ஹாப்பி நியூஸ்.. சென்னைக்கு கிடைத்த "பிரேக்".. ஆனால்.. அடுத்த ரவுண்ட் ரெடி! வானிலை எப்படி இருக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என்று வானிலை வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.

வடகிழக்கு பருவமழையின் முதல் நாளில் இருந்தே தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு வாரமாக பிரேக் எடுக்காமல் தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது.

சென்னையில் இரண்டு வாரமும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. அதேபோல் டெல்டா மாவட்டங்கள் மற்ற வட மாவட்டங்களிலும் மழை அடித்து ஊற்றியது.

ஏன் மழை

ஏன் மழை

இரண்டு வாரமாக மழை பெய்ய இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. முதல் வாரம் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்தது. இதனால் சென்னையில் மழை பெய்தது. அந்த சுழற்சி இலங்கை நோக்கி நகர நகர மழையும் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களை நோக்கி நகர்ந்தது. இரண்டாவதாக காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவானது. இந்த தாழ்வு பகுதி காரணமாக மீண்டும் சென்னையில் மழை பெய்தது.

தாழ்வு பகுதி

தாழ்வு பகுதி

அந்த தாழ்வு பகுதி 4 நாட்களுக்கு முன் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறியது. அதன்பின் கரையை கடந்த நிலையில் மழையின் தீவிரம் குறைந்துள்ளது. இதன் காரணமாக முதலில் சென்னையில்தான் கனமழை பெய்தது. அதன்பின் டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடர்ந்தது. தற்போது இரண்டு நாட்களாக தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த தாழ்வு பகுதி காரணமாக பெய்த மழை படிப்படியாக குறையும் வாய்ப்புகள் உள்ளன.

 குறையும்

குறையும்

நேற்று சென்னையில் பெய்த மழைதான் கடைசி. இன்று அதே அளவிற்கான மழை பெய்யாது. அடுத்த 4-5 நாட்களுக்கு மழை சென்னையில் பிரேக் எடுக்கும். அதேபோல் பெரும்பாலான வட தமிழ்நாடு மாவட்டங்களுக்கு மழை பிரேக் எடுக்க உள்ளது. டெல்டா மாவட்டங்களில் நேற்று மழை பெய்யவில்லை. அடுத்த 4-5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யாது. தென் மாவட்டங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.

மழை

மழை

வரும் நவம்பர் 16 ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. புதிய தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ஆனால் இதன் காரணமாக மழை என்பது 4-5 நாட்கள் கழித்துதான் ஏற்படும். அதுவரை தமிழ்நாட்டிற்கு மழையில் இருந்து பிரேக் என்றே கூறலாம். முக்கியமாக சென்னைக்கு தேவையான பிரேக் கிடைக்கும்.

 பிரேக்

பிரேக்

இந்த தாழ்வு பகுதி இலங்கையில் இருந்து தூரமாக அந்தமான் கடல் அருகே ஏற்பட உள்ளது. இதனால் அது புயலாக மாறும் வாய்ப்புகளும் உள்ளன. அதாவது இது புயலாக அல்லது வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனால் இந்த பிரேக்கிற்கு பின் தமிழ்நாடு முழுக்க கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. பெரும்பாலும் இந்த தாழ்வு பகுதி தமிழ்நாடு நோக்கித்தான் வரும் என்று வானிலை மாடல்கள் தெரிவிக்கின்றன.அடுத்த தாழ்வு பகுதி முழுமையாக உருவான பிறகே தமிழ்நாட்டில் மழை பெய்யும். அதுவரை பெரும்பாலான இடங்களில் லேசான மழையே பெய்யும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+