டெலிட் செய்யப்பட்ட சாட்ஸ்.. கருப்பு ஆடுகளுக்கு குறி பத்ம சேஷாத்ரி ராஜகோபாலன் கைதானது எப்படி? பின்னணி
சென்னை: பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டது எப்படி, இனி இந்த விவகாரத்தில் என்ன நடக்கும் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
சென்னை கேகே நகரில் உள்ள பிரபல பத்ம சேஷாத்ரி பள்ளி தற்போது பாலியல் புகாரில் சிக்கி உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், ஜாதி ரீதியாக ஒடுக்கப்பட்டதாகவும் புகார்கள் இணையத்தில் வைக்கப்பட்டு வருகிறது.
குவியல் குவியலாக பலர் இந்த புகார்களை அடுக்கி வருகிறார்கள். பத்ம சேஷத்ரி பள்ளியின் ஆசிரியர்களில் ஒருவரான ராஜகோபாலன் இதில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவிகள்
மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், ஆன்லைன் வகுப்பில் அரை நிர்வாணமாக வந்ததாகும், மாணவிகளிடம் தவறான முறையில் பாலியல் ரீதியாக மெசேஜ் செய்ததாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இணையத்தில் வைக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் இன்று விசாரிக்கப்பட்ட ராஜகோபாலன் 5 மணி நேர விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்டார்.

எப்படி கைது
பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டது எப்படி என்று விவரம் வெளியாகி உள்ளது. முதலில் இவரை கைது செய்த போதே, இவரின் லேப்டாப் மற்றும் போன் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் சாட் செய்தது, இவரின் சர்ச் ஹிஸ்ட்ரி, மெசேஜ்கள், புகைப்படங்கள் அனைத்தையும் சோதனை செய்யும் முடிவில் போலீசார் இதை பறிமுதல் செய்தனர்.

ஆனால் என்ன
ஆனால் சுதாரிப்பாக இருந்த ராஜகோபாலன் தனது சாட்கள் அனைத்தையும் டெலிட் செய்துள்ளார். ஆனாலும் இவரின் போனில் இருந்து சில போட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் இவரின் சாட்களை சைபர் கிரைம் உதவியோடு மீட்கும் முடிவில் உள்ளனர். இதனால் அந்த சாட்களும் கண்டிப்பாக கைப்பற்றப்படும்.

ஆதாரம்
இதுபோக இவருக்கு எதிராக இணையத்தில் உலவும் வலுவான புகைப்பட ஆதாரங்களும் உள்ளன. அதோடு இவரின் கால் ஹிஸ்ட்ரியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்குமூலத்தில் இவர் தவறை ஒப்புக்கொள்ளும் வகையிலேயே பேசி உள்ளார். அதோடு, பத்ம சேஷாத்ரி பள்ளியில் பல கருப்பு ஆடுகள் இருப்பதாக பற்ற வைத்து இருக்கிறார் ராஜகோபாலன். இதனால் அந்த பள்ளியில் இன்னும் சிலர் சிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

மாணவிகள்
இதன் பொருட்டே பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளிக்க முன் வர வேண்டும் என சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. பெற்றோர்கள் முன்வந்து புகார் தர வேண்டும். இன்னும் பலர் இதில் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுவதால் இப்படி அழைப்பு விடுத்துள்ளனர்.

விசாரணை
நாளை முதல் இந்த விசாரணை விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. மற்ற ஆசிரியர்கள், சில மாணவிகள், பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. ராஜகோபால் வாக்குமூலத்தில் சொன்ன கருப்பு ஆடுகளை கண்டுபிடிக்கும் வகையில் விசாரணை நாளையில் இருந்து முடுக்கிவிடப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிகின்றன.












Click it and Unblock the Notifications