Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆரம்பமே சொதப்புதே.. அப்பாயிண்ட்மென்ட் கேட்டாராமே ஓபிஎஸ்.. 2 பேரும் சேரப்போறாங்களா? க்ளைமேக்ஸ் வருது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், தன்னுடைய நிலைப்பாடு குறித்து ஓபிஎஸ் இன்று அறிவிக்க உள்ளார்.. இன்னொரு பக்கம் டெல்லிக்கும் கிளம்பி செல்வதாக தெரிகிறது.. என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?

அதிமுக பாஜக கூட்டணி இடையே நடந்து கொண்டிருப்பது உண்மையா? அல்லது அரசியல் ஸ்டண்ட்டா? என்று குழம்பி போயிருக்கிறார்கள் தொண்டர்கள்.. மற்றொருபக்கம் 2 கட்சியிலுமே இந்த முடிவை வரவேற்று பட்டாசுவெடித்து கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். இதில் எது உண்மை?

When is OPS going to Delhi and What is O Panneerselvam and TTV Dinakarans decision on the alliance

அதிமுக + பாஜக இடையேயான கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது... பாஜகவுடனான கூட்டணி முறிந்ததை கொண்டாடும் வகையில், அதிமுக தொண்டர்களும், பாஜக தொண்டர்களும் ஆளுக்கொரு பக்கம் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.

சிறுபான்மை ஓட்டுக்கள்: எனினும் நடந்து கொண்டிருப்பதெல்லாம் பெரும் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.. அதிமுக அறிவித்துள்ள இந்த முடிவுக்கு 2 வகையான காரணங்கள் சொல்லப்படுகின்றன.. ஒன்று, அண்ணாமலை மீதான அதிருப்தி + மற்றொன்று சிறுபான்மையினர் ஓட்டுக்கள். எனினும், சிறுபான்மையினர் ஓட்டுக்களை திமுக லேசில் விட்டுத்தருமா தெரியவில்லை.

அதேசமயம், அதிமுக எடுத்த இந்த முடிவானது, மேலிட பாஜகவை அதிர வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.. உடனடியாக அண்ணாமலையை டெல்லிக்கு வர உத்தரவிட்டது.. அத்துடன் கூட்டணி முறிவு குறித்து பாஜக நிர்வாகிகள் எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கேற்றவாறு, பாஜகவில் எந்த தலைவர்களுமே இதுகுறித்து கருத்து கூறாமல் அமைதி காத்து வருகிறார்கள்.

பாஜக - அதிமுக இருவருமே சேர வேண்டும் என்பதுதான், கூட்டணி கட்சிகளின் விருப்பமாகவும் உள்ளது.. அந்தவகையில், ஜிகே வாசன், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்றோர் மேலிட பாஜகவிடம் சமரசம் பேசிவருவதாகவும் தெரிகிறது.

அண்ணாதுரை: நிலைமை இப்படியிருக்க ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்? என்பதே மிகுந்த ஆர்வத்தை கிளப்பி வருகிறது.. மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா முதல் அண்ணாதுரை வரை அண்ணாமலை விமர்சித்திருந்தநிலையில், இந்த விவகாரங்களில் ஓபிஎஸ்ஸின் ரியாக்‌ஷன் என்ன என்பதையும் அதிமுகவினர் கவனித்து வருகிறார்கள்.

பாஜகவுக்கு இணக்கமாகவும், நெருக்கமாகவும், விசுவாசமாகவும் இருந்து வருபவர் ஓபிஎஸ்.. "ஒரே நாடு ஒரே தேர்தல்" முதல் பாஜகவின் அனைத்து அறிவிப்புகளையும் வரவேற்று சிவப்பு கம்பளம் விரித்தவர் ஓபிஎஸ்.. அவ்வளவு ஏன்? பாஜகவுக்காக, ஈரோடு தேர்தலில் வேட்பாளரையே வாபஸ் பெற வைத்தவர் ஓபிஎஸ்.. பாஜக வெளியேற்றும்வரை, கூட்டணியிலேயே இருப்போம் என்று சொன்னவர் ஓபிஎஸ்.. அந்தவகையில், கூட்டணி சம்பந்தமாகவும் என்ன முடிவெடுக்க போகிறார் என்ற ஆர்வம் எகிறி வருகிறது.

இன்று முடிவு: நேற்றுகூட செய்தியாளர்கள் ஓபிஎஸ்ஸிடம் கூட்டணி குறித்து கேட்டார்கள்.. அதற்கு அவர், "தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து பாஜக முறைப்படி அதிகாரபூர்வமாக அறிவித்தபிறகு, எங்கள் நிலைபாடு குறித்த கருத்தை தெரிவிப்போம்.. அதிமுக - பாஜக கூட்டணி விலகல் குறித்தோ அல்லது பாஜக கூட்டணியில் தொடர்வது குறித்தும் செய்தியாளர்களிடம் நாளை (இன்று) தெரிவிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதனால், ஓபிஎஸ்ஸின் முடிவு என்னவாக இருக்க போகிறது என்று தெரியவில்லை.

அந்தவகையில், இன்று மாலை பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்திக்கிறாராம்.. அப்போது, ஓபிஎஸ் தரப்பின் நிலைப்பாடு, அதிமுக பாஜக கூட்டணி முறிவு ஆகியவைகள் குறித்து விளக்குவார் என சொல்லப்படுகிறது.

பண்ருட்டியார்: சமீபத்தில் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், ", நாங்கள் தனித்து நிற்போம், பாஜகவுடன் ஓபிஎஸ் இல்லை" என்று அழுத்தம் திருத்தமாக கூறி பகீரை கிளப்பியிருந்தார் மூத்த தலைவர் பண்ருட்டியார்.. அதனால், பண்ருட்டியாரின் இன்றைய பேட்டியும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கு நடுவில், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் டெல்லி செல்கிறார்.. எப்படியும் கூட்டணி குறித்து தினகரன் பேசுவார் என்று தெரிகிறது.. அதனால், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் கேட்டுள்ளாராம் ஓபிஎஸ்.. ஆகமொத்தம் பாஜகவுடன் நெருங்கியே இருக்கும் ஓபிஎஸ்ஸின் முடிவு என்ன என்பதை தெரிந்துகொள்ள அதிமுக ஆர்வமாக உள்ளது.

இந்த நேரத்தில் நாம் ஒன்றை நினைவுபடுத்த வேண்டியுள்ளது.. சில நாட்களுக்கு முன்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், நம்முடைய ஒன் இந்தியாவுக்கு பேட்டி தந்திருந்தார். அந்த பேட்டியில், ஓபிஎஸ் குறித்து சில விஷயங்களை பேசியிருந்தார்.

பாஜக: "பாஜகவே எங்களை வெளியே அனுப்பும்வரை, நாங்கள் வெளியே போக மாட்டோம், பாஜகவுடன்தான் இருப்போம் என்று ஓபிஎஸ் சொல்வதே, ரொம்ப கேவலமா இருக்கு. கழுத்தை புடிச்சு பாஜக வெளியே தள்ளினால்தான் போவீங்களா? அப்படின்னா, பாஜகவை விட்டால் உங்களுக்கு வேற வழி இல்லையா? பாஜகவை நம்பித்தான் பொழப்பு ஓடுது என்று பன்னீர்செல்வம் நினைப்பது தவறு.

தினகரன்தான் உங்களுடன் இருக்கிறாரே, தனித்து போட்டியிடுங்கள்.. ஓபிஎஸ் + தினகரன் + சசிகலா 3பேரும் சேர்ந்து, குறைந்த பட்சம் 10 தொகுதிகளிலாவது, வேட்பாளர்களை நிறுத்தினால், நிச்சயம் பாஜக & எடப்பாடி அணி தோல்வியை தழுவும்.. இது பாஜகவுக்கும் நன்றாகவே தெரியும்.. அதனால்தான், கடைசியாக ஓபிஎஸ்ஸை இணைத்து கொள்ளலாம் என்று கணக்கு போடுகிறது.

ஓபிஎஸ் + தினகரன்: இந்த விஷயத்தில் ஓபிஎஸ் + தினகரன் + சசிகலா 3 பேருமே ஏமாந்துவிடக்கூடாது. மக்கள் ஆதரவு தனக்கு உள்ளது என்று ஓபிஎஸ் நிரூபிக்க வேண்டும். அதற்கான தளத்தை இப்போதே உருவாக்க வேண்டும்" என்று ப்ரியன் நம்மிடம் அன்று பகிர்ந்து கொண்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+