Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

18 எம்எல்ஏக்கள் இழப்பு.. இப்போது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கேட்க வாய்ப்பு உள்ளதா?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப்பட்டது செல்லும்.. ஹைகோர்ட் 3வது நீதிபதி அதிரடி தீர்ப்பு- வீடியோ

    சென்னை: 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வந்துள்ளதால், சட்டசபை பலம் குறைந்துள்ளது.

    18 எம்எல்ஏக்கள் வழக்கில் தினகரன் ஆதரவாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், என்ன நடக்கும், பாதகமாக தீர்ப்பு வந்தால் என்ன நடக்கும். ஆட்சி கலையுமா, காப்பாற்றப்படுமா என்றெல்லாம் பல்வேறு விவாதங்கள் காலை முதல் நிலவின.

    3வது நீதிபதியின் தீர்ப்புபடி, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும். எனவே, அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்த ஒரு பார்வையை இங்கே பார்க்கலாம்.

    214 எம்எல்ஏக்கள்

    214 எம்எல்ஏக்கள்

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தால் அந்த தொகுதிகள், திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலியாக உள்ளதால், தற்போது சட்டசபை பலம் 214 என்ற அளவில் உள்ளது. தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் சபாநாயகர் தீர்ப்பு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பெரும்பான்மையை நிரூபிக்க 108 எம்எல்ஏக்கள் இருத்தல் போதுமானது.

    சட்டசபை பலம் இதுதான்

    சட்டசபை பலம் இதுதான்

    அதிமுகவிடம் 109 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. எனவே ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாது. 20 தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெற்ற பிறகே, ஆட்சிக்கு ஆபத்தா இல்லையா என்பது குறித்து தெரிய வரும். ஆனால் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வந்தால்தான் எடப்பாடி அரசுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருந்தது. ஏனெனில் அப்போது சட்டசபை பலம் 232 ஆக உயர்ந்திருக்கும்.

    சிக்கல்

    சிக்கல்

    நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டு வந்தால், ஆட்சி நீடிக்க 117 உறுப்பினர்கள் தேவைப்படும் என்பதால், 109 எம்எல்ஏக்கள் பலம் கொண்ட எடப்பாடி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கும். சட்டசபையில் திமுக கூட்டணிக்கு 97 இடங்களும், சபாநாயகர் ஒருவர், அமமுகவுக்கு ஒரு இடம், தோழமை கட்சிகளுக்கு 3 இடங்கள் உள்ளன. மேலும் தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 2 பேர் உள்ளனர். இந்த இருவரும் கூட எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்பு இருந்தது.

    என்ன செய்வார் எடப்பாடி

    என்ன செய்வார் எடப்பாடி

    ஆனால் தகுதி நீக்கம் செல்லும் என்றுதான், உத்தரவு வெளியாகியுள்ளது. எனவே எதிர்க்கட்சிகளும் கூட இப்போதைய நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வாய்ப்பில்லை. இடைத் தேர்தலுக்கு முன்பாகவே, ஆட்சியை தக்க வைக்க தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களிடம் எடப்பாடி தரப்பு சமரசமாக போகுமா, அல்லது எதிர்க்கட்சிகளை உடைத்து ஆள் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+