தனுஷ் கேஸ் என்னவாகும்? நயன் ரீல்சுக்கு எதிராக கேரள கோர்ட் தீர்ப்பு.. மீண்டும் மீண்டுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளைப் பயன்படுத்தியது தொடர்பாக வழக்கு சென்னை உயர்நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், இதேபோன்று முன்பே நயன்தாரா கேரளாவில் ஒரு சர்ச்சையில் சிக்கினார். அது தொடர்பாக விசாரணையில் நயனுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அந்த வழக்கிற்கும் இப்போது தனுஷ் வழக்கிற்கும் சில ஒற்றுமைகள் உள்ளன.

தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் நடிகை நயன்தாரா தனது திருமண ஆவணப் படத்தில் 'நானும் ரவுடிதான்' படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளைப் பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து அது தொடர்பாகப் பதிலளிக்கக் கூறி நயன்தாராவுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த விவகாரத்தில் முன்கூட்டியே அறிக்கை விட்டிருந்த நயன்தாரா, 'ஒரு சின்ன காட்சியைப் பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி கேட்பதா?' எனப் பொங்கி எழுந்திருந்தார். மேலும் தங்களின் தனது வெற்றியைப் பார்த்து தனுஷ் பொறாமை கொள்வதாகவும் கூறிய நயன்தாரா தனிப்பட்ட முறையில் அவரை தாக்கி இருந்தார்.

dhanush nayanthara

நயன்தாரா சினிமா வாழ்க்கையில் 'நானும் ரவுடிதான்' திரைப்படம் மிக முக்கியமானது. அந்தப் பயத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய போதுதான் இந்த இருவருக்குமான காதல் மலர்ந்தது. ஆகவே, தனது மண வாழ்க்கை தொடர்பான ஆவணப்படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கிய அந்தப் படத்தின் காட்சிகளைப் பயன்படுத்த விரும்பி இருந்தார் நயன்தாரா. ஆனால், குறிப்பிட்ட காட்சிகளைப் பயன்படுத்த முறையாக அனுமதி பெறாமலே அவர் புரமோ வீடியாவில் பயன்படுத்தி இருந்தார். அது தொடர்பாகவே சர்ச்சை வெடித்திருந்தது.

நயன்தாரா மிகப்பெரிய அளவில் அறிக்கையை விட்டு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் அவருக்கு ஆதரவாக சில நடிகைகள் இன்ஸ்டாகிராமில் லைக் போட்டு இருந்தனர். ஒருசிலர் நேரடியாகவே அவரை ஆதரித்தும் பேசி இருந்தனர். கிட்டத்தட்ட 8 மில்லியன் பேருக்கு மேல் இதுவரை இந்த அறிக்கை போய்ச் சேர்ந்துள்ளது. ஆனால், இதுதொடர்பாக தனுஷ் எந்தவித மறுப்பையும் தெரிவிக்கவில்லை.

இதுவரை அவர் நிறுவனம்தான் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு நேற்று ஏற்றுக் கொண்டு, சில உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கை தனுஷ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி இருந்தார். ஆனால், தனுஷ் எந்த அறிக்கையையும் விடாமல் மவுனமாகவே இருந்து வருகிறார்.

புரமோ வீடியோவில் 3 நிமிடக் காட்சிகள் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், முழு ஆவணப்படத்திலும் 'நானும் ரவுடிதான்' அதிகப்படியான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இந்த வழக்கில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமும் சேர்க்கப்பட்டுள்ளது. நயன்தாரா மற்றும் நெட்ஃபிளிக்ஸ் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் பார்த்தசாரதியும் வழக்கறிஞர் சதீஷ் பராசரனும் ஆஜராகி இருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வழக்கு தொடர்பான அனைவரும் சென்னையில் வசிப்பதால் விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாகக் கூறி நயன் தரப்பைப் பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவும் போட்டுள்ளார்.

dhanush nayanthara

வரும் காலங்களில் இந்த வழக்கு விசாரணை எப்படிப் போகும் எனப் பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதற்கு முன்னதாக எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி படம் இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கியது. இந்தப் படத்தை அஜித்தை வைத்து அவர் திரைக்கதை எழுதி இயக்கி இருந்தார். அதை இந்தியில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்தன. ஆனால், அவருக்கு முன்பாகவே தயாரிப்பாளர் இந்தியில் வெளியிட ஒரு தயாரிப்பாளருக்கு உரிமம் அளித்திருந்தார்.

அதை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா ஒரு வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். அது தொடர்பான தீர்ப்பில் பிரிவு 17 காபிரைட் ஆக்ட் 1957 படத்தின் முதல் உரிமையாளர் தயாரிப்பாளர்தான். அவருக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கிற்கும் தனுஷ் மற்றும் நயன்தாரா வழக்கிற்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. தயாரிப்பாளராக தனுஷிடம் சம்பளம் பெற்றுத்தான் நயன் நடித்துள்ளார். அதேபோலவே சம்பளம் வாங்கிக் கொண்டுதான் விக்னேஷ் சிவன் படத்தை இயக்கியுள்ளார். ஆக, உரிமை என்பது தயாரிப்பாளர் தனுஷுக்குதான் உள்ளது.

இந்தப் பிரச்சினை பற்றி பேசிய வழக்கறிஞர் விக்னேஷ் முத்துக்குமார் சில விளக்கங்களை அளித்திருக்கிறார். அவர், "இந்தப் படத்தில் இடம்பெற்ற காட்சியை அனுமதி பெறாமல் யாரும் பயன்படுத்த முடியாது. அதற்குச் சட்டத்தில் இடம் இல்லை. ஒருவேளை படப்பிடிப்பு தளத்தில் தனிப்பட்ட முறையில் எடுத்த படங்களை சமூக வலைத்தளத்தில் சொந்த காரணங்களுக்காகப் பயன்படுத்தலாம். ஆனால், அதை வணிகமாகப் பயன்படுத்த முடியாது. நயன் விவகாரத்தில் காட்சிகள் வணிகப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அது சட்டப்படி தவறா? என்பதை நீதிபதிதான் முடிவு செய்வார்" என்று கூறுகிறார்.

இதற்கு முன்னதாகவே கேரள நீதிமன்றம் இதேபோன்ற விவகாரத்தில் நயன்தாராவுக்கு எதிரான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதைப் பலருக்கு நினைவு இருக்க வாய்ப்பு இல்லை. நயன் வெளியிட்ட ஒரு ரீல்ஸ் பிரச்சினைக்குக் காரணமாக இருந்தது. அந்த ரீல்ஸில் குறிப்பிட்ட ஒரு பிராண்டை ஊக்குவிப்பதைப் போல் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் இடம்பெற்ற இசை தொடர்பாக அனுமதி பெறவில்லை எனப் புகார் எழுந்தது. இசைக்கு உரிமையாளரான இசையமைப்பாளர் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் குறிப்பிட்ட ரீல்ஸை நீக்க வேண்டும் எனக் கேரள கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதாவது ஒரு படத்தின் இடம்பெற்ற பாடலை அனுமதி பெறாமல் பன்னாட்டு நிறுவனத்தின் பொருளை விளம்பரம் செய்வதற்காகப் பயன்படுத்திய குற்றம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்தச் சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் பெரிய சர்ச்சையை முன்பு கிளப்பி இருந்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+