நாராயண் திருப்பதி போட்ட ட்வீட்.. அழிவு, ரஷ்யா, அணுஉலை.. "காப்பாத்துங்க சார்".. கொந்தளித்த ட்விட்டர்
நாராயண் திருப்பதி செர்பிய அலை உலை குறித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: உக்ரைன் - ரஷ்ய போர்குறித்து தமிழக பாஜகவின் நாராயண் திருப்பதி ஒரு ட்வீட் போட, அத்தனை பேரும் கொந்தளித்து வந்துவிட்டார்கள்.. !
இந்த செர்பிய அணுஉலையைதான் ரஷ்யா கைப்பற்றி உள்ளது.. உக்ரைன் தலைநகர் கிவிலிருந்து வடக்கே சுமார் 130 கிமீ தொலைவில் இயங்கி வந்தது இந்த செர்னோபில் என்ற அணு உலை..
1991-ல் சோவியத் ஒன்றியம் சிதறுவதற்கு முன்பு உக்ரைன் அதன் ஒரு பகுதியாக இருந்தது... 4 உலைகள் கொண்ட இந்த அணு உலையிலிருந்து மின்சார உற்பத்தி நடந்துவந்தது.

கதிரியக்க பொருட்கள்
ஆனால் 1986 ஏப்ரல் 25-ல், 4ம் எண் உலையில் ஒரு மின் பொறியியல் சோதனையை நடத்த சில என்ஜினியர்கள் முடிவு செய்தனர்.. ஆனால் அவர்கள் அவ்வளவாக அனுபவமில்லாதவர்கள்.. எனவே, அவர்கள் மேற்கொண்ட சோதனையின்போது, எதிர்பாராதவிதமாக அணு உலையில் பெரும் வெடிப்பு ஏற்பட்டது.. இதனால், 50 டன்னுக்கும் அதிகமான கதிரியக்க பொருட்கள் காற்றில் பரவ ஆரம்பித்துவிட்டன.

ஜப்பான்
அங்கு 32 பேர் உயிரிழக்க காரணமாக இருந்ததே இந்த விபத்துதான்.. அந்த ஆலையில் இருந்து வெளியேறிய கதிரியக்கத்தால் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளால் இதுவரை 5,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது கொடுமையின் உச்சம்.. ஹிரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளைவிட பல மடங்கு பாதிப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியதாக உலக நாடுகள் விமர்சித்தன.. கடந்த 2000-ல் அந்த அணு உலை மூடப்பட்டுவிட்டது.

எரிபொருள் கட்டமைப்புகள்
இருந்தாலும் அங்கு நிறைய கழிவுகள் தேங்கி கிடப்பதாக கூறப்படுகிறது.. அதிகமான கதிரியக்கம் கொண்ட 20,000 எரிபொருள் கட்டமைப்புகள் அங்கு பராமரிக்கப்பட்டும் வருகின்றன.. ஒருவேளை இந்த அணு உலையை சுற்றி சண்டைகள் நடந்தாலோ, உலையில் தவறுதலாக எது நடந்தாலும் மிகப்பெரிய வெடிவிபத்து நிகழகூடும் என்ற அச்சம் அந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.. இதுகுறித்துதான், தமிழக பாஜகவின் திருப்பதி நாராயணன் ஒரு ட்வீட் போட்டு தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்..

அணுஆலை விபத்து
அதில், "சோவியத் யூனியன் பிளவுபட்டதற்கு காரணமான உலகின் மிக கொடூரமான அணு ஆலை விபத்து ஏற்பட்ட செர்னோஃபில் அணு ஆலையை கைப்பற்றியது ரஷ்யா. இந்த அணு ஆலை தற்போது உபயோகத்தில் இல்லை என்பதால், 1986இல் நிகழ்ந்ததை போல ஒரு பேரழிவு நடப்பதற்கான வாய்ப்பில்லை. ஆனால், ரஷ்ய படைகள் சோவியத் யூனியனில் அங்கமாயிருந்த அதன் தோழமை நாடான பெலாரஸ் வழியாக உக்ரைன் தலைநகர் கீவ் வை சுலபமாக சென்று கைப்பற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரஷிய ராணுவம் விரைவில் கீவ் நகரை கைப்பற்ற கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.

ஏர்இந்தியா
இதற்கு ஏராளமான ட்விட்டர்வாசிகள் திரண்டு, தங்கள் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.. "அங்கே இருந்து தாய்நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் வழியை பாருங்கள் என்றால் இங்கே கதாகாலட்சேபம் செய்து கொண்டு இருக்கீங்க... இந்திய நாட்டின் பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவை தனியாருக்கு தாரை வார்த்து விட்டு இப்ப அவங்க இந்த நெருக்கடியான காலத்தில் எரிகின்ற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்கிற கணக்கா 1.5 லட்சம் விமான கட்டணம் நிர்ணயித்து இருக்காங்களாம்.
Recommended Video

காப்பாற்றுங்கள்
ஏர் இந்தியா பொதுத் துறை நிறுவனமாகவே நீடித்து இருந்தா வளைகுடா போரின் போது மக்களை மீட்டது மாதிரி சுலபமா மீட்டு இருக்கலாம். மத்திய அரசு செய்ய வேண்டிய வேலையை தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களின் பயண செலவை ஏற்கும் என அறிவித்துள்ளது. இப்போ எதுக்கு விளக்கம்.. அங்கே மாணவர்கள் தவிக்கிறார்களாம்.. போய் காப்பாற்றுங்கள்" என்று ஆதங்க கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications