தமிழ்நாடு.. ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் வருகிறது.. வல்லுநர் குழுவுடன் நாளை ஸ்டாலின் மீட்டிங்
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் மேலும் பல தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நாளை, மருத்துவர்கள் குழு ஆலோசனை நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஜூன் 21-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 27 மாவட்டங்களில் அதிக தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் சற்று குறைவான தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
தளர்வு அதிகம் வழங்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மாவட்டங்களுக்கு உள்ளே நகர பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதி வழங்கலாம் என்று மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

மருத்துவ வல்லுநர் குழு
இருப்பினும் ஊரடங்கு உத்தரவு தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பு வெளியிடும் முன்பாகவும் மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்துவது கடந்த ஆட்சி காலம் முதல் வழக்கமாக இருந்து வருகிறது .அதன்படியே முதல்வர் ஸ்டாலின் தற்போது டெல்லியில் இருப்பதால் அவர் சென்னை திரும்பிய உடன் நாளை மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

நகர பேருந்துகள்
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு நாளை மாலையே நகரப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அறிவிப்புகள் வெளியாக கூடும் என்று தெரிகிறது. நகர பேருந்துகளில் 50% பயணிகளை மட்டும் அனுமதிப்பது என்றும் அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்துகளை இயக்க அனுமதிப்பது என்றும் தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று கூறப்படுகிறது.

இ பதிவு
தற்போது மாவட்டங்கள் இடையே பயணிப்பதற்கு வாகனங்களுக்கு இ-பதிவு நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. எனவே மாவட்டங்களில் இடையே பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது மாவட்டத்துக்கு உள்ளே மட்டும் பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது.

11 மாவட்டங்கள்
அதிலும், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து அனுமதி கிடைக்காது என்று கூறப்படுகிறது ஒருவேளை மருத்துவ வல்லுநர் குழு அந்த 11 மாவட்டங்களிலும் கூட பஸ் போக்குவரத்தை அனுமதிக்கலாம் என்று அறிவுரை வழங்கினால் அதற்கும் தமிழக அரசு சம்மதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக அரசு விருப்பம்
தமிழக அரசைப் பொருத்த அளவில் கூடுதலாக தளர்வு வழங்குவதற்கு விரும்புகிறது இதன் மூலமாக பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பது அரசு விருப்பம் ஆனால் மருத்துவ வல்லுநர் குழு தமிழக அரசு முன் மொழியும் பல்வேறு தளர்வுகளுக்கு கடந்த காலங்களில் அனுமதி வழங்கவில்லை ஆனால் பஸ் போக்குவரத்து விஷயத்தில் கண்டிப்பாக அவர்கள் அனுமதி வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக தமிழக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications