திவாகரன் வந்துட்டாரா.. "டேஞ்சரஸ்" எடப்பாடி பழனிசாமி".. லாஸ்ட் மினிட்ல போச்சே.. அந்த 3 பேர் சந்திப்பு?
சென்னை: ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + சசிகலா மூவரும் நாளைய தினம், ஒரே மேடையில் சந்திப்பார்களா? என்ற ஆர்வம் தமிழக அரசியல் களத்தில் எட்டிப்பார்த்துள்ளது.
மூத்த தலைவரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கத்தின், மகன் திருமணம் நாளை நடக்க போகிறது.. ஜூன் 7ம் தேதி தஞ்சாவூரில் மகன் சண்முக பிரபுவுக்கும், யாழினி என்பவருக்கும் திருமணம் நடக்க உள்ள நிலையில், இந்த கல்யாணத்தில்,ஓபிஎஸ் + சசிகலா + டிடிவி தினகரன் + ஓபிஎஸ் என 3 பேரையும் ஒன்றாக இணைக்க போவதாக பிளானில் இருந்தார் வைத்திலிங்கம்.
அதாவது, சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ், ஆகியோர் இந்த விழாவுக்கு தலைமை தாங்க வேண்டும் என்றும் வைத்திலிங்கம் ஆசைப்பட்டார்.. அந்தவகையில், திருமண மேடையில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை ஒன்றாக மேடையேற்றவும் முடிவு செய்திருந்தார்.

வைத்தி அழைப்பு: இதற்காக, அரசியல் தலைவர்கள் பலரையும் அழைப்பு விடுத்தபடியே இருந்தார் வைத்திலிங்கம்.. அப்படித்தான் கடந்த வாரம், அமமுக பொதுச்செயலாளர் தினகரனையும் சந்தித்து திருமண பத்திரிகையை தந்து அழைத்துள்ளார் வைத்தி.. இந்த சந்திப்பு மொத்தம் 30 நிமிடங்கள் நீடித்துள்ளது.. அப்போது, வைத்திலிங்கத்திடம், "காதல் திருமணமா? பெற்றோர்கள் பார்த்து நடத்தும் திருமணமா?" என்றெல்லாம் விசாரித்திருக்கிறார் தினகரன்.
இதனையடுத்து, "சின்னம்மாவுக்கு பத்திரிகை வைத்து விட்டீர்களா? "என்று தினகரன் கேட்டாராம்.. அதற்கு வைத்திலிங்கம், "இன்னும் இல்லை.. இனி தான் வைக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்..
மகன் திருமணம்: தினகரன் சந்திப்பை முடித்துவிட்டு, சசிகலாவை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் வைத்திலிங்கம். அப்போது, வீட்டிற்கு வந்து பத்திரிகை வைக்க நேரம் கேட்டதாக தெரிகிறது.. அநேகமாக இவர்கள் சந்திப்பு ஓரிரு நாளில் நடக்கவிருக்கலாம் என்றுகூட செய்திகள் வலம்வந்தன..
ஓபிஎஸ் தலைமையில் தஞ்சையில் நடக்கும் வைத்திலிங்கம் இல்ல திருமணத்திற்கு சசிகலா வரும்பட்சத்தில் சசிகலா ஓபிஎஸ் சந்திப்பு நிச்சயம் நடக்கும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, தினகரன் + சசிகலா இடையில் இணக்கமான சூழல் சமீபகாலமாக இல்லை என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், இந்த திருமணத்தில் சுமூக சூழல் ஏற்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது..
க்ளைமேக்ஸ்: ஆக, 3 பேருமே அந்த விழாவில் கலந்து கொள்ளவிருப்பதால், அதிமுக அரசியல், நாடாளுமன்ற தேர்தலை எந்த வகையில் எதிர்கொள்வது, பாஜக உறவு குறித்தெல்லாம் நிறைய விவாதிப்பார்கள் என்றும், எடப்பாடிக்கு எதிரான அரசியலை நிச்சயம் பேசுவார்கள், பிறகு, 3 பேரும் சேர்ந்து பத்திரிகையாளர்களை ஒன்றாக சந்திப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின..
ஆக மொத்தம், ஓபிஎஸ்-சசி-தினகரன் சந்திப்பானது, அதிமுக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் லேசான கலக்கம் கவ்வியதாகவும் தெரிகிறது.. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து மோதினால் வலிமையானதாக இருக்கும், எடப்பாடி தரப்பும் வேறு வழியின்றி இறங்கி வருவார்கள் என்று கூறப்பட்டது.

உடைந்த கணக்கு: ஆனால், அத்தனை கணக்குகளும் சுக்குநூறாக உடைந்துவிட்டன.. சசிகலா கல்யாணத்துக்கு வரவில்லையாம்.. இத்தனைக்கும் வைத்திலிங்கம் மீது அபரிமிதமான நம்பிக்கையை சசிகலா வைத்திருக்கிறார்.. ஆனாலும், இந்த கல்யாணத்துக்கு வரமுடியாமல் போவதற்கு காரணம் திவாகரன்தான் என்கிறார்கள்..
காரணம், எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமான போக்கை திவாகரன் கொண்டிருக்கிறாராம்.. இதெல்லாம் தெரிந்தும்கூட, திவாகரனுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் வைத்திலிங்கம்.. அப்படியிருந்தும்கூட, தானும் கலந்து கொள்ளாமல், சசியையும் கலந்து கொள்ள வேண்டாம் என்று தடுத்ததாக சொல்கிறார்கள்..
எப்படியாவது 3 பேரையும் ஒரே மேடையில் ஏற்றிவிட வேண்டும் என்று நிறைய பிளான்களை வைத்திலிங்கம் போட்டிருந்த நிலையில், அத்தனையும் காணாமல் போயுள்ளது..
கடைசி நம்பிக்கை: அப்படியிருந்தும் ஏதாவது ஒரு மாற்றம் கடைசி நேரத்தில் வந்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறாராம். ஏற்கனவே, இப்படித்தான், ஓபிஎஸ்ஸின் திருச்சி மாநாட்டில் இவர்கள் 3 பேரும் இணைய போவதாக சொன்னார்கள்.. அதனால், இந்த மாநாட்டை நடைபெறாத வகையில், பலவேறு வகைகளில் எடப்படி தரப்பில் முட்டுக்கட்டை போடப்பட்டது.. ஆனாலும் மாநாடு வெற்றிகரமாக நடந்தது.. அதனால்தான், இந்த முறை இவர்களின் சந்திப்புக்கு திவாகரன் மூலம் "செக்" வைத்ததாக சொல்கிறார்கள்..
இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. சசிகலாவுக்கு திடீரென "சதைப்பிசைவு" வந்துவிட்டதாம்.. அதனால்தான், கல்யாணத்தில் பங்கேற்க போவதில்லையாம்.. இதில் எது உண்மை என்று தெரியவில்லை.. எதுவானாலும் நாளை கல்யாணத்தில் தெரிந்துவிடும்.. பார்ப்போம்..!!!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications