நாடு முழுக்க பல கோடி பேருக்கு பயன்.. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி! உங்கள் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வர வேண்டிய மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலை நிவாரணம் (டிஆர்) 3% உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுக்க பல கோடி ஊழியர்களின் சம்பளம் உயரப்போகிறது. ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும் என்று இங்கே பார்க்கலாம்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி செய்தார். DA இன் அதிகரிப்பு அடிப்படை ஊதியத்தில் 50% லிருந்து 53% ஆக உயர்த்தப்படுகிறது.

bonus dearness allowance

1 கோடிக்கும் அதிகமான பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்: :

அகவிலைப்படி உயர்வால் நாடு முழுவதும் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். DA மற்றும் DR இன் அதிகரிப்பு, ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு அதிகரிக்கும் செலவுகளைச் சமாளிக்க உதவும்.

அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த முடிவால் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.9,448 கோடி செலவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக DA மற்றும் DR இரண்டும் ஆண்டுக்கு இருமுறை திருத்தப்படும், பொதுவாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தப்படும். கடந்த முறை அகவிலைப்படின் உயர்வு மார்ச் 2024 இல் அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் 4% உயர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது 3% செய்யப்பட்டு உள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் எவ்வளவு சம்பள உயர்வு பெறுவார்கள்?

இந்த 3% டிஏ உயர்வு மூலம் மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம் எவ்வளவு உயரும் என்பது பெரும்பாலான ஊழியர்களின் முக்கிய கேள்வி. உதாரணமாக ஒரு ஊழியருக்கு ரூ.30,000 மாதச் சம்பளமாக இருந்தால், அதில் அடிப்படை ஊதியமாக ரூ.18,000 இருந்தால், அவர்கள் தற்போது ரூ.9,000 டிஏவாகப் பெறுவார்,

இது அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 50% ஆகும். புதிய 3% அதிகரிப்புடன், இந்த ஊழியரின் டிஏ இப்போது ரூ.9,540 ஆக இருக்கும், இது மாதத்திற்கு ரூ.540 கூடுதலாகும்.

எனவே, ஒரே மாதிரியான ஊதிய அமைப்புகளைக் கொண்ட ஊழியர்கள் தங்களின் மாதச் சம்பளம் ரூ. 540 அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். அடிப்படை ஊதியம் அதிகமாக இருந்தால், DA அதிகமாகும், அதாவது அதிக அடிப்படைச் சம்பளம் உள்ள ஊழியர்கள் அதிக சம்பள உயர்வை பெறுவார்கள்.

தமிழ்நாடு அகவிலைப்படி; தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அகவிலைப்படி உயர்வும் மேற்கொள்ளப்பட உள்ளது. அகவிலைப்படி இரண்டாவது முறையாக அக்டோபர் மாதம் உயர்த்தப்பட வேண்டும். 4% வரை இந்த முறை அகவிலைப்படி உயர்வு மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போனஸ் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு இரண்டும் ஒன்றாக வரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. தற்போது 50% அகவிலைப்படி கடைபிடிக்கப்படுகிறது. அதாவது அடிப்படை சம்பளத்தில் 50% அகவிலைப்படி கடைபிடிக்கப்படுகிறது. தற்போது 4% மேலும் உயர்த்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+