ச்சே.. "மிஸ் பண்றாரா" எடப்பாடி.. ஏங்க, திமுக கிட்ட போகாதீங்க.. ஒரே போடு.. "முளைத்த" மேட்டர்.. இதுவேற
திமுக தொடர்பாக புகார் அளிப்பதற்கு சிவி சண்முகத்திடம் மறுப்பு தெரிவித்துள்ளாராம் எடப்பாடி பழனிசாமி
சென்னை: வரப்போகும் இடைத்தேர்தலில், எப்படியாவது மாஸ் வெற்றியை பெற்றாக வேண்டும் என்று திமுக தரப்பு ஆர்வம் காட்டி வரும்நிலையில், அதிமுக தரப்பிலோ அதற்கு செக் வைக்கும் வகையில் ஒரு மேட்டர் சிக்கி உள்ளதாம். என்ன அது?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 4 முனைப்போட்டி எழுந்துள்ளது.. இதில் எதிர்க்கட்சிகளை டெபாசிட் வாங்காமல் செய்ய வேண்டும் என்று திமுகவும், மெஜாரிட்டி வாக்கு சதவீதத்தை எட்டிப்பிடித்து விட வேண்டும் என்று திமுகவும் மும்முரமாகி உள்ளன.
இதற்காக சில "தாராளங்களையும்" இரு கட்சிகளுமே தொகுதிக்குள் உலாவ விட்டுள்ளதாக தெரிகிறது.. இது சம்பந்தமான உறுதிப்படுத்தப்படாத தகவல்களும், வீடியோக்களும் இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

IAS சுப்பையன்
இந்நிலையில், ஒரு தகவல் ஒன்று பிரத்யேகமாக நமக்கு கிடைத்துள்ளது.. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடப்பதால் ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.. இப்படி இருக்கும்போது, ஆவின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், பால்வளத்துறையின் கமிஷனராகவும் இருக்கும் சுப்பையன் ஐ.ஏ.எஸ்., ஈரோடு மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்றும் 500 குடும்பத்தினருக்கு அகவிலைப்படி உயர்வை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த 10-ந்தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஈரோடு ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் 500 பேர் 1000 ரூபாய் முதல் 4000 வரை பணப்பலன் பெறுவர்.

சிக்கிய மேட்டர்
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, இப்படிப்பட்ட பணபலன் அறிவிப்புகளை வெளியிடுவது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய குற்றமாகும். நடத்தை விதிகள் மீறப்பட்டால், தேர்தலையே ரத்து செய்யும் அதிகாரம் தமிழ்நாடு தேர்தல் ஆணைய தலைமை அதிகாரிக்கு உண்டு. அந்த வகையில், இந்த உத்தரவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தைதான் தற்போது அதிமுக கையிலெடுத்துள்ளதாம்.. அதிமுகவின் முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் இது தொடர்பான விபரங்கள் தரப்பட்டுள்ளன. இதனை மையப்படுத்தி, தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுக்கலாமா? என்று யோசனையையும் முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது.

ஷாக் ஷண்முகம்
ஏற்கனவே, திமுக மீதான புகாரை டெல்லி வரை கொண்டு சென்றவர் சிவி சண்முகம்.. ஈரோடு இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் கடந்த வாரம் சிவி சண்முகம் புகார் மனு ஒன்றை அளித்திருந்த நிலையில், இப்போது இந்த விவகாரமும் சிக்கி உள்ளதால், எடப்பாடி பழனிசாமியிடம் சி.வி.சண்முகம் இதுகுறித்து விவாதித்துள்ளதாகவும் தெரிகிறது.. அதற்கு எடப்பாடியோ, "இதில் அவசரம் காட்ட வேண்டாம்.. யோசித்து முடிவெடுக்கலாம்" என்று மட்டும் சொல்லியுள்ளாராம். ஆனால், எடப்பாடியின் இந்த பதில், சண்முகத்தை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறதாம்.

மீண்டும் மீண்டும் செலவு
இது குறித்து அதிமுக தரப்பில் நாம் விசாரித்தபோது, "தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும் வகையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒரு புகாரை கொடுத்தால் நிச்சயம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். அல்லது முறையான பதில் சொல்லியாக வேண்டும். இந்த விவகாரத்தில் புகார் கொடுக்க அதிமுகவிடம் ஆதாரங்கள் இருக்கிறது. அந்த ஆதாரங்களின் அடிப்படையில் தேர்தலை ரத்து செய்ய முடியும். ஆனால், தேர்தல் ரத்து செய்யப்படுவதை எடப்பாடி உள்ளிட்ட சில மாஜிக்கள் விரும்பவில்லை.

மிஸ்ஸாயிருச்சோ
காரணம், இந்த தேர்தலை பொறுத்தவரை வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ தனது ஆளுமையை அதிமுகவில் நிலைநிறுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகத்தான் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதற்காக, அதிமுக தரப்பிலிருந்தும் ஏகப்பட்ட கோடிகள் தேர்தல் களத்தில் இறைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ரத்தானால் அந்த கோடிகளெல்லாம் வீணாகிவிடும்.. தேர்தல் ரத்து செய்யப்பட்டு , சில மாதங்கள் கழித்து மறுபடியும் தேர்தல் நடந்தால், மறுபடியும் செலவு செய்ய வேண்டுமே என்கிற கவலை எடப்பாடிக்கு இருக்கிறது. அதனால்தான், புகார் கொடுக்கலாமா? என்று சி.வி.சண்முகம் கேட்டதற்கு யோசித்து முடிவெடுக்கலாம் என்று மட்டும் சொல்லி உள்ளார் எடப்பாடி. அவர் அப்படி சொன்னதற்கான பின்னணிஇதுதான்! " என்கிறார்கள் அதிமுக மாஜிக்கள்...!!












Click it and Unblock the Notifications