வெறும் சின்னத்துக்கே இத்தனை வெற்றியா.. விஜய்யே களத்தில் இறங்கினால் தெறிதான்.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு
சென்னை: விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் அந்த இயக்கத்தின் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு 77 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனரே இன்னும் விஜய்யே களத்தில் இறங்கினால் எத்தனை வெற்றி கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் ஏங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் புதிதாக பிரிக்கப்பட்டதால் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் மேற்கண்ட 9 மாவட்டங்களுக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டன. இதற்கான வாக்கு எண்ணிக்கையும் நேற்றைய தினம் நடந்தது.

169 பேரில் 77 பேர்
இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட 169 பேரில் 77 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இந்த தகவலை அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். இவர்கள் சுயேச்சையாகவே போட்டியிட்டு 50 சதவீதத்திற்கு மேலானோர் வென்றுள்ளது மற்ற அரசியல் கட்சியினரிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

வார்டு உறுப்பினர்
அதிலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட பிரபு என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். நாம் தமிழர், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு கிடைக்காத ஒரு அங்கீகாரத்தை நடிகர் விஜய் இல்லாமலேயே வெறும் அவரது சின்னத்தை பார்த்தே வாக்களித்துள்ளனர்.

வருமான வரித் துறை
நடிகர் விஜய் தனது படங்களிலும் இசை வெளியீட்டு விழாக்களிலும் அரசியல் பேசுவது வழக்கம். வருமான வரியை முறையாக செலுத்துபவர், யாரும் ஒரு குறை சொல்லாத அளவுக்கு இன்று வரை செயல்பட்டு வருகிறார். அவர் அரசியலுக்கு வந்து பொதுமக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரை போலவே அவரது ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

விஜய்
விஜய் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலேயே போட்டியிட வேண்டும் என அவரது தந்தை விரும்பினார். ஆனால் விஜய்யோ அதற்கான நேரம் வரும் போதுதான் போட்டியிட வேண்டும் என்ற திட்டத்தில் இருந்தார். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே புகைந்து வந்த மோதல் அண்மையில் வெடித்தது. விஜய் மக்கள் இயக்கத்தினர் தனது கொடியைப் பயன்படுத்தி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம் என விஜய் அனுமதிக் கொடுத்தார்.

77 பேர்
இதையடுத்து விஜய் மக்கள் இயக்கத்தினர் 169 பேர் போட்டியிட்டு அதில் 77 பேர் அதாவது இயக்கம் சார்பில் போட்டியிட்ட மொத்தத்தில் 50 சதவீதத்திற்கும் வெற்றிக் கனியை சுவைத்துள்ளனர். வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் கால் பதிக்கலாம் என காத்திருக்கும் விஜய் இந்த உள்ளாட்சித் தேர்தலில் தனக்கான செல்வாக்கு எப்படியிருக்கிறது என்பதை ஆழம் பார்த்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் வெறும் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியை பயன்படுத்தியே இத்தனை வெற்றி பெற்ற நிலையில் விஜய் மட்டும் நேரடி அரசியலுக்கு வந்தால் எல்லாமே வெற்றிதான் என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications