Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 + பாயிண்ட்ஸ்.. "கிளம்பி வந்துடுங்க".. யாரந்த 3 பேர்.. பாஜக மேலிடமே சொல்லிடுச்சாம்.. குழம்பிய வாசன்

ஜிகே வாசனிடம் முக்கிய கோரிக்கையை பாஜக மேலிட தலைவர்கள் விடுத்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜகவை சமாதானப்படுத்தி ஒன்றிணைக்கும் முயற்சியில், வாசன் இறங்கி உள்ளதாக சொல்லப்படும் நிலையில், தமாகா குறித்து புது செய்திகள் கசிந்து வண்ணம் உள்ளன.. என்ன நடக்கிறது மேலிட பாஜகவில்?

அதிமுக - பாஜக மோதல்கள் வலுத்து வருவதால், 2 கட்சிகளும் இணக்கமாக செல்ல வேண்டும் என்று தன்னுடைய பேட்டிகளில் தவறாமல் குறிப்பிட்டு வேண்டுகோள் விடுத்து வருகிறார் தமாகா தலைவர்.
இதன் அடுத்தக்கட்டமாக, இரு கட்சிகளையும் சமாதானம் செய்து, இணைத்து வைக்கும் வேலையிலும் இறங்கியிருக்கிறார் வாசன்.. இதற்காகவே, பிரதமர் மோடியை கடந்த வாரம் சந்தித்து, நேரில் சென்று, சுமார் 20 நிமிடங்கள் தனியாகவும் பேசியுள்ளார்..

நெருக்கம் இணக்கம்

நெருக்கம் இணக்கம்

தமிழக பாஜக - அதிமுகவுக்குள் என்னதான் நடக்கிறது என்று வாசனிடம் பிரதமர் மோடி அப்போது கேட்டறிந்தாராம்.. அதற்கு வாசன், நடந்து வரும் விவகாரங்களை ஒன்றுவிடாமல் விளக்கியதுடன், "இந்த மோதலை அப்படியே வளரவிடக்கூடாது, அதை உடனே சரி செய்ய வேண்டும், அதிமுக இல்லாமல், திமுகவை வீழ்த்தவே முடியாது... இந்த முறை தேசிய அரசியலில் ஸ்டாலின் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.. வரும் எம்பி தேர்தலில், மத்தியில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், துணை பிரதமராக வேண்டும் என்பது, முதல்வர் ஸ்டாலினின் திட்டம்.. அதனால் தான், நாடு முழுதும் வெற்றி பெற முயற்சிப்பதாக பேசி வருகிறார்.. ஆனால், திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது, அதை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றால் எம்பி தேர்தலுக்கு வலுவான கூட்டணி வேண்டும், அதற்கு அதிமுக அவசியம்" என்றெல்லாம் வாசன் சொன்னாராம்.

துணை பிரதமர்

துணை பிரதமர்

அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட மோடி, திமுக அரசின் செயல்பாடுகள் குறித்தும் வாசனிடம் விசாரித்தாராம்.. இவ்வளவும் நடந்து முடிந்துள்ள நிலையில்தான், 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் அண்ணாமலை பேசியிருந்தது மிகப்பெரிய குழப்பத்தையும் அதிர்ச்சியையும் பாஜகவுக்குள் ஏற்படுத்திவருகிறது.. "தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். அதிமுக உடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். பாஜகவை வளர்த்தெடுக்கத்தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்க வேண்டும்.. நான் தேசிய மேனேஜர் கிடையாது" என்று அண்ணாமலை பேசியிருந்தார்.

லாஸ்ட் மினிட்

லாஸ்ட் மினிட்

அண்ணாமலையின் இந்த பேச்சால் தமிழக பாஜக தலைவர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.. உட்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில், அதை சரி செய்தால்தான், அதிமுகவுடனான கூட்டணி சமாச்சாரத்தை சரி செய்ய முடியும் என்ற நிர்பந்தம் தற்போது சூழ்ந்துள்ளதாக தெரிகிறது.. மற்றொருபக்கம் கட்சி தலைமையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் மெல்ல வெடித்து வருவதாக கூறப்படுகிறது.,. கூட்டணி விவகாரம் தொடர்பாக அனைத்தையும் சரிசெய்ய வாசன் முயன்றுவரும்போது, கடைசி நேரத்தில் அண்ணாமலை பேசியுள்ளது டெல்லி வரை எதிரொலித்து கொண்டிருக்கிறதாம்.. எனினும் வாசன், சமாதான முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளாராம்.. அதிமுக விவகாரம் குறித்து வாசன் பேசும்போதுதான், வாசனிடம் இன்னொரு விஷயத்தையும் பாஜக மேலிடம் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

வாசன் நறுக்

வாசன் நறுக்

அதன்படி, கூடிய சீக்கிரம் பாஜகவுக்கு வந்துவிட வேண்டும் என்று வாசனுக்கு அழுத்தம் தரப்பட்டுள்ளதாம்.. அதாவது, பாஜகவுக்கு நெருக்கமானவராக வாசன் கருதப்பட்டு வந்தாலும், தமாகாவை தனித்தே இயக்கி வருகிறார்.. எனினும் கடந்த சில வருடங்களாகவே, "உங்களை மத்திய அமைச்சராக்குகிறோம். பாஜகவில் இணைந்துவிடுங்கள்" என்று பாஜக மேலிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டும், வாசன் அதற்கு செவிசாய்க்கவில்லை.. 3, 4 முறை இதே கோரிக்கையை வாசன் நிராகரித்த நிலையில், 3 மாதங்களுக்கு முன்பு இதே கோரிக்கையை பாஜக மேலிடம் வைத்துள்ளது. ஆனால், இந்த முறை சற்று யோசித்த வாசன், கட்சியினரிடம் கலந்து பேசிவிட்டு சொல்கிறேன் என்று சொல்லி, சென்னையில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற 324 பேரிடமும் இதை பற்றி கருத்து கேட்டிருக்கிறார்..

கைமாறு

கைமாறு

அவர்களில் 70 சதவீதம் பேர், வாசன் மத்திய அமைச்சராக வேண்டும், அதற்கு கைமாறாக, கட்சியை பாஜகவுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்களாம்.. ஆனால், உடனடியாக வாசன் அதற்கு பதிலளித்து, பாஜகவில் இணையப்போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.. எனினும், பாஜக மேலிடம் மறுபடியும் வாசனுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாம். பாஜக தலைவர் நட்டா, அமித் ஷா, பிரதமர் மோடி என 3 பேரையுமே வாசன் சந்தித்து பேசியிருந்த நிலையில், "கட்சியை கலைத்துவிட்டு கூண்டோடு பாஜகவுக்கு வந்துவிடுங்கள்.. கட்சிக்குள் வந்துவிட்டால் மக்களவைத் தேர்தல் முடிந்ததும் உங்களை மத்திய அமைச்சராக்குவது எங்கள் பொறுப்பு" என்றார்களாம்.

மூப்பனார் மகன்

மூப்பனார் மகன்

அதற்கு வாசன், கட்சி நிர்வாகிகளை மறுபடியும் கலந்து பேசிவிட்டு சொல்கிறேன் என்று சொன்னாராம். உடனே அவர்கள், தாராளமாக பேசுங்கள்.. ஆனால், டிசம்பர் மாதத்துக்குள் நீங்கள் பாஜகவுக்குள் வந்துவிடவேண்டும் என்று கூறியிருக்கிறார்களாம்.. வாசனை ராஜ்ய சபாவுக்கு அனுப்பியபோதே, அவரை கட்சிக்குள் இழுத்துப்போடும் பிளானில் பாஜக உள்ளதாக அப்போதே தகவல்கள் வெளியானது.. ஆனால், மூப்பனார் மகன் அதற்கெல்லாம் உடன்படமாட்டார் என்று கருதப்பட்டது.. "காங்கிரஸ் பாரம்பர்யத்தை சேர்ந்த ஜி.கே.வாசன், மதவாதக் கட்சியான பாஜகவில் சேருவதா?" என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான கே.எஸ்.அழகிரி அப்போதே தன்னுடைய எதிர்ப்பையும் வலுவாக காட்டியிருந்தார்..

மூப்பனார்

மூப்பனார்

அதற்கு பிறகு வாசனும் இந்த எண்ணத்தை கைவிட்டிருந்த நிலையில்தான், தற்போது இதே பேச்சு கிளம்பி உள்ளது.. பாஜக அரசுக்கு ஆதரவாகவும், திமுகவுக்கு எதிராகவும் கருத்துக்களை வாசன் கூறிவரும்நிலையில், விரைவில் தன் கட்சியினருடன் கலந்து பேசி, அவர்களின் கருத்தை கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூப்பனார் காலத்திலும் இதுபோலதான் நடந்தது.. தமாகாவை காங்கிரசுடன் இணைக்கும்போது, அப்போதைய முன்னணி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.. அவர்களிடம் முறைப்படி கடிதமும் வாங்கப்பட்டது.. அதுபோலவே, இப்போது வாசனும் நிர்வாகிகளிடம் முறைப்படி கடிதங்கள் வாங்கவும் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+