இன்னும் 4 நாள்தான்.. ஆதார் கார்டு வச்சு இருக்கவங்களுக்கு போன மெசேஜ்.. மாற்றியதும் என்ன நடக்கும்?
சென்னை: ஆதார் விவரங்களை திருத்த கால அவகாசம் செப்டம்பர் 14ம் தேதி வரை கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆதார் கார்டை அப்டேட் செய்தவுடன் என்ன நடக்கும்.. எந்த மாதிரியான ஆதார் கார்டுகளை மாற்ற வேண்டும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி புதிய இறுதி நாள் செப்டம்பர் 14ம் தேதியாக மாற்றப்பட்டு உள்ளது. தனிப்பட்ட கணக்குகளை பயன்படுத்தி இந்த ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி வரை விவரங்களைத் திருத்தலாம்.

உங்கள் ஆதார் கார்டு பழையது என்றால்.. அதாவது முன்னதாக கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் ஆதார் விவரங்களை நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதிதான் அதற்கான கடைசி வாய்ப்பு என்று கூறப்பட்டது. அதற்கு முன்னதாக வெளியிட்ட அறிவிப்பில் டிசம்பர் 14 வரை இலவசமாகச் செய்யலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் இந்த அவகாசம் மார்ச் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பின் இதற்கான அவகாசம் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது புதிய இறுதி நாள் செப்டம்பர் 14ம் தேதியாக மாற்றப்பட்டு உள்ளது.
என்ன நடக்கும்?: நீங்கள் புதிய கார்டை அப்டேட் செய்த பின் உங்களுக்கு புதிய கார்டு ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்படும். அதை நீங்கள் பிரிண்ட் எடுக்கலாம். இல்லை என்றால் பிவிசி கார்டு போன்ற கார்டுகளை ஆர்டர் செய்யலாம். சில நாட்களில் அது உங்கள் ஆதார் விலாசத்திற்கு வந்து விடும்.
மோசடி: ஆதார் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, 10 வருடங்களாக ஆதார் வைத்திருப்பவர்களை, சமீபத்திய தகவலுடன் விவரங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI வலியுறுத்தி உள்ளது.
ஆதார் முக்கியம்: ஆதார் கார்டு தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்டு முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.
மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியம் ஆகி உள்ளது. இந்த நிலையில்தான் ஒருவேளை ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு இலவச ஆன்லைன் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 10 ஆண்டுகளாக ஆதார் கார்டை அப்டேட் செய்யாதவர்கள், விலாசம் மாறியவர்கள், ஆதார் கார்டில் தவறான விவரங்கள் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
ஆதார் மாற்றம்: உதாரணமாக உங்களின் பெயர் தவறாக இருந்தால் அல்லது வேறு விவரங்கள் தவறாக இருந்தால் ஆன்லைன் மூலம் அதை எளிதாக மாற்ற முடியும். இதற்கான வசதிகளை ஆதார் அமைப்பு ஏற்படுத்தி கொடுத்து உள்ளது.
UIDAI ஏற்படுத்தி கொடுத்துள்ள வசதிகள் மூலம் எளிதாக இந்த விவரங்களை மாற்ற முடியும். இனி மார்ச் 14ம் தேதி வரை இந்த மாற்றங்களை செய்ய கட்டணம் இல்லை. ஆன்லைன் மூலம் எளிதாக செய்ய முடியும். நேரில் ஆதார் மையத்தில் செய்வதற்கு மட்டும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
கட்டணம் இல்லை: myAadhaar பக்கம் மூலம் எளிதாக இவர்கள் விலாசத்தை மாற்றும் வசதி இருந்தது. ஆனால் தற்போது அந்த அவகாசம் நிறைவிற்கு வர உள்ளது. நேற்றோடு இந்த அவகாசம் முடிந்த நிலையில் இனி விலாசத்தை மாற்ற கட்டணம் செலுத்த வேண்டும்.
இச்சேவையை நேரிடையாக பெற இப்போதும் கட்டணம் உள்ளது. ஆனால் இதுவரை ஆன்லைன் வழியாக இலவசமாக பெற முடிந்தது. .
uidai.gov.in அல்லது https://myaadhaar.uidai.gov.in/genricPVC மூலம் ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் ஐடி அல்லது என்ரோல்மென்ட் ஐடி மூலம் இந்த அட்டையின் விலாசத்தை புதுப்பிக்க முடியும். இதற்கு கட்டணம் இப்போது இல்லை.. மை ஆதார் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை வைத்து லாகின் செய்து, அதிலேயே பணம் செலுத்தாமல் விவரங்களை மாற்ற முடியும்.
இணையதளம் மூலம் இலவசமாக திருத்திக் கொள்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 14 வரை உள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications