ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை.. நீங்க “செலக்ட்” ஆகிட்டீங்களா? உறுதிபடுத்தும் SMS எப்போது வரும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தேர்வாகியுள்ளார்களா? இல்லையா? என்பதை தெரிவிக்கும் எஸ்.எம்.எஸ். எப்போது வரும் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. அதுபற்றி விரிவாக பார்ப்போம்.

நாளை மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்க உள்ளது. இந்த தொகையை பெற தகுதியான பெண்கள் யார், தகுதியற்றவர்கள் யார் என தமிழ்நாடு அரசு கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. அதன் அடிப்படையில் இதற்கான முகாம்கள் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டன.

When did you receive SMS regarding Rs.1000 Magalir Urimai thogai scheme?

இந்தத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற ஜூலை 24 ஆம் தேதி முதல் முதல் ஆகஸ்டு 5 ஆம் தேதி வரை முதல் கட்ட முகாம்கள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக ஆகஸ்டு 14 ஆம் தேதி வரை 2 வது கட்டமாகவும். மேற்சொன்ன இரண்டு கட்டங்களிலும், விடுபட்டவர்களுக்கு ஆகஸ்டு 18 முதல் 20 ஆம் தேதி வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும் என அரசு தெரிவித்து உள்ளது.

ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம் என்றும், மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் எனவும் அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

"வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்படும் நேர்வுகளில், சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் வழி கள ஆய்வு அறிக்கையினைப் பெற்று விசாரணை செய்வார்.

இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும். வருவாய் கோட்டாட்சியர் பயனாளிகளின் தகுதி மற்றும் தகுதியின்மைகள் தொடர்பாக தனி நபர்களின் மூலம் வரப்பெறும் புகார்கள் குறித்த விசாரணை அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் வழியாகப் பெறப்படும் புகார்கள் மேல் முறையீட்டு மனுக்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறைகளைப் பின்பற்றி விசாரிக்கப்படும்." என அரசு கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+