"ரெக்கார்ட்".. இன்று நாள் முழுக்க இதுதான் போகஸ்.. சென்னை வானிலையில் என்ன நடக்கும்? வல்லுனர் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பெய்யும் கனமழை குறித்து சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

சென்னையில் அதிகாலையில் இருந்து மிக தீவிரமாக மழை பெய்து வருகிறது. சென்னையில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 14 செமீ மழை பெய்துள்ளது. அதேபோல் பின் வரும் மாவட்டங்களில் அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது.

What will happen in Chennai Weather today amid heavy rain and What can be expected?

நந்தனம் - 11.7 செ.மீ. தரமணி - 11.7 செ.மீ. செம்பரம்பாக்கம் 10.9 செ.மீ - மேற்கு தாம்பரம் - 8 செ.மீ. நுங்கம்பாக்கம் - 6.7 செ.மீ. சென்னை தவிர்த்து காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முறையே 7.9 செ.மீ. மற்றும் 5 செ.மீ. என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது.

விடாத மழை: அதிகாலையில் வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது விடாமல் பெய்யும் மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் பெய்யும் கனமழை குறித்து சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில்., தமிழ்நாட்டில் இன்று நாள் முழுக்க இடி மின்னல் மழைதான் போகஸ் ஆக இருக்க போகிறது.

சென்னைக்கு அருகே கிழக்கு பக்கத்தில் இருந்து பிரஷ்ஷாக வந்து கொண்டு இருக்கும் மழை மேகங்கள் காரணமாக சென்னையில் மீண்டும் மழை தொடரும். தற்போது பெய்து வரும் மழை நிற்கும் முன் சென்னையில் கூடுதல் மழை பெய்யும்.

What will happen in Chennai Weather today amid heavy rain and What can be expected?

மேலடுக்கு காற்று வங்கக்கடல் மேல் நிலவி வருகிறது. இதுதான் சென்னைக்கும், புதுச்சேரிக்கு நீண்டு கொண்டு இருக்கிறது. இதனால் சென்னை, புதுச்சேரி மழைக்கான ஹாட் ஸ்பாட்டாக மாறி உள்ளது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சென்னையில் இப்படி கனமழை பெய்ய போகிறது.

சென்னையில் இடியுடன் கூடிய கனமழை அதிகாலை 7 மணிக்கு கிராஸ் ஆகும். கிழக்கு பக்கத்தில் இருந்து இந்த மேகங்கள் வரும். அதேபோல் மழை மேகங்கள் சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கு திசையில் நகர்ந்து, சென்னையின் தென் பகுதிகளில் கனமழையை கொடுக்கும். செங்கல்பட்டில் கனமழை பெய்யும்.

கனமழை விட்டாலும் லேசான மழை, சாரல் மழை விடாது. அந்த வகையான மழைகள் காலை 9 மணி வரை கூட தொடரும். சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் 138 மிமி மழை பதிவாகி உள்ளது. இது அதிகாலை 5.30 மணிக்கு பதிவான மழை. இதன் மூலம் சென்னை ஜூன் மாதத்தில் இரண்டாவது அதிகபட்ச 24 மணிநேர மழையைப் பதிவு செய்துள்ளது.

What will happen in Chennai Weather today amid heavy rain and What can be expected?

1996 ஜூன் 14 அன்று அதிகபட்சமாக 282.2 மி.மீ. பதிவானது. அந்த ரெக்கார்ட் இன்று உடைக்கப்பட வாய்ப்பில்லை. அண்ணாநகரில் 110 மிமீ மழை பதிவாகி உள்ளது, புதிய மழை மேகங்கள் நகர்ந்து சென்னைக்கு வருவதால் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த மழை தொடரும் என்பதால் அவசியமின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.

வானில் இருந்து தரைக்கு மின்னல்கள் வருவதால் அடுத்த இரண்டு மணிநேரங்களுக்கு வீட்டுக்குள்ளேயே இருங்கள், என்று சென்னை ரெயின் வானிலை அமைப்பு கூறி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+