நிதிஷ் - ஸ்டாலின் உரசல்.. தனித்து நிற்க போகும் மம்தா.. உடைகிறது இந்தியா கூட்டணி? என்ன நடக்குது?
சென்னை: இந்தியா கூட்டணியில் அடுத்தடுத்து நடந்து வரும் மோதல்கள் காரணமாக.. லோக்சபா தேர்தல் 2024 வரை இந்தியா கூட்டணி தாங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பல்வேறு கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கும் இந்தியா கூட்டணியின் 4-வது ஆலோசனைக்கூட்டம் சமீபத்தில் டெல்லியில் நடந்தது. இதில்தான் இந்தியா கூட்டணியின் முதல் மோதல் வெளிப்படையாக நடந்தது. சோனியா காந்தி, ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, நிதிஷ்குமார், லல்லுபிரசாத் யாதவ், சரத்பவார், மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தியில் பேசிய நிதிஷ்குமார்: இந்தியில் நிதிஷ்குமார் பேசிய போது, இந்தி தெரியாத தலைவர்கள் இங்கு இருப்பதால், ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று டி.ஆர்.பாலு சொல்லிய நிலையில், இந்தி தேசிய மொழி ; அதனை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ரீதியில் கோபமாக நிதிஷ் சொல்ல, அது சர்ச்சையானது.
என்ன நடந்தது: இந்த கூட்டத்தில் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், முழுக்க முழுக்க இந்தியில் பேசி இருக்கிறார். இதற்கு மொழிபெயர்ப்பு கேட்டதற்கு நிதிஷ் குமார்.. பொழிபெயர்ப்பை நிறுத்த சொன்னதாகவும்.. ஆங்கில - பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து வெளியேறுங்கள். இந்தியில்தான் பேசுவேன். ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு கொடுக்க கூடாது என்று வெடுக்கென்று பேசியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அவர் ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேசியதாக தெரிகிறது. இந்திய கூட்டணியில் இது பெரிய அளவில் பிளவை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. கடுமையான மனக்கசப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. இது திமுகவிற்கு பெரிய நெருக்கடியாக மாறி உள்ளது. இந்திய கூட்டணியில் இனி திமுக என்ன செய்யும்.. திமுகவிற்கான மரியாதை அங்கே கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வேறு கோணம்: இந்த விவகாரம், வேறு ஒரு கோணத்தில் அலசப்படுகிறது. அதாவது, இந்திய கூட்டணியின் ஆலோசனையையும், இதில் கலந்துகொள்ள டெல்லி சென்ற ஸ்டாலின், அப்படியே மோடியை சந்திக்கவிருப்பதாக சொல்லப்பட்டதையும் வைத்து இந்தியா கூட்டணி தலைவர்கள் அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.
இந்தியை கற்றுக்கொள்ளுங்கள் என நிதிஷ் சொன்னது ஒரு வகையில் இந்தி திணிப்பு போலத்தான். அதனால் நிதிஷ் சொன்னபோது அதை எதிர்த்து ஸ்டாலின் வெளிநடப்பு செய்திருந் தால், ஸ்டாலினின் அரசியல் தேசிய அளவில் எதிரொலித்திருக்கும். ஆனால் அவர் அப்படி செய்யாதது விவாதம் ஆனது.
நிதிஷ் குமார் பதவி: இன்னொரு பக்கம் நிதிஷ் குமார் இதில் பிரதமர் வேட்பாளர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு அந்த பொறுப்பு கிடைக்கவில்லை என்றதும்.. அவர் கூட்டணியை உடைக்க இப்படி எல்லாம் பேசுகிறார் என்று செய்திகள் வந்தன.
இன்னொரு பக்கம் நிதிஷ் குமார் மட்டுமின்றி மமதா பானர்ஜியும் இதில் பிரதமர் வேட்பாளர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் இந்தியா கூட்டணி அப்படி பொதுவாக ஒரு வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதனால் அவரும் அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.
மம்தா ஷாக் அறிவிப்பு; இப்படிப்பட்ட நிலையில்தான், தேசிய அரசியலில் என்ன நடந்தாலும், எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
நாங்கள் மதச்சார்பற்ற கட்சி, மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக தனித்து போட்டியிட்டு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். இந்தியா கூட்டணியில் இருந்தாலும் லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் இருக்கிறோம் .. ஆனால் தனித்து போட்டியிடுவோம் என்று அவர் கூறியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே நிதிஷ் - ஸ்டாலின் உரசல்.. இப்போது மம்தா - காங்கிரஸ் உரசல் ஏற்பட்டு உள்ளது. இந்தியா கூட்டணியில் அடுத்தடுத்து நடந்து வரும் மோதல்கள் காரணமாக.. லோக்சபா தேர்தல் 2024 வரை இந்தியா கூட்டணி தாங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் கொண்ட கட்சிகள் ஒன்றாக இருப்பதால் இந்த கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மமதாவின் கோட்டை தகர்கிறதா? அதிருப்தி எம்பிக்கள் எடுத்த அதிரடி முடிவு! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications