Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமித்ஷாவின் கணக்கே வேற.. திரும்ப திரும்ப அசைந்த தாமரை.. பார்வையை பாஜக மீது திருப்பும் திமுக, அதிமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பிரச்சாரம், இன்றும் தொடர்கிறது. இது, தமிழக அரசியலில் கூடுதல் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி வருகிறது.

எம்பி தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேசிய தலைவர்களும் தமிழக பிரச்சாரங்களுக்கு படையெடுத்து வந்துகொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தமிழகம் வந்திருக்கிறார்.

When is Amit Shah campaigning in Kanniyakumari Constituency and what are the Tamil Nadu BJPs next Plan

மதுரை நேதாஜி சாலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நேற்று நடைபெற்றது. அப்போது சாலையில் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள், பாஜகவினரும் திரண்டு வந்து அமித்ஷாவுக்கு வரவேற்பு அளித்தனர்.. கொடிகளை ஏந்தியவாறு உற்சாகத்துடன் கையசைக்கும் தொண்டர்களின் வரவேற்பை அமித்ஷா ஏற்றுக்கொண்டார்.

பிரச்சாரம்: இந்த ரோடு ஷோவில் கையில் தாமரையை வைத்திருந்தார் அமித்ஷா.. அதனை தொண்டர்களிடம் காட்டி கையசைத்தவாறே இருந்தார்.. பிறகு, தொண்டர்கள் தந்த தாமரை மாலை, தலைப்பாகையை வேட்பாளர் ராம சீனிவாசனுக்ககு அமித்ஷா அணிவித்தார். தொடர்ந்து வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு ஆதரவாக அமித்ஷா வாக்கு சேகரிப்பிலும் ஈடுப்பட்டார்.

அப்போது பேசிய அமித்ஷா, தமிழத்தின் பெருமையை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பறைசாற்றி வருபவர் பிரதமர் மோடி மட்டுமே. என்னால் தமிழில் பேச முடியவில்லையே என்பதற்காக மன்னிட்டு கேட்டுக்கொள்கிறேன். தமிழக மக்கள் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர், இந்த முறை தமிழக மக்கள் தாமரை பட்டனை அழுத்த வேண்டும். இங்கு கூடியிருக்கும் கூட்டம் 100 சதவீத வாக்குகளாக மாற வேண்டும்" என்றார்.

தக்கலை: இந்நிலையில், இன்று காலையில் மதுரையில் இருந்து அமித்ஷா, 9.15 மணிக்கு திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சென்று பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.. பின்னர், திருவனந்தபுரம் சென்று விமானத்தில் திருச்சி வந்து ஓட்டலில் மதிய உணவு முடித்து ஓய்வு எடுக்கிறார்.

அதேபோல, மதியம் 3 மணிக்கு நாகை பாஜக வேட்பாளர் ரமேஷை ஆதரித்து பொதுக்கூட்டத்திலும், மாலை 6.30 மணிக்கு தென்காசி லோக்சபா தொகுதியில் பிரச்சாரத்திலும் பங்கேற்கிறார். இந்த தொகுதியில் பாஜக கூட்டணியில் தமமுக தலைவர் ஜான்பாண்டியன் போட்டியிடும் நிலையில் அமித்ஷா அவருக்காக பிரச்சாரம் செய்ய போகிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பல் தலைமையில் பலத்த பாதுகாப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன..

பிரச்சாரம்: மொத்தம் 5 தொகுதிகள், அதாவது மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி, நாகை, தென்காசி தொகுதிகளை டார்கெட் செய்துள்ள நிலையில், இன்றைய தினமும் அமித்ஷாவின் பிரச்சாரம் தொடர்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+