சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லாத்தையும் விடுங்க.. ரஜினி செய்ததிலேயே பெரிய தப்பு எது தெரியுமா.. சாட்சாத் இது மட்டும்தான்..!

ரஜினி தன்னுடைய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: நல்லவர்.. வல்லவர்.. நாலும் தெரிஞ்சவர் என்று அதிகமாக நம்புகிறவர்கள்கூட, சில தருணங்களில் தங்களையும் அறியாமல் தவறுகளை செய்து விடுகிறார்கள்.. தவறுகள் என்று சொல்வதைவிட, வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளாதவர்கள் என்றே சொல்லலாம்.. இதில் ரஜினியும் விதிவிலக்கு அல்ல!

ரஜினிக்கு ஆரம்பத்திலிருந்தே நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.. வேறு எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் கிடைக்காத வரப்பிரசாதம் இது!

உண்மையில் எம்ஜிஆருக்கு கூட இந்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எதிர்ப்புகளே அதிகம் இருந்தது.. நெருக்கடியும் பலமடங்கு அதிகம்.. ஆனாலும் அவர் வருகையினால் அந்த அரசியல் முழுமையானது.. நிரம்பி தழும்பியது.. கடைசிவரை அந்த பிடியை எம்ஜிஆர் நழுவவிடவே இல்லை. அதுதான் எம்ஜிஆர்.. அதனால்தான் அவர் மட்டுமே எம்ஜிஆர்!

ஒன்னு இல்ல, 2 இல்ல.. ஒரு நாளைக்கு 20 மாத்திரை போடுறேன்.. மக்கள் மன்றத்தினரிடம் ரஜினிகாந்த் உருக்கம்?ஒன்னு இல்ல, 2 இல்ல.. ஒரு நாளைக்கு 20 மாத்திரை போடுறேன்.. மக்கள் மன்றத்தினரிடம் ரஜினிகாந்த் உருக்கம்?

 அரசியல் கட்சிகள்

அரசியல் கட்சிகள்

ஆனால், ரஜினி அப்படி இல்லை.. அரசியல் கட்சிகள் தெரிந்தோ தெரியாமலோ ரஜினியை பெரிய சக்தியாக உருவகப்படுத்தின.. பில்டப் கொடுத்தன... இதற்கு மீடியாவும் முக்கிய காரணம் என்பதை சத்தியமாக மறுக்க முடியாத.. அதற்கு மேல் அவரது ரசிகர்கள் வெறித்தன அன்பால் விழுந்து கிடக்கின்றனர்.. இத்தனை சூழலும் ஒன்றாக சேர்ந்து வந்தது ரஜினிக்கு.. அதை மக்களும் நம்பி அவர் பின்னால் அணிவகுக்கத் தயாராகவே இருந்தனர். ஆனால் எல்லா வாய்ப்புகளையும் ரஜினி தட்டிக் கழித்தார். அதாவது ஆரம்பத்திலிருந்தே அவர் கள நிலவரத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை.

 ஆர்வம்

ஆர்வம்

முக்கியமாக, மக்களிடம் தனக்குள்ள உண்மையான செல்வாக்கைக் கூட அவர் புரிந்து கொள்ளமுன்வரவில்லை முயலவில்லை... காரணம் அடிப்படையில் அவருக்குள் அரசியல் ஆர்வம் இல்லை என்பதே... ஒன்றுமில்லாத ஓரளவு பிரபலமான புள்ளிகளே, அரசியல்வாதிகள் போல தங்களை மாயஜாலம் செய்து காட்டிக் கொள்ளும் நிலையில், அரசியலுக்கான அடித்தளத்தையும், தன் செல்வாக்கையும் ஆராயாமல் விட்டுவிட்டார் ரஜினி.

 உணரவில்லை

உணரவில்லை

சரி பெரிய தலைவர்கள் எல்லாம் மறைந்து விட்டனர்.. நாம அரசியலுக்கு வருவோம் என்று அவர் முடிவெடுத்தபோது.. ரொம்பத் தாமதமாகி விட்டது.. அதாவது காலம் கடந்திருந்தது... அதையும் கூட அவர் உணரவில்லை... இதை உணராமல்தான் 234 தொகுதிகளிலும் போட்டி என்று அறிவித்தார்.. இப்படி அறிவித்தபோது, ரஜினிக்கான மாஸ் வெகுவாக குறைந்திருந்தது என்பதே உண்மை.. அப்படியும் கூட அவருக்கு இன்னும் ஒரு மெகா வாய்ப்பும் கிடைத்தது.. அதுதான் 2019 லோக்சபா தேர்தல்.

போட்டி

போட்டி

அந்த தேர்தலில் அவர் நிச்சயம் போட்டியிட்டிருக்க வேண்டும். அதில் போட்டியிட்டிருந்தால் அவரது பலம் என்ன என்பது அவருக்கு தெரிந்திருக்கும்... இதை கமல்ஹாசன் மிகச் சரியாக செய்தார்.. முடிவெடுத்த வேகத்தில் போட்டியிட்டு 4 சதவீத வாக்குகளையும் அள்ளினார்.. அதாவது தன்னை நிரூபித்தார்.. ரஜினி செய்யத் தவறியதை கமல் செய்தார்.

 கூட்டணி

கூட்டணி

இதுதான் ரஜினியிடமும் இருந்திருக்க வேண்டும்.. ஏதாவது ஒரு தேர்தலை சந்தித்திருந்தால், அந்த தேர்தலில் முடிவுகளில் கூட மாற்றங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு... மேலும் ஒரு அடித்தளமாகவும் அது அமைந்திருக்கும்... இந்தத் தேர்தலை தைரியமாக சந்திக்கும் தெம்பும் அவருக்குக் கிடைத்திருக்கும்... நேரில் மக்களை பார்க்காமலேயே கூட பிரச்சாரம் செய்யவும் வசதியாக இருந்திருக்கும்! இந்த வாய்ப்பையும் தவற விட்டு விட்டார்!!

 அடித்தளம்

அடித்தளம்

இதுதான் ரஜினியிடமும் இருந்திருக்க வேண்டும்.. அந்த தில் இருந்திருக்க வேண்டும். ஏதாவது ஒரு தேர்தலை சந்தித்திருந்தால், அந்த தேர்தலில் முடிவுகளில் கூட மாற்றங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு... மேலும் ஒரு அடித்தளமாகவும் அது அமைந்திருக்கும்... இந்தத் தேர்தலை தைரியமாக சந்திக்கும் தெம்பும் அவருக்குக் கிடைத்திருக்கும்... நேரில் மக்களை பார்க்காமலேயே கூட பிரச்சாரம் செய்யவும் வசதியாக இருந்திருக்கும்! இந்த வாய்ப்பையும் தவற விட்டு விட்டார்!!

திமுக

திமுக

இது எல்லாவற்றிற்கும் மேலாக, அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்றார் ரஜினி.. ஆனால் இவர் சொன்ன அந்த வெற்றிடம் இப்போது பக்காவாக நிரப்பப்பட்டு விட்டது என்பதை ரஜினி இன்னமும் அறியவே இல்லை.. திமுகவில் ஸ்டாலின் அதை அழகாக நிரப்பி விட்டார்... லோக்சபா தேர்தல் முடிவே அதற்கு சாட்சி.. கருணாநிதி கூட செய்யாத சாதனையாக எம்பி தேர்தலில் அசத்தி விட்டது திமுக.

எடப்பாடியார்

எடப்பாடியார்

அதேபோல அதிமுகவிலும் இபிஎஸ் அசைக்க முடியாத சக்தியாக மாறி விட்டார்... இபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் இணைந்து அதிமுகவை அருமையாக வழி நடத்தி வருகின்றனர். அதிமுக சிந்தாமல் சிதறாமல் உள்ளது. இந்த வெற்றிடத்தையும் அவர்களே நிரப்பி விட்டனர்... ரஜினிக்கு இங்கும் இனி வேலையில்லை. ஆனால், வெற்றிடம் நிரம்ப காரணமாகி இருந்தது சாட்சாத் ரஜினியேதான்!

 வாழ்வா, சாவா?

வாழ்வா, சாவா?

ஸ்டாலினுக்கு இது வாழ்வா சாவா என்று கூறினார் ரஜினி.. இப்போது அவருக்குத்தான் வாழ்வா வீழ்வா என்ற பிரச்சினை வந்துள்ளது. அரசியலுக்கு வந்தால் மட்டுமே அவரது எஞ்சிய செல்வாக்கும் சரியாமல் இருக்கும். வராமல் குட்பை சொன்னால் அவர் ஹீரோ என்ற அந்தஸ்தை இழந்து சாதாரண நடிகராக மாறி விடும் அபாயம் உள்ளது.. பழைய ரஜினியாக அவரால் வலம் வர முடியாது என்பதும் எதார்த்தமானது..!

 துணிச்சல்

துணிச்சல்

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு தலைவர் என்பவர், தவறுகளை தட்டிக் கேட்க துணிச்சல் இருக்க வேண்டும்.. ஒரு தலைவன் தன்னுடைய எதிர்ப்பில் இருந்துதான் உருவாகிறான்.. எம்ஜிஆர் அன்று கலைஞரை கேள்வி கேட்டு எதிர்த்தார்.. தனி சக்தியாக உருவெடுத்தார்.. மறைந்த ஜெயலலிதா, கலைஞரை கேள்வி கேட்டு எதிர்த்தார்.. அவர் தனி சக்தியாக உருவெடுத்தார்.. ஆனால்,ரஜினி இதுவரை யாரை எதிர்த்திருக்கிறார்? யாரை கேள்வி கேட்டிருக்கிறார்? கேள்வி கேட்காமல் உருவாவதில்லை எந்த மாற்றமும்.. ஏற்றமும்! எதிர்க்காமல் உருவாவதில்லை எந்த தலைவரும்!

English summary
Whats the Rajinikanths's biggest mistake
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X