Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பூனைக்குட்டி" வருதே.. ரெடியாகும் "பன்னீர் + புஷ்பங்கள்".. பழனிசாமிக்கு இனி தலைவலி போல? துண்டுசேருமா

எடப்பாடிக்கு ரிசல்ட் சறுக்கலை தந்துள்ள நிலையில், பாஜக அரசியல் ஆரம்பமாகும் என்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இத்தனை நாட்களும் சத்தமேயில்லாமல் அமைதி காத்துவந்த ஓபிஎஸ், தற்சமயம், மெகா பிளான் ஒன்றை கையில் எடுத்துள்ளார்.. நடக்க போகும் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் என்னதான் செய்ய போகிறார்? என்பதை எடப்பாடி தரப்பும் மிக நுட்பமாக கவனிக்க துவங்கி உள்ளதாம்..!!

ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, இந்த இடைத்தேர்தலில் பல கணக்குகளை போட்டு வந்தார்.. எதிர்பார்த்ததே வேறு.. ஆனால் நடந்தது வேறு ஒன்று.

பாஜக கேட்டுக் கொண்டதையடுத்து, ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை இடைத்தேர்தலில் வாபஸ் பெற்றுள்ளார்.. இரட்டை இலை எடப்பாடி தரப்புக்கு சென்றுள்ளது.. இது ஓபிஎஸ்ஸுக்கு பெருத்த பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது..!!

 பலஹீனங்கள்

பலஹீனங்கள்

மேலும், இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவாக பிரச்சாரத்துக்காகவாவது தங்களை அழைப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தவருக்கு எடப்பாடி பழனிச்சாமியும் சரி, பாஜ தரப்பும்சரி எந்தவித அழைப்பும் விடுக்காதது அதிர்ச்சியையும், அதிருப்தியையும் தந்திருந்ததாக தெரிகிறது... இந்த இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட எல்லா வியூகங்களும், ஓபிஎஸ்ஸை பலவீனப்படுத்த எடுத்து கொண்ட முயற்சியாகவே பார்க்கப்பட்டும் வந்தது. அதாவது, "கூட்டணி" பெயரை பணிமனை பேனரில் பெயர் மாற்றியதுகூட, தன்னிடம்தான் கட்சி உள்ளது என்பதை ஓபிஎஸ் தரப்புக்கு காட்டிக்காள்வதற்காகத்தான் என்றார்கள் அரசியல் விமர்சகர்கள்..

 திடீர் வாபஸ்

திடீர் வாபஸ்

தேர்தலில் போட்டியிடாமல், விட்டுக்கொடுத்தது எங்களின் பெருந்தன்மை என்று ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து சொன்னாலும், இந்த இடைத்தேர்தல் விஷயத்தில் ஓபிஎஸ் தரப்பு குழம்பி போய்நின்றதுதான் நிஜம் என்கிறார்கள்.. கடைசிவரை பிரச்சாரத்துக்கு வரும்படி எடப்பாடி பழனிசாமி அழைப்பும் விடுக்கவில்லை.. அவர் அழைப்பு விடுக்காதவரை, ஓபிஎஸ்ஸும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு செல்ல முடியாமலேயே போய்விட்டது.. தமிழக தலைவர்கள் எல்லாம் ஈரோட்டில் மையம் கொண்டுள்ள நிலையில், ஓபிஎஸ் சத்தமில்லாமல் இருந்தார்.. பிரச்சாரத்துக்கு செல்வீர்களா? என்று ஓபிஎஸ்ஸிடம் செய்தியாளர்கள் ஒருமுறை கேட்டார்கள்.. கண்டிப்பாக எல்லோரிடமும் சொல்லிவிட்டு தான் பிரச்சாரத்திற்கு போவேன் என்றும் ஓபிஎஸ் சொல்லியிருந்தார்.

 வாய்ஸ் மெசேஜ்

வாய்ஸ் மெசேஜ்

ஒருவேளை ஓபிஎஸ் பிரச்சாரம் செய்வதானால், என்ன சொல்லி வாக்கு கேட்பார்? யாருக்காக வாக்கு சேகரிப்பார்? என்ற அடுத்த சந்தேகமும் பலருக்கும் எழாமல் இல்லை.. இப்படிப்பட்ட குழப்பத்தை, ஓபிஎஸ் ஆதரவாளரும், மூத்த தலைவருமான மருது அழகுராஜ், தன்னுடைய ஒரு பேட்டியிலும் அப்போதே வெளிப்படுத்தி இருந்தார். "இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் கடுமையான தண்டனையை கொடுப்பார்கள்... ஆனால் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.. இப்படியொரு குழப்பமான மனநிலைக்கு தொண்டர்கள் ஆளாகியுள்ளார்கள்" என்று கூறியிருந்தார்.

 ஸ்டார் லீடர்ஸ்

ஸ்டார் லீடர்ஸ்

ஆனால், இரட்டை இலைக்காக, தேர்தலில் வேட்பாளரை வாபஸ் பெற்றநிலையில், பிரச்சாரத்துக்கும் செல்லாமல் இருந்தால், அது தொண்டர்களிடம் மேலும் அதிருப்தியை உண்டாக்கிவிடும் என்பதையும் ஓபிஎஸ் தரப்பு உணராமல் இல்லை.. அதனால்தான், இரட்டை இலைக்கு வாக்கு கேட்கலாம் என்ற யோசனையும் கிளம்பியது.. ஸ்டார் பேச்சாளர்கள் லிஸ்ட்டில் பெயர் இல்லாததால் அறிக்கை மூலம் இரட்டை இலைக்கு வாக்கு கேட்க ஓபிஎஸ் திட்டமிட்டிருந்தாராம்.. அதேபோல, செல்போன் வழியாக, குரல் பதிவின் மூலமும் இரட்டை இலைக்கு வாக்கு கேட்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது..

 லிஸ்ட்டில் நேம்

லிஸ்ட்டில் நேம்

பிரச்சாரத்துக்கு யாருமே அழைக்காத நிலையில், இப்படி ஒரு ஐடியாவை ஓபிஎஸ் டீம் எடுத்திருந்தது.. இதன்மூலம் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்பது போலாகிவிடும், தொண்டர்களின் மதிப்பையும் இழக்க தேவையில்லை என்றும் கணக்கு போடப்பட்டது. ஆனால், இப்படி எந்த ஐடியாவையும் ஓபிஎஸ் தரப்பு செயல்படுத்தவும் இல்லை. பிரச்சாரமும் செய்யவில்லை. இரட்டை இலைக்கு ஓட்டும் கேட்கவில்லை.. இடைத்தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது. எனினும், ஓபிஎஸ் மீதான நம்பகத்தன்மையை இது குறைத்துவிட்டதாகவே கருதப்பட்டது..

 செங்குந்தர் ஓட்டு

செங்குந்தர் ஓட்டு

சின்னம் கிடைக்காமல், ஒருவேளை எடப்பாடி + ஓபிஎஸ் 2 அணிகளும் சுயேட்சையாக களத்தில் நின்றிருந்தால், அது எடப்பாடிக்கு ஒருவகையில் பின்னடைவாக இருந்திருக்குமாம்.. அதுமட்டுமல்ல, எடப்பாடி நிறுத்தியுள்ள வேட்பாளர் தென்னரசு கொங்கு சமூகத்தை சேர்ந்தவர்.. ஆனால், இந்த தொகுதியில் செங்குந்த முதலியார் சமூகத்தினரின் வாக்கு வங்கி பிரதானமாக உள்ளது.. இதை கணக்கு செய்துதான், முதலியார் சமூகத்தைச் சேர்ந்த செந்தில் முருகனை வேட்பாளராக நிறுத்தியிருந்தார் ஓபிஎஸ்.. அந்த முதலியார் வாக்குகளை, நிச்சயம் ஓபிஎஸ்ஸால் கணிசமாக பெற்றிருக்க முடியும், அதை ஓபிஎஸ் தவறவிட்டுவிட்டாரே என்ற வேதனையில் நொந்துபோனார்கள் ஈரோடு ஓபிஎஸ் ஆதரவாளர்கள்..

 செங்குந்தர் வாக்கு

செங்குந்தர் வாக்கு

அந்த அதிருப்தியில், அவரிடமிருந்து விலகி, நேராக எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டிலேயே சந்தித்து அந்த அணியிலும் இணைந்து கொண்டனர். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸின் ஈரோடு அரசியல் கடுப்பை உண்டாக்கியிருந்தது. எனினும் ஓபிஎஸ்ஸுக்கு இதுவும் ஒரு பிளஸ்தான் என்கிறார்கள் அரசியல் விமர்சர்கள்.. எப்படியும் ஆளும்கட்சிதான் இடைத்தேர்தலில் வெற்றி பெற போகிறது என்பதால், எடப்பாடி மண்ணை கவ்வ நேரிடும் என்பது முன்னே கணிக்கப்பட்டுவிட்டது.. அப்படி தேர்தலில் பின்னடைவை சந்திக்கும்போது, எடப்பாடியால் வெற்றி பெற முடியவில்லை என்பதை வலியுறுத்தியே, இரட்டை தலைமை விவகாரத்தை மீண்டும் கிளப்பலாம் என்பதே ஓபிஎஸ் டீமின் தந்திரமாக இருந்து வருகிறதாம்..

 அசைகிறதே அச்சாணி

அசைகிறதே அச்சாணி

இதுவே அதிமுக ஒன்றாக இருந்திருந்தால், திமுகவை வீழ்த்தியிருக்கலாமே, அதனால், ஒருங்கிணைந்த அதிமுக இருந்தால்தான், திமுகவை வீழ்த்த முடியும் என்ற முழக்கத்தை தமிழக பாஜகவும் இனி கையில் எடுக்க முனையக்கூடும்.. அதுமட்டுமல்ல, கூட்டணி கதவு திறக்காதா என்று காத்து கிடக்கும் டிடிவி தினகரனுக்கும் இது ஒரு நல்வாய்ப்பாக அமையும் என்கிறார்கள்.. அதாவது, எடப்பாடி பழனிசாமியின் இந்த இடைத்தேர்தல் சறுக்கலை வைத்தே, ஒருங்கிணைந்த அதிமுக என்ற விவகாரத்தை மீண்டும் கையில எடுக்க, ஓபிஎஸ் டீம் + பாஜக + அமமுக போன்றவை எல்லாம் ஜரூர் வேகத்தில் தயாராகும் என்கிறார்கள்.. இனிமேல்தான் பூனைக்குட்டி வெளியே வர போகுது என்கிறார்கள்.. எனினும், இதற்கெல்லாம் எடப்பாடி அசைவாரா? பணிவாரா? பாய்வாரா? தெரியவில்லை.. பார்ப்போம்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+