Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவிலிருந்து கருணாநிதி நீக்கிய போது, பாயாசம் சாப்பிட்ட எம்ஜிஆர்! சத்யா ஸ்டூடியோவில் என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1972 ஆம் ஆண்டு திமுக பொதுக் குழு கூடி, எம்ஜிஆரை கட்சியை விட்டு கருணாநிதி நீக்கிய போது சத்யா ஸ்டூடியோவில் அவர் பாயாசம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். அங்கு நடந்தது என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். திமுகவிலிருந்து தான் நீக்கப்பட்டதற்கு எம்ஜிஆர் அளித்த சூசக பதில் என்ன என்பதையும் பார்க்கலாம்.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம், புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "அமைப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர் பதவிகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டிருக்கிறார்.

sengottaiyan mgr karunanidhi

இதை செங்கோட்டையனும் யூகித்திருப்பார். யூகிக்காமல் நேற்று அப்படி பேசியிருக்க மாட்டார். அரசியல் கெடு எப்போதுமே கேடு விளைவுகளைத்தான் தரும். அதிமுகவுக்கு இது பின்னடைவுதான். காரணம் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கும் மூத்த சீனியர்.

பழைய சம்பவம்

நேற்று பழைய சம்பவங்களை நினைவு கூறி செங்கோட்டையன் சொன்னது எல்லாமே சரிதான். அவர் கூறியது என்ன, "அண்ணா திமுகவிலிருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் கட்சி வலுப்படும், தேர்தலில் வெற்றி பெற முடியும்". இதை அதிமுகவின் கீழ்மட்டத்தில் இருக்கும் அனைவருமே ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து.

செங்கோட்டையன் பொறுப்பு பறிப்பு

தற்போது செங்கோட்டையன் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதற்கு மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார். இதே போல் 1972 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்ட போது பத்திரிகையாளர் ஒருவர் சத்யா ஸ்டுடியோவிற்கே போன் செய்து பேசினார்.

பாயாசம் சாப்பிட்ட எம்ஜிஆர்

அப்போது எம்ஜிஆருக்கான பிரத்யேக போனில், "நான் பாயாசம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என சொல்" இதுதான் திமுகவிலிருந்து நீக்கம் குறித்த கேள்விக்கு எம்ஜிஆரின் பதிலாக இருந்தது. அதாவது மகிழ்ச்சி என்பதை சூசகமாக அவர் அவ்வாறு பகிர்ந்திருக்கிறார்.

மகிழ்ச்சி

செங்கோட்டையனும் எம்ஜிஆர் வழியில் மகிழ்ச்சி என சொல்லியிருக்கிறார். செங்கோட்டையன் கூறிய கருத்துகளில் எதுவுமே தவறில்லை. பிரிந்தவர்களை ஏன் ஒன்றிணைக்க முடியாது என்பதற்கான விளக்கத்தையாவது எடப்பாடி பழனிசாமி அளித்திருக்க வேண்டும். ஆனால் செங்கோட்டையன் வைத்த கெடு என்பது ஒரு வகையில் தவறு.

மாவட்டச் செயலாளர்

ஏனென்றால் ஒரு மாவட்டச் செயலாளர், அமைப்புச் செயலாளராக உள்ள ஒருவர் பொதுச் செயலாளருக்கு கெடு விதிக்க முடியாது. ஆனால் அதிமுக சட்ட விதிகளின்படி கால அவகாசம் கொடுக்காமல் நடவடிக்கை எடுக்க முடியாது.

ஓரணி

அடுத்தது செங்கோட்டையன், ஒன்றிணைந்த அதிமுக என்ற மனநிலையில் உள்ளவர்களை எல்லாம் ஓரணியில் திரட்டுவார். இது என்டிஏ கூட்டணியில் அமித்ஷாவின் வியூகத்திற்கும் ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

பதவி பறிப்பு

செங்கோட்டையன் பதவி பறிப்பை எடப்பாடி பழனிசாமி மட்டுமே தன்னிச்சையாக எடுத்திருக்க முடியாது. ஆனால் நிர்வாகிகளின் கருத்து என்பது வேறு, தொண்டர்களின் கருத்து என்பது வேறு. எப்போதுமே கட்சி என்பது தொண்டர்களால் இயங்குவது. தொண்டர்கள் என்ன விரும்புவார்கள், "நம் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்" என்றுதானே விரும்புவார்கள். ஆட்சிக்கு வர இடைஞ்சலாக இருப்பது எது என்பது ஒவ்வொரு தொண்டனுக்கும் தெரியும்.

எடப்பாடியை நீக்க சொல்லவில்லை

பொதுச் செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை அகற்ற வேண்டும் என்றெல்லாம் அவர் தெரிவிக்கவில்லை. கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்றுதான் சொன்னார். ஒரு கருத்தை சொன்னால் அதை ஏன் செய்ய முடியாது என்பதை கட்சி தலைமை விளக்காமல், கருத்து சொன்னவரை கட்சியில் இருந்து நீக்குகிறார் என்றால் அந்த கருத்தை அவர்கள் ஏற்கவில்லை என்றுதான் அர்த்தம். ஒற்றுமை என்பது ஒரு மந்திரம், அதை உச்சரிப்பதாலேயே நம் தலைமைக்கு ஆபத்து என்பதை எடுத்துக் கொள்ள முடியாது. 2026 ஆம் ஆண்டு தேர்தல் என்பது அதிமுகவுக்கு மட்டுமில்லை, அமித்ஷாவின் வியூகத்திற்கும் முக்கியம். இவ்வாறு தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+