பொதுக் குழு நடக்குமா நடக்காதா?.. நடந்தால் இத்தனை விளைவுகளா?.. எடப்பாடி தரப்பு என்ன முடிவெடுக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக் குழு நடக்குமா, அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended Video

    ADMK பொதுக் குழு கூட்டத்தை ஒத்தி வைக்க Edappadi Palanisamy-க்கு OPS கடிதம் *Politics

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. எடப்பாடி ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை குறித்து கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் ஓபிஎஸ் தரப்போ இரட்டை தலைமையே வேண்டும் என்கிறார்கள்.

    இந்த நிலையில் அதிமுக பொதுக் குழுவில் ஒற்றைத் தலைமை பிரச்சினையை எழுப்ப எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் வியூகம் வகுத்துள்ளார்கள். இதை முறியடிக்க ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வழக்கறிஞர்களுடனும் ஆலோசனை நடத்தியிருந்தார்.

    ஓபிஎஸ் கடிதம்

    ஓபிஎஸ் கடிதம்

    இந்த நிலையில் இன்றைய தினம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில் பொதுக் குழு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அது போல் பொதுக் குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு கோரி எடப்பாடி தரப்பு காவல் நிலையத்தை நாடியுள்ளது.

    பொதுக் குழு நடக்குமா நடக்காதா

    பொதுக் குழு நடக்குமா நடக்காதா

    இதனால் அதிமுக பொதுக் குழு நடக்குமா நடக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அரசியல் விமர்சகர்களிடம் கேட்ட போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரே வழிதான் உண்டு. ஒன்று ஓபிஎஸ்ஸின் கோரிக்கையை ஏற்று பொதுக் குழு கூட்டத்தை ஒத்தி வைப்பது. இதை செய்யாமல் அவர் வீம்புக்காக பொதுக்குழுவை கூட்டினால் ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் பொது குழு கூட்ட முடியாது என்பது வேறு விஷயம்.

    சட்டம் ஒழுங்கு பிரச்சினை

    சட்டம் ஒழுங்கு பிரச்சினை

    ஒரு வேளை கூட்டினால் தேவையற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்கும். தேவையில்லாத வன்முறை கட்டவிழ்க்கப்படும். சாதாரண ஆலோசனை கூட்டத்திலேயே அதிமுக தொண்டர் ஒருவர் ரத்தம் பார்த்தார். எனவே பொதுக் குழுவை ஒத்தி வைப்பதுதான் நல்லது.

    நீதிமன்றம்

    நீதிமன்றம்

    கடந்த 7 நாட்களாக அதிமுகவில் நடைபெறும் அமளி துமளிகளை தமிழக அரசு பார்த்துக் கொண்டுதான் வருகிறது. எனவே சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் இருக்க தமிழக அரசே (காவல் துறை) அதிமுக பொதுக் குழு கூட அனுமதி தராமலும் போகலாம். ஒரு வேளை எல்லாவற்றையும் மீறி எடப்பாடி தரப்பு பொதுக் குழுவை கூட்டினால் ஓபிஎஸ் தரப்பு நேராக நீதிமன்றத்தின் கதவுகளை தட்டும். இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்குதான் மேலும் மேலும் சிக்கல் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+