என்றே தெரிகிறது.
-
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி! -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி!












Click it and Unblock the Notifications