கலைஞர் உரிமை தொகை விரிவாக்கம்.. என்ன நடந்தாலும்.. இந்த 2 பிரிவினருக்கு ரூ.1000 தரப்படாது.. தகவல்
சென்னை: கலைஞர் உரிமை தொகை விரிவாக்கம் ஜூன் மாதம் முதல் தொடங்க உள்ள நிலையில் இதில் 2 பிரிவினருக்கு ரூ.1000 கண்டிப்பாக வழங்கப்படாது என்று அரசு பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டாலும் விரிவாக்கத்தின் போதும் பணம் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 1 கோடியே 25 லட்சம் பெண்கள் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நேரடியாக பயன் பெற்று வருகின்றனர். இதில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர். அதன்படி கூடுதலாக 10 - 15 லட்சம் பேர் வரை இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட உள்ளனர். அதன்படி இந்த பயனாளிகள் எண்ணிக்கை 1.45 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது. இதற்கான புதிய விண்ணப்ப தேதி தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி ஜூன் முதல் வாரம் விண்ணப்பம் செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. பெரும்பாலும் ஜூன் 1ம் தேதியே புதிய விண்ணப்பங்கள் ரிலீஸ் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு அனுமதி பெறப்பட்டதும்.. விண்ணப்பம் ரிலீஸ் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் போன முறை நிராகரிக்கப்பட்டு மீண்டும் விண்ணப்பம் செய்பவர்கள்.. வட்டாட்சியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டு பேருக்கு வழங்கப்படாது
. இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டாலும் விரிவாக்கத்தின் போதும் பணம் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வார்டு உறுப்பினர்களுக்கு பணம் வழங்கப்படும். ஆனால் மற்ற அதிகார பதவிகளான கவுன்சிலர், எம்எல்ஏ, எம்பி, ஊராட்சி, நகராட்சி தலைவர்கள், மேயர்களின் மனைவிகளுக்கு பணம் தரப்படாது.
இரண்டாவதாக அரசு பணிகள், கார்ப்பரேஷன் பணிகளில் ஓய்வு பெற்று ரூ.3000 பென்சன் போன்ற குறைந்த பென்சன் வாங்கினால் கூட அவர்களுக்கு இந்த உரிமை தொகை வழங்கப்படாது. கலைஞர் உரிமை தொகை விரிவாக்கம் ஜூன் மாதம் முதல் தொடங்க உள்ள நிலையில் இந்த 2 பிரிவினருக்கு ரூ.1000 கண்டிப்பாக வழங்கப்படாது என்று அரசு பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முக்கியமான நல்ல செய்தி
இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தில் குடும்ப தலைவலி அல்லாதவர்களுக்கு பணம் கிடைக்கும். ஒரு வீட்டில் அப்பா, 2 மகன், 3 மகள் இருக்கிறார்கள். யாருக்கும் திருமணம் ஆகவில்லை. அம்மா உயிரோடு இல்லை என்றால் வீட்டில் உள்ள 21 வயது நிரம்பிய முதல் பெண்ணுக்கு பணம் தரப்படும். அவர் குடும்ப தலைவி இல்லையென்றாலும் மகளிர் உரிமை தொகை மூலம் பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து அவர்கள் தகுதியானவராக இருந்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். இதன் மூலம் மீண்டும் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் விவாகரத்து பெற்றவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும். அவர்கள் தனி ரேஷன் கார்டு பெற்றுள்ள நிலையில் கண்டிப்பாக மகளிர் உரிமை தொகை கிடைக்கும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது
ஒரு ரேஷன் கார்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு மட்டுமே பணம் கிடைக்கும். இரண்டாவது பெண்ணுக்கு பணம் தரப்பட்டது. இதற்காக இரண்டாவது பெண் தனியாக ரேஷன் வாங்கினாலும் கிடைக்காது. ஏனென்றால் ஒரே வீட்டில் இருந்தால் சோதனையின் போது பணம் தர கூடாது என்று முடிவு எடுக்கப்படும். கள ஆய்வில் ஒரே வீட்டில் இரண்டு ரேஷன் இருந்தால் அதில் இரண்டாவது ரேஷன் நீக்கப்படும்.
அரசு பென்ஷன் பெற்றால் அவர்களுக்கு கண்டிப்பாக பணம் கிடைக்காது. அரசின் வேறு வகையான வருமானம் பெற்றாலும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது. அரசு ஊழியர் அல்லாத கணவர்களின் மனைவிகளுக்கு பொருந்தும். அவர்களுக்கு பணம் வழங்கப்படும். புதிதாக திருமணம் ஆகி ரேஷன் கார்டு பெற்றவர்கள். அரசு ஊழியர் அல்லாத பட்சத்தில் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications