மெத்தனாலால் கல்லீரலில் சுரக்கும் "எமன்"! 12 மணி நேரம் கழித்து வரும் அபாய அறிகுறிகள் என்ன?
சென்னை: கள்ளச்சாராயம் குடித்தால் என்னென்ன அறிகுறிகள் வரும்? அவர்களை காப்பாற்ற முடியுமா உள்ளிட்ட கேள்விகளுக்கு மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர். மேலும் அந்த கள்ளச்சாராயம் உடலுக்குள் போய் என்ன செய்கிறது என்பது குறித்தும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 38 பேர் பலியாகியுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கள்ளச்சாராயத்தை சோதனை செய்த போது அதில் மெத்தனால் இருந்தது தெரியவந்தது.

இந்த சாராயத்தை குடித்த பலருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் ஏற்பட்டன. டாஸ்மாக் மதுபானத்தை வாங்க இயலாததால் குறைந்த விலையில் கிடைக்கும் இது போன்ற விஷச் சாராயத்தை வாங்கி குடிக்கிறார்கள்.
அவர்களுக்கு வயிற்று வலி, ரத்த வாந்தி ஏற்பட்டது. பிறகு கண்கள் மங்கலானது. திடீரென கண்கள் எரிச்சல் ஏற்பட்டு பார்வை தெரியாமல் போனது. பிறகு காது திடீரென அடைத்துவிட்டது. உடல் நடுக்கம் ஏற்பட்டது. இது எதனால் ஏற்பட்டது என்பது தெரிந்து கொள்வதற்குள் மயங்கி விழுந்து இறக்கும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் முதலில் மெத்தனால் குடித்தவுடன் அது உணவுக் குழாயிலிருந்து சிறுகுடல், பெருகுடலுக்கு செல்கிறது. அங்கிருந்து கல்லீரலுக்கு செல்லும். அங்கு அந்த மெத்தனால் இரு நொதிகளை உருவாக்குகிறது. அவை பார்மிக் ஆசிட், பார்மால்டிஹைட். இவற்றில் பார்மிக் ஆசிட் கண்ணுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
அது போல் வயிற்று வலி, வாந்தி ஆகியவற்றையும் ஏற்படுத்தும். பொதுவாக கள்ளச்சாராயம் குடித்தவுடன் எந்த பாதிப்புகளும் வராது. 12 மணி நேரம் ஒன்றும் தெரியாத நிலையில் அதன் பிறகுதான் வயிற்று வலி, வாந்தி, கண் எரிச்சல், பார்வை இரண்டாக தெரிதல், தலைகீழாக தெரிதல் உள்ளிட்டவை ஏற்படும்.
இந்த மெத்தனால் வயிற்றில் இருக்கும் வரை பிரச்சினை இல்லை. இது ரத்தத்தில் கலந்து விட்டால்தான் உயிரிழப்பை ஏற்படுத்தும். ஆனால் கள்ளச்சாராயம் சாப்பிட்டு சில அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
அங்கு வயிற்றை சுத்தப்படுத்தும் முறையை வைத்து மெத்தனாலை வெளியே எடுத்துவிடுவார்கள். ஆனால் எந்த உடல் உபாதையாக இருந்தாலும் நேரம் என்பது முக்கியமானது. எவ்வளவு சீக்கிரத்தில் மருத்துவமனைக்கு செல்கிறோமோ அவ்வளவு நல்லது.
மேலும் இந்த மெத்தனால் என்பது 10 நிமிடத்தில் ரத்தத்தில் கலந்து விடும். இதனால் ரத்தத்தில் அமிலத் தன்மை அதிகரித்துவிடும். பின்னர் மூளைக்கு சென்று கோமாவை ஏற்படுத்தி உயிரிழப்பையும் தரும். இது சிறுநீரகம், நுரையீரல், மூளை, கல்லீரல், இதயம் ஆகிய உறுப்புகளை பாதிக்கும்.
மருத்துவமனைக்கு வந்தால் அவர்களுக்கு ஓமிபிரசோல், என்ற மருந்தை நரம்பில் ஏற்ற வேண்டும். இந்த மருந்து பார்மிக் அமிலம், பார்மால்டிஹைட் ஆகிய நொதிகளை செயலிழக்க வைக்கும். இதனால் பிற உறுப்புகளுக்கு மெத்தனால் பரவுவது தடுத்து நிறுத்தப்படும். ஆனால் இந்த மருந்தில் இருக்கும் பெரிய பிரச்சினை அதிக நினைவிழப்பை ஏற்படுத்தும். மேலும் டயாலிஸிஸ் செய்தும் நோயாளியை காப்பாற்றலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி











Click it and Unblock the Notifications