"கை" வைத்த திமுக.. அலறிய அதிமுக.. அதென்ன "டாக்குமெண்ட்"?.. கசியும் சீக்ரெட்கள்.. பரபரக்கும் டெல்லி
டெல்லிக்கு அதிமுக மேலிடம் ஏன் சென்றது என்ற விவகாரம் சூடு பிடித்துள்ளது
சென்னை: எதற்காக டெல்லி பயணம் என்பது குறித்து, எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் வெளிப்படையாக பேட்டி தந்தாலும், பின்னணி காரணமாக ஒரு சில தகவல்கள் கசிந்து வருகின்றன.
தற்போதைய சூழலில், சசிகலா ஆடியோ விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.. மற்றொருபுறம் அவைத்தலைவர் உடம்பு சரியில்லாமல் உள்ளதால், அடுத்த அவைத்தலைவர் தேர்வு குறித்த விவகாரமும் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த சாய்ஸில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த 3 மாஜிக்களில் ஒருவருக்கு தரலாம் என்பது எடப்பாடியின் எண்ணமாக இருக்கிறது.. ஆனால் இதற்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டை போட்டு வருவதாக கூறப்படுகிறது.

கட்டுப்பாடு
இதற்கு நடுவில் கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வர சசிகலா முயன்று வருவதால், இதனால் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியும் பெருகி வருகிறது.. இப்படி பல்வேறு பிரச்சனைகளில் அதிமுக சிக்கி உள்ள நிலையில்தான் டெல்லிக்கு அதிமுக மேலிடம் பயணமானார்கள்.. எந்தவித முன்னறிவிப்புமின்றி இவர்கள் டெல்லிக்கு சென்றது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதிமுக
ஆனால், இவ்வளவும் அதிமுகவுக்குள் நடக்கும் உட்கட்சி பூசல் என்பதால் எதற்காக டெல்லிக்கு செல்ல வேண்டும், பிரதமரிடம் சொந்த கட்சி பிரச்சனைகளை பற்றி பேசி என்ன ஆக போகிறது? என்ற சந்தேகங்களும் எழுந்தன.. எனினும் தாங்கள் எதற்காக பிரதமரை சந்தித்து பேசினோம் என்று எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் செய்தியாளர்கள் முன்னிலையில் விளக்கம் தந்தனர்.

வணக்கம்
செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியபோது, அனைத்திற்கும் பதில் சொன்ன இவர்கள் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லவில்லையாம்.. அதிமுகவில் ஒற்றை தலைமை பற்றி பேசினீர்களா என்று கேட்டதற்கு, வணக்கம், நன்றி என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமி உள்பட எல்லாருமே நழுவி கொண்டார்கள் என்று கூறப்படுகிறது.

திமுக
இதனிடையே, ஓபிஎஸ் - எடப்பாடி இருவரும் எதற்காக டெல்லி சென்றார்கள் என்று ஓரிரு தகவல்களும் கசிந்து வருகின்றன.. திமுகவை பற்றி பிரதமரிடம் பேசவில்லை என்று இவர்கள் சொன்னாலும், உண்மையிலேயே திமுக தரப்பு குறித்துதான் சில விஷயங்களை பேசினார்களாம்..

கொந்தளிப்பு
எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்ததுமே அதிமுக சீனியர்கள் கொந்தளித்துவிட்டனராம்.. அதிலும் சிவி சண்முகம், வெளிப்படையாகவே அமைச்சர் செந்தில்பாலாஜியை விமர்சித்து காட்டமாகி உள்ளார்.. "செந்தில்பாலாஜி மீதான ஊழல்களை வெளிக் கொண்டதால்தான், இப்போது விஜயபாஸ்கர் மீது கடுப்பாகி உள்ளார்.. அதனாலேயே இந்த ஊழல் நடந்துள்ளதால், திமுகவை திருப்பி அடிக்கும் வகையில், ஏதாவது போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்யலாம்" என்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரிடம் சொன்னாராம்.

ரெய்டு
ஆனால், எடப்பாடி பழனிசாமிதான், பொறுமை காக்கும்படி தெரிவித்தாராம்.. ரெய்டில் பெரிதாக எதுவும் சிக்கவில்லை என்று அதிகாரிகளே சொல்லி உள்ள நிலையில், ஆர்ப்பாட்டம் தேவையில்லை.. வேண்டுமானால், திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை என்று விவகாரத்தை திருப்பி மக்களிடம் கொண்டு போகலாம் என்று எடப்பாடி யோசனை சொன்னாராம். அதன்பிறகே, ரெய்டை கண்டித்து அறிக்கைகளும் பேட்டிகளும் வெளியாகி உள்ளதாக ஒரு தரப்பில் சொல்கிறார்கள்.

ஊழல்கள்
இன்னொரு தரப்பிலோ, திமுகவின் ஊழல் புகார்களை எடுத்து சொல்லவே ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் டெல்லிக்கு சென்றதாக தெரிவிக்கிறார்கள்.. கடந்த அதிமுக ஆட்சியின்போது, திமுக மீதான ஊழல் புகார்கள் லிஸ்ட் எடுக்கப்பட்டிருக்கின்றன.. ஆனால், அவைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.. இப்போது அந்த லிஸ்ட்டை எடுத்து கொண்டு பாஜக மேலிடத்திடம் இவர்கள் தந்ததாகவும், அதனடிப்படையில் திமுக மீதும் ரெய்டு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறப்படுகின்றன..

சசிகலா
அதாவது அதிமுக மீது ரெய்டு நடத்தினால், திமுக தப்பிலும் ரெய்டு நடத்தப்பட வேண்டும் என்பதையே வலியுறுத்தவே இவர்கள் டெல்லி சென்றார்களாம்... இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், இவர்கள் டெல்லி சென்றது சசிகலா விவகாரமாகமோ, நீட் விவகாரமாகவோ, பெட்ரோல் டீசல் உயர்வு விவகாரமாகவோ இல்லை என்று மட்டும் தெரிகிறது..!












Click it and Unblock the Notifications