"பச்சை சிக்னல்" வந்தாச்சு போல.. நெருங்கும் "பஞ்ச தந்திரம்".. எடப்பாடி என்ன செய்ய போகிறார்.. திமுக குஷி
எடப்பாடி பழனிசாமி நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெறுவாரா என்ற ஆர்வம் எழுந்துள்ளது
சென்னை: எடப்பாடி பழனிசாமியை சுற்றி நெருக்கடிகள் நெருங்கி வரும் நிலையில், அதை அவர் எப்படி கையாள்வார் என்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் வெடித்து வருகிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டாலும், எந்த நேரம் என்ன பிரச்சனை வருமோ என்ற கலக்கம் சூழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ்ஸின் கோரிக்கையை தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டு விட்டால் என்னாவது? இலை முடக்கப்பட்டு விட்டால் என்னாவது? என்ற சிக்கல்களை பற்றியும் எடப்பாடி யோசிக்காமல் இல்லை.

எடப்பாடி செக்
இதனிடையே, எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களுக்கு நெருக்கமான ஒப்பந்ததார்கள் வீடுகளில் தொடர்ந்து நடைபெறும் வருமான வரி சோதனைகள், குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிபிஐ கோரிய அனுமதி உள்ளிட்டவைகள் எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் தலைவலியையும் ஏற்படுத்தி வருவதை மறுக்க முடியாது.. அதனால்தான், டெல்லியில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க திட்டமிட்டிருந்தார் எடப்பாடி.

எடப்பாடி சுளீர்
இதற்காக நேரமும் கேட்கப்பட்டிருந்த நிலையில், பாஜக தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததால், குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமலேயே சென்னை திரும்பிவிட்டார்.. எடப்பாடி பக்கம் மெஜாரிட்டி அதிமுக இருக்கும் ஒரே காரணத்துக்காக, பாஜக மேலிடம் சற்று அமைதி காப்பதாக கூறப்படுகிறது.. அதேசமயம், தன்பிடியில் எடப்பாடியை வைத்திருக்கணும், சில முன்னெடுப்புகளையும் எடுத்திருப்பதாக சில தகவல்கள் அரசியல் களத்தை வட்டமடித்து கொண்டிருக்கின்றன..

மசுவு எகிறியது
முதலாவதாக, டெல்லி மேலிட தலைவர்கள் சிலர், ஓபிஎஸ்க்கு போன் செய்து, தங்களுடைய ஆதரவை தெரிவித்தார்களாம்.. பாஜகவுக்கு ஆதரவானவர் ஓபிஎஸ் என்றாலும், எடப்பாடிக்கு பெருகியுள்ள மவுசு காரணமாகவும், எம்பி தேர்தல் நெருங்கி வருதாலும், ஓபிஎஸ்ஸுக்கு வழக்கம்போல் ஆதரவை தர முன்வருமா என்ற சந்தேகம் எழுந்தபடியே இருந்தது.. ஆனால், அளவுக்கு அதிகமாக எடப்பாடிக்கு பெருகி வரும் ஆபத்துதான், பாஜகவுக்கு நெருடலாகி உள்ளதாகவும், அதனாலேயே அவருக்கு செக் வைக்கும் முயற்சிகளை கையில் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.. அதன் முதல்படியாக, ஓபிஎஸ்ஸுக்கு போன் செய்து சில தலைவர்கள் ஆதரவை தந்தார்களாம்.

ரோல் - திமுக
இரண்டாவதாக, எடப்பாடிக்கு சிக்கல் உண்டுபண்ணும் விதமாக, திமுகவின் ரோலும் இதில் இருப்பதாக சொல்கிறார்கள்.. எடப்பாடிக்கு ஆதரவு கூடிய நிலையில்தான், குட்கா விவகாரத்தையும் மேலிடம், தூசி தட்டி, சமயம் பார்த்து திமுக தரப்புக்கு பச்சை கொடி காட்டியதாக சொல்கிறார்கள்.. ஒருவேளை குட்கா விஷயத்தில் யாரேனும் கைதானால், அதைவைத்து, அடுத்தடுத்த முன்னாள்களை கைது செய்யலாம் என்று திமுக தரப்பும் கணக்கு போடுகிறதாம்.. அதேசமயம், இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் விமர்சித்துவிட முடியாது.. காரணம், இதை சிபிஐ-யே கையில் எடுத்துள்ளதால், அந்த பழியும் ஆளும் தரப்பு மீது விழ வாய்ப்பில்லை..

இலை என்னாகும்?
இதற்கு அடுத்தபடியாக, தேர்தல் ஆணையம், நிச்சயம் சின்னத்தை முடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.. ஆரம்பத்தில் இருந்தே ஓபிஎஸ் பெரிதும் நம்பிக் கொண்டிருப்பது, தேர்தல் ஆணையத்தையும் நீதிமன்றங்களையும்தான்.. கடந்த மாதம், எடப்பாடிக்கு ஆதரவாக ஒருசில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும், ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான முடிவுகளை இனி எடுக்கவும் வாய்ப்பு உள்ளதாம்.. இலையை முடக்கிவிட்டால் என்னாவது என்ற கவலைதான் இப்போதைக்கு எடப்பாடியை சூழ்ந்து கொண்டுள்ளது.. அப்படி இரட்டை இலை முடக்கப்பட்டால், ஓபிஎஸ் கை ஓங்கும் என்கிறார்கள்.

டிடிவி தினகரன்
நான்காவதாக, சசிகலா - ஓபிஎஸ் இடையே இணக்கமான சூழல் நெருங்கி வருவதாக தெரிகிறது.. அதற்கான வேலைகளை சில சீனியர்கள் செய்து கொண்டிருக்கிறார்களாம்.. எடப்பாடிக்கான நெருக்கடிகள்கூடி, கட்சியை கைப்பற்றும் சூழல் ஏற்பட்டால், பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டு, ஓபிஎஸ்ஸும், தினகரனும் சேர்ந்து கட்சியை நடத்தும் நிலைமையும் வரலாம் என்கிறார்கள்..

சிபிஐ + திமுக
இறுதியாக, ஓபிஎஸ் + திமுக + மேலிடம் + சிபிஐ + தேர்தல் ஆணையம் + சசிகலா என அனைத்து வகையிலும் எடப்பாடிக்கு நெருக்கடிகள் ஒரே சமயத்தில் கூடி உள்ளதால், இதை எப்படி எடப்பாடி சமாளிப்பார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புதான், தமிழக அரசியலில் ஓடிக் கொண்டிருக்கிறது.. ஒரு அளவுக்கு மேல் டெல்லியை பகைத்து கொள்ள முடியாத நிலையில், எடப்பாடி என்ன செய்ய போகிறார்? வழக்கம்போல், இந்த நெருக்கடியையும் சமாளித்து தன் ஆளுமையை நிரூபிப்பாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்..!
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications